Dinamalar Court News

தினமலர் – கோர்ட் செய்திகள்

 • புயல் பாதிப்பு: மத்திய அரசுக்கு நோட்டீஸ்
  on December 15, 2017 at 8:53 am

  மதுரை: ஒக்கி புயல் பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க கோரி மதுரை ஐகோர்ட் கிளையில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த கோர்ட், இந்த விவகாரத்தில் ஏன் இன்னும் முடிவு எடுக்கவில்லை என விளக்கம் அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப ... […]

 • சசிகலா கணவர் நடராஜனுக்கு ஜாமின்
  on December 15, 2017 at 7:01 am

  புதுடில்லி: சொகுசு கார் வழக்கில் சசிகலா கணவர் நடராஜன், பாஸ்கரன் உள்ளிட்ட 4 பேருக்கு வழங்கப்பட்ட 2 வருட சிறை தண்டனையை சென்னை ஐகோர்ட் உறுதி செய்துள்ளது.இந்நிலையில், இந்த வழக்கில் 4 பேருக்கும் ஜாமின் வழங்கியுள்ள சுப்ரீம் கோர்ட், விசாரணை கோர்ட்டில் சரணடைந்து ரூ.25 லட்சம் பிணைத்தொகையாக செலுத்தி ... […]

 • அரசின் நலத்திட்டங்களுடன் ஆதாரை இணைக்க அவகாசம்
  on December 15, 2017 at 5:44 am

  புதுடில்லி: அரசின் நலத்திட்டங்களை பெறவும், மொபைல், பான், வங்கி கணக்குடன் ஆதாரை இணைக்க 2018 மார்ச் 31 வரை அவகாசம் அளித்த மத்திய அரசின் உத்தரவை சுப்ரீம் கோர்ட் ஏற்றுக் கொண்டது.ஆதாரைக் கட்டாயமாக்குவது தொடர்பான வழக்கை, தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய ... […]

 • சீட்டு பணம் மோசடி:குடும்பத்துக்கு சிறை
  on December 15, 2017 at 1:41 am

  திருப்பூர்:பல லட்சம் ரூபாய் சீட்டு பணத்தை மோசடி செய்த குடும்பத்துக்கு, திருப்பூர் கோர்ட் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டது.பல்லடம், கணபதிபாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி, 80. அதே பகுதியை சேர்ந்த பழனிசாமி, 74. அவர் மனைவி பாலாமணி, மகன் தனபால் ஆகியோர், "தங்களிடம் சீட்டு சேர்ந்தால் அதிக லாபம் பெறலாம்,' ... […]

 • உம்மன் சாண்டிக்கு தண்டனை : கோவையில் சரிதா நாயர் உறுதி
  on December 15, 2017 at 12:31 am

  கோவை: ''சோலார் பேனல் மோசடி வழக்கில், கேரள முன்னாள் முதல்வர், உம்மன் சாண்டிக்கு தண்டனை கிடைக்கும்,'' என, சரிதா நாயர் கூறினார்.கோவையில் சோலார் பேனல் மோசடி தொடர்பான வழக்கில், சரிதா நாயர், முன்னாள் கணவர், பிஜு ராதாகிருஷ்ணன், 55, மேலாளர், ரவி, 45, ஆகியோர், 2010ல் கைது செய்யப்பட்டனர்.கோவை ஜே.எம் கோர்ட்டில், சாட்சி ... […]

 • வெளிமாநிலங்களுக்கு இடம் பெயரும் தொழிலாளர்கள் நலனிற்கு செயல் திட்டம் : அறிக்கை தர உயர்நீதிமன்றம் உத்தரவு
  on December 14, 2017 at 11:46 pm

  மதுரை: வெளிமாநிலங்களுக்கு இடம்பெயரும் தொழிலாளர்களின் நலனிற்காகஒருங்கிணைந்த செயல்திட்டம் உருவாக்கியது குறித்து, அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.நிலக்கோட்டை சவுந்திரபுரம் ஆறுமுகம் தாக்கல் செய்த ஆட்கொணர்வு ... […]

 • ரூ.200 லஞ்ச வழக்கில் உதவியாளருக்கு 2 ஆண்டு சிறை
  on December 14, 2017 at 11:43 pm

  சேலம்: சேலம், ஏற்காட்டை சேர்ந்தவர் காமராஜ், 40, தாயின் இறப்பு சான்றிதழ் நகல் கேட்டு, தாலுகா அலுவலகத்தில், 2010ல் விண்ணப்பித்தார். அங்கு இளநிலை உதவியாளராக பணிபுரிந்த ஏழுமலை, 56, லஞ்சமாக, 200 ரூபாய் கேட்டுள்ளார். காமராஜ், சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.அவர்களது ஆலோசனை படி, ரசாயன பவுடர் தடவிய ... […]

 • ஆதார் எண் கட்டாயமா : இன்று இடைக்கால தீர்ப்பு
  on December 14, 2017 at 11:39 pm

  புதுடில்லி: பல்வேறு அரசு திட்டங்களுக்கு ஆதார் எண்ணைக் குறிப்பிடுவதை கட்டாயமாக்கும் மத்திய அரசின் உத்தரவுகளை எதிர்க்கும் வழக்கில், இன்று இடைக்கால தீர்ப்பு வழங்குவதாக, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.பல்வேறு அரசு திட்டங்களின் பலனைப் பெறுவதற்கும், மானியங்களைப் பெறுவதற்கும், ஆதார் எண்ணைக் ... […]

 • பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்குஏன் இட ஒதுக்கீடு கூடாது: ஐகோர்ட்
  on December 14, 2017 at 11:39 pm

  சென்னை,: 'முன்னேறிய வகுப்பினரில், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு, ஏன் இட ஒதுக்கீடு வழங்க கூடாது' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.அரசு மருத்துவ கல்லுாரிகளில், பொதுப் பிரிவினருக்கான இடங்களை, பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு மாற்றுவதற்கு ... […]

 • பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு ஏன் இட ஒதுக்கீடு கூடாது?: ஐகோர்ட்
  on December 14, 2017 at 8:41 pm

  சென்னை: 'முன்னேறிய வகுப்பின ரில், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு, ஏன் இட ஒதுக்கீடு வழங்க கூடாது' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.அரசு மருத்துவ கல்லுாரிகளில், பொதுப் பிரிவினருக்கான இடங்களை, பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு மாற்றுவதற்கு ... […]

 • வேட்பாளர்களுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
  on December 14, 2017 at 8:37 pm

  சென்னை: சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும், தி.மு.க., - அ.தி.மு.க., வேட்பாளர்களை, தகுதி நீக்கம் செய்யக் கோரி, தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர், சத்தியமூர்த்தி தாக்கல் செய்த மனு:ஏற்கனவே, இங்கு ... […]

 • தலித் மாணவி கொலையில் அசாம் தொழிலாளிக்கு தூக்கு
  on December 14, 2017 at 7:29 pm

  கொச்சி: கேரளாவில், தலித் சமூகத்தைச் சேர்ந்த, சட்டக் கல்லுாரி மாணவியை, பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்த வழக்கில், அசாமைச் சேர்ந்த கூலித்தொழிலாளிக்கு, துாக்கு தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி அமைந்துள்ளது. கொச்சி அருகே, ... […]

 • தமிழகம் உட்பட, 11 மாநிலங்களில் சிறப்பு கோர்ட்டிற்கு... அனுமதி! எம்.பி., - எம்.எல்.ஏ., மீதான வழக்குகளை விசாரிக்க ஏற்பாடு
  on December 14, 2017 at 5:32 pm

  புதுடில்லி : எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்க, தமிழகம் உட்பட, 11 மாநிலங்களில் விரைவு நீதிமன்றங்களை அமைக்க, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கடந்த, 2014ல் இருந்து, 1,600 வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அவற்றை ஓராண்டில் முடிக்கவும், உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. இந்த ... […]

Leave a Reply