Dinamalar World News

தினமலர் – உலக செய்திகள்

 • பாக்., பிரதமர் பேச்சுக்கு ஐ.நா.,வில் இந்தியா சவுக்கடி!
  on September 23, 2017 at 12:00 am

  நியூயார்க்: ஐ.நா., சபையில், பாகிஸ்தான் பிரதமரின் பேச்சுக்கு, இந்தியா சரியான சவுக்கடி கொடுத்துள்ளது.'டெரரிஸ்தானாக' மாறியுள்ள பாகிஸ்தானில், பயங்கரவாதிகளை ஏற்றுமதி செய்யும் தொழில், மிகவும் சிறப்பாக நடக்கிறது என்றும், பகிரங்கமாக குற்றஞ்சாட்டி உள்ளது. அமெரிக்காவின், நியூயார்க் நகரில், ஐ.நா., சபையின் ஆண்டு பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் பேசிய, பாக்., பிரதமர், ஷாகித் கஹான் அப்பாஸி, 'பாக்., மீது, இந்தியா மறைமுகப் போரை தொடுத்து வருகிறது. 'பயங்கரவாதத்தை எதிர்க்கும் வகையில், அதிகளவு செலவிடும் பாக்., மீது, பொய் புகார்கள் கூறப்படுகின்றன. எங்கள் நாடு, ... […]

 • 'மாஜி' பிரதமர் நவாஸ் ஷெரீப் சொத்துக்கள் பறிமுதல்
  on September 23, 2017 at 12:00 am

  லாகூர்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர், நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன; வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.பாக்.,கில், பிரதமர், ஷாகின் கான் அப்பாஸி தலைமையில், பாக்., முஸ்லிம் லீக் கட்சி ஆட்சி நடக்கிறது. பாக்., பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப், வெளிநாட்டில் முறைகேடாக சொத்து குவித்ததாக, எதிர்க்கட்சிகள் வழக்கு தொடர்ந்தன. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், நவாஸ் ஷெரீப்பை தகுதியிழப்பு செய்தது.இதையடுத்து, ஜூலையில், பிரதமர் பதவியில் இருந்து, நவாஸ் ஷெரீப் விலகினார். நவாஸ் ஷெரீப், அவரது மகள், மரியம், ... […]

 • விடாமல் துரத்தும் மரியா புயல் : கரீபியன் தீவுகளில் பலி 25 ஆனது
  on September 23, 2017 at 12:00 am

  சான் ஜூவான்: அட்லாண்டிக் பெருங்கடலில் உருவாகி உள்ள 'மரியா' புயல், கடும் சூறாவளியுடன், கரீபியன் தீவு நாடுகளில் கரையை கடக்கும் என, அமெரிக்க வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. கரீபியன் தீவு நாடான, டொமினிகாவை, 'மரியா' புயல் தாக்கியதில், அந்நாட்டில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. சூறைக்காற்று வீசியதில், பலர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.டொமினிகாவை தொடர்ந்து டர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவுகளை புயல் நேற்று தாக்கியது. மணிக்கு, 205 கி.மீ, வேகத்தில் சூறைக்காற்று வீசியதால் மரங்கள் வேரோடு சாய்ந்தன. ப்யூர்டோ ரிகோ தீவினில் உள்ள அணை ... […]

 • 2100 ம் ஆண்டிற்குள் பூமி அழியும்
  on September 23, 2017 at 12:00 am

  நியூயார்க் : பூமி தனது ஆறாவது பேரழிவை நோக்கி சென்று கொண்டிருப்பதாக அமெரிக்காவை சேர்ந்த டேனியல் என்ற கணித மேதை எச்சரித்துள்ளார். பருவ நிலை மாற்றங்கள், புவி வெப்பமயமாதல் போன்ற காரணங்களினால் 2100 ம் ஆண்டிற்குள் பூமி அழியும் என அவர் கூறியுள்ளார்.இதில் முதலில் கடல் வாழ் உயிரினங்கள் அழியும் என்றும் அதை தொடர்ந்து மற்ற இடங்களுக்கு பேரழிவு தொடரும் என தெரிவித்துள்ளார். இதுவரை ஆர்டோவிசினியன், டெவோனியன், பெர்மியன் - ட்ராயாசிக், ஜுராஸிக், க்ரட்டாசியஸ் எனப்படும் 5 காலகட்டங்களில் உலகில் உள்ள உயிர்கள் 5 பேரழிவுகளைச் சந்தித்திருக்கிறது. இவை பல லட்சம் ஆண்டுகள் ... […]

 • அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ஈரான் ஏவுகணை சோதனை
  on September 23, 2017 at 12:00 am

  டெஹ்ரான்: அமெரிக்காவின் எச்சரிக்கையையும் மீறி, குறுகிய தூரம் சென்று தாக்கும் ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்து பார்த்துள்ளதாக ஈரான் கூறியுள்ளது. ஏவுகணை சோதனை தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகளை அந்நாட்டு டிவிக்கள் வெளியிட்டுள்ளன. அதேநேரத்தில் இந்த சோதனை எப்போது நடந்தது என கூறப்படவில்லை.ஏவுகணை சோதனை நடத்தினால், பொருளாதார தடை விதிப்போம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் ... […]

 • அமெரிக்காவில் இந்திய அறுசுவை உணவு
  on September 19, 2017 at 12:00 am

  அமெரிக்கா, மன்ஹாட்டன் நகரில் அமைந்துள்ள இந்திய பாரம்பரிய உணவு விடுதியான தர்பார், பல்வேறு வகையான இந்திய சைவ உணவு வகைகள், சிற்றுண்டிகள், தந்தூரி ரகங்கள், அசைவ உணவு வகைகள், பல்வேறு சாத வகைகள், சூப், ஐஸ்கிரீம், ஊறுகாய், அப்பளம் போன்றவை கிடைக்கும்.முகவரி: 152 ஈ 46வது தெரு, மிட் டவுன், மன்ஹாட்டன், நியூயார்க்போன்: (212) 681- 4500திறந்திருக்கும் நேரம்: பகல் 11:30 முதல் இரவு 11:30 உணவு வகைள் ( MENU) மதிய உணவு ( LUNCH)மதிய உணவுடன் நான் வழங்கப்படும் ( All lunch boxes are served with a Naan bread.)மதிய உணவு 1: ... […]

Leave a Reply