Login

Lost your password?
Don't have an account? Sign Up

Dinakaran Tamil News Paper-Logo Dinakaran Tamil Newspaper, Tamilnadu Tamil News Dinakaran Tamilnadu Tamil News
  • காவல்துறை அதிகாரிகள் கூட்டம் போலீசாருக்கு ஈகோ, ஆணவம் கூடாது: செங்கை எஸ்பி அறிவுறுத்தல்
    on July 9, 2020 at 12:23 am

    மதுராந்தகம்: மதுராந்தகத்தில் நடந்த காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தில் போலீசாருக்கு ஈகோ, ஆணவம் கூடாது. பொதுமக்கள், வியாபாரிகளிடம் கனிவாக நடந்துக்கொள்ள வேண்டும் என எஸ்பி கண்ணன் கூறினார். மதுராந்தகம் உட்கோட்டத்துக்கு உட்பட்ட காவல்துறை அதிகாரிகள் கூட்டம் நடந்தது. அதில் எஸ்பி கண்ணன் கலந்து கொண்டு, போலீசார், பொதுமக்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என அறிவுரைகள் வழங்கினார். அப்போது, அவர் பேசியதாவது, போலீசாருக்கு ஈகோ, ஆணவம் கூடாது. போலீசார் வானத்தில் இருந்து குதிக்கவில்லை. நாம் மக்களின் காவலர்கள். பொதுமக்கள் இந்த இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ, ஏட்டு மிகவும் நல்லவர்கள் என கூற வேண்டும். பொதுமக்களிடம் உங்களின் நடவடிக்கையை மாற்றி கொள்ள வேண்டும்.நீங்கள் வாகன தணிக்கையில் ஈடுபடும்போது, பொதுமக்களிடம் கனிவாக பேசுங்கள். நீங்கள் பிடிக்கும் வண்டி, உங்களுக்கு 100வது வண்டியாக இருக்கும். ஆனால், அவர்களுக்கு அது ஒரே வண்டி.  எனவே, அவர்களிடம் தற்போதைய சூழ்நிலையை விளக்கி கூறினால், அவர் புரிந்து கொள்வார். மீண்டும் தவறு செய்ய மாட்டார்கள். இதேபோன்று, கடைகளிலோ அல்லது பெரிய வணிக நிறுவனங்களிலோ, கண்டிப்பாக சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என அன்போடு அறிவுறுத்துங்கள். அதே நேரத்தில், நீங்களும் மிக கவனமாக இருக்க வேண்டும். உங்களின் உடல்நிலையை பார்த்து கொள்ளுங்கள். நீங்கள், உங்கள் குடும்பத்திற்கு மிக மிக முக்கியம். உங்கள் குடும்பத்தினரையும் நல்ல சத்தான உணவுகளை சாப்பிட சொல்லி, அவர்களும் தங்களை தாங்களே தற்காத்து கொள்ள செய்யுங்கள். உங்களுக்கு ஏதேனும் குறைகள் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்’ என்றார். கூட்டத்தில் மதுராந்தகம் டிஎஸ்பி மகேந்திரன், இன்ஸ்பெக்டர்கள் மதுராந்தகம் ருக்மாங்கதன், அச்சிறுப்பாக்கம் சரவணன், மதுராந்தகம் டிராபிக் ஆனந்தராஜ் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர். அப்போது, அவர்களுக்கு உடல் வெப்பம் பரிசோதனை செய்து, கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.* வியாபாரிகளுக்கு அறிவுறுத்தல்செங்கல்பட்டில் ஆட்டோ, காய்கறி, வியாபாரி சங்கத்தினருடன் எஸ்பி ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போது அவர் கூறுகையில், அரசு ஒருசில தளர்வுகளோடு காலை 6 மணிமுதல் மாலை 6 மணிவரை வியாபாரம் செய்ய வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நேரத்தில் நீங்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கடைகளில் கிருமிநாசினி தெளித்து சுகாதாரமாக இருக்க வேண்டும். முகக்கவசம் அணியாமல், சமூக இடைவெளி கடைபிடிக்காதவர்களுக்கு பொருட்கள் வழங்க வேண்டாம். உங்களுக்கு போலீசார் தொல்லை கொடுத்தால், என்னை எந்த நேரத்திலும் தொடர்பு கொண்டு, உங்கள் குறையை சொல்லலாம். உங்கள் குறையை, நான் தீர்த்து வைக்கிறேன். அரசு உத்தரவை மீறாமல் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடியுங்கள். அப்போதுதான் கொரோனா என்ற கொடிய நோயை எதிர்கொள்ள முடியும் என்றார்.

  • பூட்டியே கிடப்பதால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய கால்நடைத்துறை துணை இயக்குனர் அலுவலகம்: போளிவாக்கத்தில் அரசு பணம் ரூ.75 லட்சம் வீண்
    on July 9, 2020 at 12:23 am

    திருவள்ளூர்:  திருவள்ளூர் அருகே போளிவாக்கம் ஊராட்சியில், கால்நடைத் துறை துணை இயக்குனர் அலுவலகம் பூட்டியே கிடப்பதால், சமூக விரோதிகளின் புகலிடமாகவும், மது அருந்தும் பார் ஆகவும் மாறியுள்ளது. கடம்பத்தூர் ஒன்றியத்தில் உள்ளது போளிவாக்கம் ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதூர் மாநில நெடுஞ்சாலையில், கால்நடைத் துறைக்கு சொந்தமான கோழி விரிவாக்க நிலையம் உள்ளது. கடந்த, 2002-03ம் ஆண்டு வறட்சி நிவாரணப் பணி திட்டத்தின் கீழ் இங்கு, கோழி விரிவாக்க நிலையத்துடன், கோழிகளை பராமரிக்க காற்றோட்டத்துடன் கூடிய தனி கட்டிடமும், தீவனப் புல் பண்ணையும் அமைக்கப்பட்டது.துவக்கத்தில் இயங்கிய இந்த நிலையம், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் எவ்வித அறிவிப்பும் இன்றி மூடப்பட்டது. இந்நிலையில், அங்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் பல லட்சம் மதிப்பில் கால்நடைத்துறை துணை இயக்குனர் அலுவலகம், நவீன வசதிகளுடன் கட்டி திறக்கப்பட்டது. ஆனால், கட்டிடத்திற்கு சுற்றுச்சவர் இல்லாத நிலையில், அலுவலகமும் திறக்கப்படாமல் பூட்டியே கிடப்பதால், இரவு நேரங்களில் இங்கு சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாவும், குடிமகன்கள் ‘’பார்’’ ஆக பயன்படுத்துவதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். பராமரிப்பு இல்லாமல் மூடிக் கிடப்பதால், அலுவலகத்தை சுற்றிலும், செடி, கொடிகள் வளர்ந்து, பண்ணை இருக்கும் இடம் தெரியாமல் மூடிக் கிடக்கிறது. அலுவலக ஜன்னல்களும் உடைக்கப்பட்டு உள்ளன. இதனால் அரசு திட்டம் வீணாகி உள்ளது. தற்போது கிராமங்களில், வீடுகள்தோறும் நாட்டுக் கோழிகளை மக்கள் வளர்த்து வருகின்றனர். இதன் மூலம் முட்டைகளை அடை வைத்து கோழிகளின் இனப்பெருக்கத்தை அதிகரித்து வருகின்றனர். மேலும், நாட்டுக் கோழி முட்டைகளை ஒரு முட்டை, ஐந்து முதல், ஆறு ரூபாய் வரை விற்று குடும்ப செலவுகளை சரிசெய்து வருகின்றனர்.கோழி விரிவாக்க நிலையம் உள்ள பகுதியில், காலியாக உள்ள இடத்தில், தீவனப்புல் வளர்க்கப்பட்டு வந்தது. இந்த புற்களை சிகிச்சைக்கு வரும் கால்நடைகள் சாப்பிட்டு வந்தன. அதோடு, கால்நடைகள் வைத்துள்ள விவசாயிகளுக்கு, தீவனப்புல் வளர்க்கும் முறை, புல் ரகங்கள் குறித்து செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டு வந்தது. தற்போது அதுவும் கிடையாது. எனவே, போளிவாக்கம் ஊராட்சியில் உள்ள கால்நடைத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவரவும், தீவன புல் பண்ணையை பயன்பாட்டுக்கு கொண்டுவரவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • குன்றத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வேலை பளுவால் கொரோனா அறிகுறியுடன் பணியாற்றும் ஊழியர்கள்: சக பணியாளர்கள் அச்சம்
    on July 9, 2020 at 12:23 am

    ஸ்ரீபெரும்புதூர்: குன்றத்தூர் ஒன்றியம் படப்பை ஊராட்சியில் குன்றத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகம் இயங்குகிறது. இங்கு 2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் பாணியில் உள்ளனர். வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் வட்டார வேளாண் உதவி இயக்குனர் அலுவலகம், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் அலுவலகம், தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகம், அனைவருக்கும் கல்வி இயக்கக அலுவலகம், மாற்றுத் திறனாளிகள் பயிற்சி பள்ளி, வட்டார கல்வி அலுவலகம், இ சேவை மையம் உள்பட பல்வேறு அலுவலகங்கள் செயல்படுகின்றன.இதையொட்டி, குன்றத்தூர் ஒன்றியத்தில் உள்ள 42 ஊராட்சிகளை சேர்ந்த மக்கள் பல்வேறு தேவைகளுக்காக இங்கு தினமும் வந்து செல்கின்றனர். தற்போது கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதனால் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் குறைந்த ஊழியர்களை கொண்டு பணிகள் நடக்கின்றன. கடந்த 2 வாரங்களுக்கு முன் துணை வட்டார வளர்ச்சி அலுவலருக்கு கொரோனா உறுதியானது. மேலும் வட்டார வளர்ச்சி அலுவலர் விடுப்பில் சென்றுவிட்டார். கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஊரக வளர்ச்சி துறையினருக்கு அதிக பங்குள்ளது. இதனால் பணிகள் பாதிக்கப்படாமல் இருக்க, ஊழியர்கள் கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதில், ஒரு சில ஊழியர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ள நிலையிலும், பணி சுமை காரணமாக, தினமும் வந்து செல்கின்றனர். இதனால் ஊழியர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

  • 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
    on July 9, 2020 at 12:23 am

    காஞ்சிபுரம்: கொரோனா தொற்றால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அசாதாரண சூழலிலும் பொதுமக்களின் உயிர்காக்கும் பணியில் ஈடுபடும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆம்புலன்ஸ் சேவை ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனத்திடம் வழங்கப்பட்டாலும், பராமரிப்புக்கான செலவை தமிழக அரசே செய்து வருகிறது.ஆனால், 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு தமிழக அரசு வழங்கிய விடுப்புக்கான தொகையை ஆம்புலன்ஸ் நிர்வாகம் வழங்கவில்லை. மேலும், கரூர் மாவட்டத்தில் நடந்த ரேடியேட்டர் ஊழலை மறைக்க, தொழிலாளர்களுக்கு சட்டவிரோதமாக இறுதி விளக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்க நிர்வாகி ராமராஜன் தலைமை தாங்கினார். நிர்வாகி புண்ணியகோட்டி முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் பிரேம்குமார், ராஜேஷ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். பெற்றது. மேலும் சட்டப்படியான உள்விசாரணை எதுவும் மேற்கொள்ளாமல் சட்டவிரோதமாக தொழிலாளர்கள பணியிடமாற்றம் செய்வதை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மதுராந்தகம்: மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனை அருகே 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சமூக இடைவெளியுடன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 20க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அப்போது, சம்பளத்துடன் கூடிய விடுப்பு, சொந்த மாவட்டத்தில் பணி, கொரோனா பாதுகாப்பு சாதனங்கள் வழங்குதல், வாரத்தில் 2 நாள் விடுமுறை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற மதுராந்தகம் போலீசார், அவர்களது கோரிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு அதிகாரிகளுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

  • மாவட்டத்தில் ஒரே நாளில் 308 பேருக்கு தொற்று: பலி எண்ணிக்கை 111 ஆக உயர்வு
    on July 9, 2020 at 12:23 am

    திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை, 5,199 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில், நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் ஆவடி மாநகராட்சி, பூந்தமல்லி, திருவேற்காடு, திருவள்ளூர், திருத்தணி நகராட்சிகள், திருநின்றவூர் பேரூராட்சி மற்றும் சில ஒன்றியங்களில் 308 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதையடுத்து 308 பேரும் சிகிச்சைக்காக திருவள்ளூர், பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டனர். அவர்களது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இதோடு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,507 ஆக உயர்ந்துள்ளது. இதில், நேற்று ஒரே நாளில் மட்டும் 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதையடுத்து மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 105ல் இருந்து 111 ஆக உயர்ந்துள்ளது. இதனால் மாவட்ட மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். மாவட்டத்தில் இதுவரை, 3,457 பேர் சிகிச்சை முடிந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மற்ற 1,939 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

  • 2 போலீசாருக்கு கொரோனா தொற்று திருவள்ளூர் தாலுகா காவல் நிலையம் மூடல்
    on July 9, 2020 at 12:23 am

    திருவள்ளூர்: திருவள்ளூர் தாலுகா போலீஸ் நிலையத்தில், இன்ஸ்பெக்டர், எஸ்ஐக்கள், போலீசார் உட்பட 38 பேர் பணியில் உள்ளனர். இதில், ரைட்டர் மற்றும் தனிப்பிரிவு ஏட்டு ஆகியோருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் மற்ற போலீசாருக்கு நேற்று திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதன் முடிவுகள்  தெரியவில்லை.இதையடுத்து மாவட்ட எஸ்பி அரவிந்தன் உத்தரவின் பேரில், திருவள்ளூர் தாலுகா காவல் நிலையம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. தொடர்ந்து, போலீஸ் நிலைய நுழைவாயில் கேட் மூடப்பட்டு பூட்டு  போடப்பட்டது. போலீசார் மற்றும் பொதுமக்கள் யாரும் போலீஸ் நிலையத்திற்கு வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தற்காலிகமாக டோல்கேட் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் போலீஸ் நிலையம் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் 1,000 பேருக்கு நிவாரணம்
    on July 9, 2020 at 12:23 am

    ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே தாமரைப்பாக்கம் கூட்டு சாலையில் எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் ஏழை - எளிய மக்களுக்கு கொரோனா நிவாரண நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில், எல்லாபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆ.சத்தியவேலு தலைமை தாங்கினார். அவைத்தலைவர் வெங்கல் ஜி.பாஸ்கரன், மாவட்ட பிரதிநிதி டி.பாஸ்கர், நிர்வாகிகள் டி.முரளி, சீனிவாசன், டி.கே.முனிவேல், முருகன், கோடுவெளி குமார்,  மா.கம்யூ.சம்பத், மதிமுக வெங்கடேசன், விசிக பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி, 1,000 பேருக்கு தலா 5 கிலோ அரிசி, காய்கறிகள், 2 முட்டை, பிஸ்கட் ஆகியவைகளை வழங்கி சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

  • மகளிர் சுயஉதவி குழுவில் 16 பேருக்கு நிதி உதவி
    on July 9, 2020 at 12:23 am

    பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய அத்திப்பட்டு முதல்நிலை ஊராட்சியில் ஊரக புத்தாக்க திட்டத்தின் மூலம் ஊரக தொழில்களை மேம்படுத்த அத்திப்பட்டு ஊராட்சியில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அதில் உள்ள 16 பேருக்கு ரூ.5,25000 கடனாக வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி வடிவேல், துணைத் தலைவர் எம்.டி.ஜி.கதிர்வேல், வார்டு உறுப்பினர் அருள்ஜோதி ஆகியோர் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு காசோலைகளை வழங்கினர்.தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் அலுவலர் கணபதி சங்கரன், மாநில ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர் தேவகி, அத்திப்பட்டு ஊராட்சி அளவிலான மகளிர் கூட்டமைப்பு செயலாளர் விஜயா, ஊராட்சி செயலர் பொற்கொடி ஆகியோர் கலந்து கொண்டனர்.

  • அடுத்தடுத்து கார், மினிவேன் மீது லாரி மோதியதில் ஒருவர் பலி: 3 பேர் படுகாயம்
    on July 9, 2020 at 12:23 am

    ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே கார் மற்றும் மினிவேன் மீது சரக்கு லாரி அடுத்தடுத்து மோதியதால், சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியானார். மேலும், 3 பேர் படுகாயம் அடைந்தனர். பெரியபாளையம் அருகே வெங்கல் கிராமத்தில் வசித்து வருபவர் ராம்குமார் (26). இவர், நேற்று தனது தந்தை தீனதயாளன் (50) என்பவரை ஆரணியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று, மீண்டும் காரில் வீடு திரும்பினார். அப்போது, பெரியபாளையம் அருகே வடமதுரை எம்டிசி நகர் பகுதியில் சென்றபோது எதிரே வந்த சரக்கு லாரி கார் மீது மோதியது. பின்னர், காருக்கு பின்னால் வந்த மினிவேன் மீது மோதியது.இதில், காரில் இருந்த தீனதயாளன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மகன் ராம்குமார் மற்றும் மினிவேனில் வந்த முரளி, விக்னேஷ் ஆகிய 3 பேர்  படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த பெரியபாளையம் எஸ்ஐ கிருஷ்ணராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு, தீனதயாளனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.காயமடைந்த 3 பேரும் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.மேலும், போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகிறார்கள்.

  • தொழில் நுட்ப கோளாறால் 2வது அணுஉலை உற்பத்தி நிறுத்தம்
    on July 9, 2020 at 12:23 am

    திருக்கழுக்குன்றம்: கல்பாக்கத்தில் உள்ள அணுமின் நிலைய வளாகத்தில் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம், பாபா அணு ஆராய்ச்சி மையம், சென்னை அணுமின் நிலையம் உள்பட பல்வேறு பிரிவுகள் கடந்த 37 ஆண்டுகளுக்கு மேலாக இயங்குகின்றன. இங்கு 2 அணு உலைகளிலும் உற்பத்தியாகும் மொத்தம் 440 மெகாவாட்  மின்சாரம் மத்திய தொகுப்பிற்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து தமிழ்நாட்டுக்கு அதிகளவு சதவீதமும், மீதம் மாநில வாரியாகவும் பிரித்து பகிர்ந்து அளிக்கப்படுகிறது. கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் 1வது அணு உலையில் பழுது ஏற்பட்டு நிறுத்தப்பட்டது. அப்போது முதல் இதுவரை அந்த 1வது அணு உலை சரி செய்யவில்லை. இதனால், 220 மெகாவாட் மின்சாரம் இழப்பு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், இதுவரை இயங்கி வந்த 2வது அணு உலையும் தொழில்நுட்ப கோளாறால் நேற்று நிறுத்தப்பட்டது.

  • பெண் டாக்டர் உள்பட 16 பேருக்கு கொரோனா: அச்சத்தில் பொதுமக்கள்
    on July 9, 2020 at 12:23 am

    மதுராந்தகம்: மதுராந்தகம், கருங்குழி ஆகிய பகுதிகளில் பெண் டாக்டர் உள்பட 3 டாக்டர்கள் என மொத்தம் 16 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது. மதுராந்தகம் அடுத்த கருங்குழி பேரூராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், சுமார் 25 வயதுள்ள ஒரேயொரு பெண் டாக்டர் பணியாற்றுகிறார். இவருக்கு திருமணமாகவில்லை. மற்றொரு மருத்துவ பணியிடம் பல மாதங்களாக நிரப்பப்படாமல் உள்ளது. இந்த சுகாதார நிலையத்தை சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள், இந்த ஒரே டாக்டரை நம்பி சிகிச்சை பெறுகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக, பெண் டாக்டருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு பரிசோதனை செய்ததில், நேற்று காலை கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அதேபோல், மதுராந்தகத்தில் கிளினிக் நடத்தி வரும் சுமார் 40 வயதுள்ள டாக்டருக்கும், அவரது மனைவிக்கும் நேற்று கொரோனா உறுதியானது. அவர்கள், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேபோன்று, அதே பகுதியில், கிளினிக் நடத்தி வரும் சுமார் 43 வயதுள்ள ஆண் டாக்டருக்கும் கொரோனா உறுதியானது. அவரும், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் மதுராந்தகத்தில் மெடிக்கல் ஷாப் நடத்தி வந்த 50 வயது மதிக்கத்தக்க நபர், செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது 70 வயது தாய், 20 வயது மகன் ஆகியோருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதியானது. அவர்கள், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். கருங்குழியில் ஒரு பெண் டாக்டர், மதுராந்தகத்தில் 2 டாக்டர்கள் உட்பட மொத்தம் 16 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து மதுராந்தகம் நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘மதுராந்தகம் நகராட்சியில் இதுவரை 102 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பலர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தலைமை மருத்துவர் சுகுமார் உள்பட, 6 பேர் இறந்துள்ளனர். 63 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்’ என்றனர்.

  • சாலைகளில் திரியும் மாடுகளால் விபத்துகள் அதிகரிப்பு: நடவடிக்கை எடுப்பார்களா அதிகாரிகள்?
    on July 9, 2020 at 12:23 am

    திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் பகுதியிலிருந்து திருத்தணி, திருப்பதி செல்லும் நெடுஞ்சாலையில், ஜெ.என்.சாலை, சி.வி.நாயுடு சாலை பகுதிகளில் விபத்துகளை தடுக்கும் விதமாக சென்டர் மீடியன் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த சாலை வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் அதிக வேகத்தில் சென்று வருகின்றன. இச்சாலையில், திருவள்ளூர் நகரில் வசிக்கும் சிலர் தங்கள் ஆடு, மாடுகளை அவிழ்த்து விடுகின்றனர். அதிவேகமாக வாகனங்கள் சென்று வரும் நிலையில், எதிர்பாராத விதமாக திடீரென சாலையில் குறுக்கே மாடுகள் வந்துவிடுகின்றன. இதனால் திக்கு முக்காடும் வாகன ஓட்டிகள், தங்கள் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் பல நேரங்களில் விபத்தினை சந்திக்க நேரிடுகிறது. இதனால் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. இதேபோல், திருவள்ளூர் - திருத்தணி நெடுஞ்சாலையில் பட்டறை பெரும்புதூர், பாண்டூர் ஆகிய பகுதிகளிலும் மாடுகள் சுதந்திரமாக திரிகின்றன. திருவள்ளூர் - பேரம்பாக்கம் சாலையில், திருப்பாச்சூர், அகரம் ஆகிய பகுதிகளிலும், பேரம்பாக்கம் - பூந்தமல்லி சாலையில் மப்பேடு பகுதியிலும் கால்நடைகள் திரிகின்றன. இரவு நேரங்களில் சாலையிலேயே படுத்து உறங்குகிறது. இதனால், தினமும் ஏராளமான விபத்துகள் இம்மாவட்டத்தில் நடந்துவருகிறது. எனவே, விபத்துகளை தவிர்க்க, நகரில் திரியும் மாடுகளை திருவள்ளூர் நகராட்சி அதிகாரிகளும், கிராம பகுதிகளில் திரியும் மாடுகளை போலீசார் மற்றும் வருவாய் துறையினரும் பிடித்து, அதன் உரிமையாளர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.* உரிமையாளரிடம் அபராதம் வசூலிக்க வேண்டும்திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், ஏராளமான மாடுகள் சுற்றித்திரியும் நிலையில், அவற்றை அடைப்பதற்காக மாவட்டத்தில் ஆங்காங்கே கால்நடைப் பட்டிகள் உள்ளன. விளைநிலத்தில் நுழைந்து சேதப்படுத்தும் மாடுகள், அரசுக்கு சொந்தமான தோட்டங்களை சேதம் விளைவிக்கும் கால்நடைகளை பிடித்து பட்டியில் அடைக்கலாம். மாட்டின் உரிமையாளர் வந்து கேட்கும்போது, அவரிடமிருந்து அபராதத் தொகை மற்றும் தீனிச் செலவை வசூலித்துக் கொண்டு, கால்நடைகளை விடுவிக்க வேண்டும்.

  • கொரோனா சிகிச்சை மையத்தில் சுகாதார சீர்கேடு: ஊழியர்களை முற்றுகையிட்டு நோயாளிகள் போராட்டம்
    on July 9, 2020 at 12:22 am

    ஸ்ரீபெரும்புதூர்: குன்றத்தூர் ஒன்றியம் ஒரகடம் அடுத்த எழுச்சூர் கிராமத்தில் தொழிலாளர்கள் தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதி, தற்போது கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை தங்க வைத்து, சிகிச்சை அளிக்கபடுகிறது. தற்போது இந்த சிகிச்சை மையத்தில் கழிப்பறை சுத்தம் செய்யப்படாமல், கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதாரமான குடிநீர் வழங்கவில்லை என புகார் எழுந்துள்ளது.இந்நிலையில், கொரோனா சிகிச்சை மையத்தில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாகவும், மருந்து மாத்திரைகள், முறையாக வழங்கவில்லை என கூறி கொரோனா நோயாளிகள், ஊழியர்களுடன் நேற்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.மேலும் சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாமல் உணவு வழங்கி வருவதால், நோயாளிகள் பாதிக்கப்படுவதாகவும் கூறினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வருவாய் துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் அங்கு சென்று, நோயாளிகளிடம் சமரசம் பேசினர். பின்னர் அவர்களது கோரிக்கைகளை உடனே நிறைவேற்றுவதாக கூறி உறுதியளித்தனர். தொடர்ந்து, கழிப்பறையை சுத்தம் செய்து, பிளீச்சிங் பவுடர் மற்றும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

  • மழையால் காஞ்சிபுரம் வையாவூர் சாலையில் சேறும் சகதியுமான காய்கறி சந்தை
    on July 9, 2020 at 12:22 am

    காஞ்சிபுரம்: கொரோனா பரவலை தடுக்கும் விதமாக, காஞ்சிபுரம் ரயில்வே ரோடு பகுதியில் செயல்பட்ட ராஜாஜி காய்கறி சந்தை மூடப்பட்டது. இதையடுத்து, காஞ்சிபுரம் ரயில் நிலையம் அருகே வையாவூர் சாலையில் தற்காலிக காய்கறி சந்தை அமைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால், காய்கறிச் சந்தை முழுவதும் மழைநீர் தேங்கி வியாபாரிகள் கடை வைக்க முடியாமல் அவதிப்பட்டனர். அனைத்து வியாபாரிகளும் மழை நீர் இல்லாத பகுதியில் அருகருகே கடை வைத்து, சேறும் சகதியுமான இடத்தில் வியாபாரம் செய்தனர். இதனால் காய்கறி மற்றும் மளிகை பொருட்களை வாங்க வந்த சிறு வியாபாரிகள் அவதியடைந்தனர்.கொரோனா பாதிப்பை தடுக்க சமூக இடைவெளி, தனிநபர் இடைவெளி அவசியம் என அரசு அறிவுறுத்தி வரும் வேளையில், எவ்வித சமூக இடைவெளியும் பின்பற்றாமல் சிறுவியாபாரிகள் காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருள்களை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதைதொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்பேரில் நகராட்சி அதிகாரிகள் மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். வையாவூர் சாலையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கறி சந்தையில் அடிக்கடி மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறுவதால், இதற்கு மாற்று ஏற்பாடு செய்யவேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்துகின்றனர்.* 2 மணிநேரம் கனமழைகாஞ்சிபுரத்தில்  கடந்த 2 வாரங்களாக வெயில், மேகமூட்டம், லேசான மழை என மாறிமாறி இருந்தது. இதையொட்டி, காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவியது. ஆடிப்பட்டம் தொடங்க உள்ள நிலையில் பலத்த மழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனர். வெப்பச்சலனம் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய வடமாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்தது. இந்நிலையில் காஞ்சிபுரத்தில், நேற்று முன்தினம் இரவு சுமார் 9.30 மணியளவில், திடீரென பலத்த சூறைக் காற்றுடன் கனமழை பெய்தது. இரவு 11.30 மணிவரை கொட்டித் தீர்த்த மழையால், சாலையில் மழைநீர் ஆறாக ஓடியது. இதேபோல் பாலுசெட்டிசத்திரம், விஷார், பெரும்பாக்கம், முசரவாக்கம், அய்யங்கார்குளம், ஓரிக்கை, செவிலிமேடு, உள்ளிட்ட பகுதிகளிலும் பெய்த இந்த  மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தொடர்ந்து இதேபோல் மழை பெய்தால், ஏரி குளங்கள் நிரம்பி, நிலத்தடி நீர் சேமிக்கப்படும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

  • பூட்டியே கிடப்பதால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய கால்நடைத்துறை துணை இயக்குனர் அலுவலகம்: போளிவாக்கத்தில் அரசு பணம் ரூ.75 லட்சம் வீண்
    on July 8, 2020 at 10:38 pm

    திருவள்ளூர்:  திருவள்ளூர் அருகே போளிவாக்கம் ஊராட்சியில், கால்நடைத் துறை துணை இயக்குனர் அலுவலகம் பூட்டியே கிடப்பதால், சமூக விரோதிகளின் புகலிடமாகவும், மது அருந்தும் பார் ஆகவும் மாறியுள்ளது. கடம்பத்தூர் ஒன்றியத்தில் உள்ளது போளிவாக்கம் ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதூர் மாநில நெடுஞ்சாலையில், கால்நடைத் துறைக்கு சொந்தமான கோழி விரிவாக்க நிலையம் உள்ளது. கடந்த, 2002-03ம் ஆண்டு வறட்சி நிவாரணப் பணி திட்டத்தின் கீழ் இங்கு, கோழி விரிவாக்க நிலையத்துடன், கோழிகளை பராமரிக்க காற்றோட்டத்துடன் கூடிய தனி கட்டிடமும், தீவனப் புல் பண்ணையும் அமைக்கப்பட்டது.துவக்கத்தில் இயங்கிய இந்த நிலையம், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் எவ்வித அறிவிப்பும் இன்றி மூடப்பட்டது. இந்நிலையில், அங்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் பல லட்சம் மதிப்பில் கால்நடைத்துறை துணை இயக்குனர் அலுவலகம், நவீன வசதிகளுடன் கட்டி திறக்கப்பட்டது. ஆனால், கட்டிடத்திற்கு சுற்றுச்சவர் இல்லாத நிலையில், அலுவலகமும் திறக்கப்படாமல் பூட்டியே கிடப்பதால், இரவு நேரங்களில் இங்கு சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாவும், குடிமகன்கள் ‘’பார்’’ ஆக பயன்படுத்துவதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். பராமரிப்பு இல்லாமல் மூடிக் கிடப்பதால், அலுவலகத்தை சுற்றிலும், செடி, கொடிகள் வளர்ந்து, பண்ணை இருக்கும் இடம் தெரியாமல் மூடிக் கிடக்கிறது. அலுவலக ஜன்னல்களும் உடைக்கப்பட்டு உள்ளன. இதனால் அரசு திட்டம் வீணாகி உள்ளது. தற்போது கிராமங்களில், வீடுகள்தோறும் நாட்டுக் கோழிகளை மக்கள் வளர்த்து வருகின்றனர். இதன் மூலம் முட்டைகளை அடை வைத்து கோழிகளின் இனப்பெருக்கத்தை அதிகரித்து வருகின்றனர். மேலும், நாட்டுக் கோழி முட்டைகளை ஒரு முட்டை, ஐந்து முதல், ஆறு ரூபாய் வரை விற்று குடும்ப செலவுகளை சரிசெய்து வருகின்றனர்.கோழி விரிவாக்க நிலையம் உள்ள பகுதியில், காலியாக உள்ள இடத்தில், தீவனப்புல் வளர்க்கப்பட்டு வந்தது. இந்த புற்களை சிகிச்சைக்கு வரும் கால்நடைகள் சாப்பிட்டு வந்தன. அதோடு, கால்நடைகள் வைத்துள்ள விவசாயிகளுக்கு, தீவனப்புல் வளர்க்கும் முறை, புல் ரகங்கள் குறித்து செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டு வந்தது. தற்போது அதுவும் கிடையாது. எனவே, போளிவாக்கம் ஊராட்சியில் உள்ள கால்நடைத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவரவும், தீவன புல் பண்ணையை பயன்பாட்டுக்கு கொண்டுவரவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • தஞ்சை மாவட்டத்தில் பயிர் காப்பீட்டு இழப்பீட்டை வட்டியுடன் வழங்க வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்
    on July 8, 2020 at 9:47 pm

    தஞ்சை: பயிர் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை காலந்தாழ்ந்து வழங்கப்படுவதால் வட்டியுடன் சேர்த்து வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தஞ்சை மாவட்ட விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் ஆண்டுதோறும் பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்யப்படுகிறது. கடந்த சில ஆண்டுகள் முன்பு வரை தனியார் இன்ஸ்சூரன்ஸ் நிறுவனம் விவசாயிகளை வஞ்சித்துவிட்டதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டி வந்தனர். இந்நிலையில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் விவசாயிகள் கடந்த 2019ம் ஆண்டு குறுவைக்கும், சென்ற நவம்பர் மாதத்தில் சம்பா, தாளடி சாகுபடிக்கும் தமிழக அரசின் வேளாண்மை, கூட்டுறவுத்துறையின் அறிவுரையின்படி காப்பீட்டுக்கான பிரிமீயத் தொகையை செலுத்தினர். அப்போது பயிர்களில் நோய் மற்றும் பூச்சி தாக்குதலால் விவசாயிகள் பெருத்த மகசூல் இழப்பை சந்தித்தனர்.ஆனால் பல மாதங்களாகியும் இழப்பீட்டுக்கான காப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது தஞ்சை மாவட்டத்தில் 2019ம் ஆண்டு காரீப் பருவத்திற்கு 6673 விவசாயிகளுக்கு ரூ.5.51 கோடி பயிர் காப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பா பருவத்திற்கான இழப்பீட்டுத் தொகை கணக்கிடும் பணி நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிர் அறுவடை முடிந்து பல மாதங்களாகியும் இழப்பீட்டு தொகையை வழங்காததால் இழப்பீட்டு தொகையை வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என தஞ்சை மாவட்ட விவசரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து நசுவினி ஆறு படுக்கை அணை விவசாயிகள் மேம்பாட்டு சங்க தலைவர் பொன்னவராயன்கோட்டை வீரசேனன் கூறும்போது, பயிர் காப்பீடு செய்யும் போது பிரிமீயத் தொகையை செலுத்த காலக்கெடு நிர்ணயித்து விவசாயிகளிடமிருந்து வசூல் செய்யப்படுகிறது. ஆனால் இழப்பீட்டுக்கான காப்பீடு தொகையை தருவதற்கு ஏன் காலதாமதம் செய்கின்றனர் என தெரியவில்லை. எனவே காலந்தாழ்ந்து கொடுக்கப்படும் தொகைக்கு வட்டியுடன் சேர்த்து வழங்க அரசு முன் வர வேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

  • திருப்புத்தூரில் இறந்த கோயில்காளை மரியாதையுடன் அடக்கம்
    on July 8, 2020 at 9:47 pm

    திருப்புத்தூர்: திருப்புத்தூரில் இறந்த ராஜகாளியம்மன் கோயில்காளை ஊர் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் ராஜகாளியம்மன் கோயில் மாடு உடல்நலம் சரியில்லாமல் நேற்று இறந்தது. இறந்த காளைக்கு வயது 19. உடல்நலம் பாதிப்பால் இறந்த கோயில் காளை, வாகனத்தில் வைத்து புதூரில் இருந்து புதுக்கோட்டை சாலை, கண்டரமாணிக்கம் ரோடு, பெரியகடைவீதி, செட்டிய தெரு, காளியம்மன் கோயில் வீதி வழியாக ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. காளைக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து மஞ்சள் பூசி வழிபட்டனர். வழிநெடுகிலும் மாலை அணிவித்தனர். இறுதியாக ராஜகாளியம்மன் கோயில் அன்னதான திடலில் முருகன் கோயில் எதிரில் காளை ஊர்மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. பல மஞ்சுவிரட்டுகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற கோயில் காளை இந்த பகுதியில் செல்ல பிள்ளை போல் வலம் வந்தது குறிப்பிடத்தக்கது.

  • பண்ணாரி சோதனை சாவடியில் லாரி டிரைவர்களிடம் லஞ்சம்: சமூக வலைதளங்களில் வைரல்
    on July 8, 2020 at 9:43 pm

    சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் பண்ணாரி சோதனை சாவடியில் லாரி டிரைவர்களிடம் சோதனை சாவடி ஊழியர்கள் லஞ்சம் வாங்கும் வீடியோர் சமூக வலை தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள பண்ணாரி அம்மன் கோயில் அருகே வட்டார போக்குவரத்து துறை, காவல் துறை, மற்றும் வனத்துறை சோதனைச் சாவடிகள் அமைந்துள்ளன. இச்சாலை வழியாக தமிழகம், கர்நாடகம் மட்டுமன்றி பல்வேறு மாநிலங்களுக்கு சரக்கு லாரி போக்குவரத்து நடைபெற்று வருகிறது. சரக்கு லாரிகளில் அதிக பாரம் ஏற்றிச் செல்கிறதா என்பது குறித்தும் முறையான ஆவணங்கள் உள்ளனவா என்பது குறித்தும் பண்ணாரி வட்டார போக்குவரத்து சோதனைச் சாவடியில் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் சரிபார்த்து சோதனையிட்டு வாகனங்களை அனுமதிப்பது வழக்கம். இந்நிலையில் அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்களை சோதனைச் சாவடியை கடந்து செல்ல வட்டார போக்குவரத்து சோதனைச் சாவடியில் லாரி டிரைவர்களிடம் ஊழியர்கள் லஞ்சம் பெறும் வீடியோ வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் சோதனைச்சாவடி பணியில் உள்ள ஊழியர்கள் லாரி டிரைவர்களிடம லஞ்சம் கேட்பதும், டிரைவர்கள் பணம் கொடுத்துவிட்டு அதற்கு எழுதி தர முடியுமா என கேட்பது தெரிகிறது. மேலும் 10 சக்கர லாரியா அல்லது 12 சக்கர லாரியா என விசாரிப்பதும் அதற்கு தகுந்தாற்போல் லஞ்சம் பெறுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. இரு மாநில எல்லையில் உள்ள வட்டார போக்குவரத்து சோதனைச் சாவடியில் லாரி டிரைவர்களிடம் ஊழியர்கள் லஞ்சம் பெறும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவது இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கில் தலைமைக்காவலர் ரேவதியிடம் சிபிசிஐடி மீண்டும் விசாரணை..!!
    on July 8, 2020 at 9:23 pm

    கோவில்பட்டி: சாத்தான்குளம் காவல்நிலைய தலைமைக்காவலர் ரேவதி சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜர் ஆகியுள்ளார். சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை தொடர்பான விசாரணைக்கு ரேவதி ஆஜராகியுள்ளார். சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. கோவில்பட்டி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன் இவ்வழக்கு குறித்து விசாரணை நடத்திவருகிறார். இதற்கிடையில், இவ்வழக்கு விசாரணையை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் அனுமதியுடன் சிபிஐ-க்கு மாற்றியது தமிழகஅரசு. சிபிஐ விசாரணையைக் கையில் எடுக்கும் வரை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்நிலையில், சிபிசிஐடி போலீஸார்,  காவல் ஆய்வாளர் உள்பட 5 காவலர்களை பதிவுசெய்தனர்.இதேபோல் பெண் தலைமைக்காவலர் ரேவதி, தூத்துக்குடி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் ஹேமா முன்னிலையில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். இந்நிலையில் போலீஸாருக்கு எதிராக சாட்சியம் அளித்த பெண் தலைமை காவலர் ரேவதியை சிபிசிஐடி போலீஸார் இன்று, தூத்துக்குடி தலைமை குற்றவியல் நடுவர் ஹேமா முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவர் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஜூன் 19-ம் தேதி இரவு நடைபெற்ற சம்பவம் குறித்து தலைமை குற்றவியல் நடுவரிடம் சாட்சியம் அளித்தார். தொடர்ந்து அவரை சிபிசிஐடி அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இந்த நிலையில் தற்போது சாத்தான்குளம் காவல்நிலைய தலைமைக்காவலர் ரேவதி மீண்டும் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜர் ஆகியுள்ளார்.

  • சாத்தான்குளம் கொலை வழக்கில் தலைமைக்காவலர் ரேவதியிடம் சிபிசிஐடி மீண்டும் விசாரணை
    on July 8, 2020 at 8:43 pm

    நெல்லை: சாத்தான்குளம் காவல்நிலைய தலைமைக்காவலர் ரேவதி சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜர் ஆகியுள்ளார். சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை தொடர்பான விசாரணைக்கு ரேவதி ஆஜராகியுள்ளார்.

Continue Reading
Dinakaran Tamil News Paper-Logo Dinakaran Tamil Newspaper, Political Tamil News Dinakaran Political Tamil News
  • சொல்லிட்டாங்க...
    on July 9, 2020 at 12:36 am

    * சில மாதத்திற்கு முன் வராக்கடன் பற்றி பேசியதற்காக என்னை பாஜ ஏளனம் செய்தது. ஆனால், இன்று சிறு, குறு நிறுவனங்கள் அழிந்தே போய்விட்டன. - காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி* இடஒதுக்கீட்டின் பின்னணியில் உள்ள அடிப்படை காரணி சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய நிலைதானே தவிர பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலை அல்ல. - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்* பல்வேறு தேசிய இனங்களின் அடையாளங்களை திட்டமிட்டு அழித்தால் இந்தியா எனும் அமைப்பே கேள்விக்குறியாகிவிடும். - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ* விளைநிலங்கள் வழியாக எண்ணெய் குழாய் அமைக்க மத்திய, மாநில அரசுகள் ஆதரவாக இருப்பது நியாயமற்றது. - பாமக நிறுவனர் ராமதாஸ்

  • சீனா அல்லது இந்திய துருப்புகள் கட்டுப்பாட்டுக் கோட்டின் ஒரு பக்கத்திலிருந்து மறுபுறம் நகர்ந்ததா? ..ப.சிதம்பரம் கேள்வி
    on July 8, 2020 at 4:15 pm

    சென்னை: எல்லையில் சீனப்படைகள் பின்வாங்கி இருப்பதை நான் வரவேற்கிறேன் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், சீன துருப்புக்கள் பின்வாங்கியதை நன் வரவேற்கிறேன். சீன துருப்புக்கள் விடுவிக்கப்பட்ட இடத்தையும், இப்போது அவர்கள் இருக்கும் இடத்தையும் யாராவது நமக்குச் சொல்வார்களா? இதேபோல் இந்திய துருப்புக்கள் விடுவிக்கப்பட்ட இடம் எது? எந்தவொரு துருப்புக்களும் - சீனா அல்லது இந்திய - எல்.ஏ.சியின்(கட்டுப்பாட்டுக் கோடு) ஒரு பக்கத்திலிருந்து மறுபுறம் நகர்ந்ததா? இந்த கேள்விகளுக்கான பதில்கள் அவசியம். ஏனென்றால் ஜூன் 15 அன்று என்ன நடந்தது, எங்கு நடந்தது என்பதை அறிய இந்திய மக்கள் புதையல் வேட்டையில் உள்ளனர், என கூறியுள்ளார். முன்னதாக, லடாக் எல்லை அருகே கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த ஜூன் 15ம் தேதி இந்திய சீன இராணுவர்களிடையே ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதன்பின், இரு நாட்டு ராணுவப் படைகளும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே குவிக்கப்பட்டன. இந்திய எல்லையை ஒட்டி சீனா முகாம்களையும், ஹெலிபேடுகள் உள்ளிட்ட கட்டமைப்புகளை அமைத்தது. பதிலுக்கு இந்தியாவும் தனது படைகளை எல்லை நோக்கி நகர்த்தியது.  இதனால், எல்லையில் பதற்றம் நீடித்து வந்தது. இதற்கிடையே, இரு நாட்டு ராணுவ கமாண்டர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டதைத் தொடர்ந்து, சீனப் படைகள் கல்வான் மோதல் நடத்த பகுதியில் இருந்து சுமார் 2 கி.மீ. தூரத்திற்குப் பின்னோக்கி சென்றன. மேலும், ஹாட்ஸ்பிரிங், கோக்ரா ஆகிய பகுதிகளிலும் படைகள் விலக்கி கொள்ளப்பட்டன. இந்நிலையில், கல்வான் பகுதியில் அமைந்திருந்த தற்காலிக கட்டுமானங்கள் மற்றும் கூடாரங்களை சீன இராணுவம் அகற்றி இருக்கிறது. இதனைத்தொடர்ந்து, சீனாவை போல இந்தியாவும் எல்லையிலிருந்து 2 கி.மீ. தூரத்திற்கு படைகளை விலக்கி உள்ளது. இரு நாட்டு படைகளும் விலக்கி கொள்ளப்பட்டிருப்பதால் லடாக் எல்லையில் 2 மாதங்களுக்கு மேலாக நீடித்து வந்த பதற்ற நிலை, தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  • சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக அதிமுக மாவட்ட செயலாளர்கள் மாற்றம்? எடப்பாடி, ஓ.பி.எஸ்சிடம் பட்டியல் ஐவர் குழு சமர்ப்பித்தது
    on July 8, 2020 at 1:47 am

    சென்னை: சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் அதிரடியாக மாற்றப்பட உள்ளனர். இதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ள ஐவர் குழு புதிய நிர்வாகிகள் பட்டியலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ்சிடம் சமர்பித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் கடந்த 4 மாதங்களாக அரசியல் கட்சிகள் சார்பில் பொதுக்கூட்டங்கள், ஆலோசனைகள், கட்சி கூட்டங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்கிறது. திமுக சார்பில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம், ஆலோசனை கூட்டங்கள் அனைத்துமே வீடியோ கான்பரன்சிங் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், அதிமுக கட்சி நிர்வாகிகள் கூட்டங்களை அதன் கட்சி தலைவர்கள் வீடியோ கான்பரன்சிங் மூலமாக கூட நடத்தாமல் உள்ளனர். இதனால் பல மாவட்ட நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளனர். பல மாவட்டங்களில் கோஷ்டி பூசல் நிலவுகிறது. முதல்வர் எடப்பாடி அணி என்றும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணி என்றும் தற்போது செயல்பட்டு வருகிறது. இதுபோன்ற கோஷ்டி பூசல்களால் கட்சியின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாக நிர்வாகிகள் கட்சி தலைமைக்கு தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில், நேற்று முன்தினம் இரவு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம் ஆகிய 5 பேர் குழுவினர் கூடி ஆலோசனை நடத்தினர். இந்த 5 பேர் அணியினர் தான், தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக நிர்வாகிகளிடம் இருந்து வரும் புகார் மனுக்களை விசாரித்து, தவறு செய்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கட்சி தலைமைக்கு சிபாரிசு செய்து வருகிறார்கள். நீண்ட நாட்களுக்கு பிறகு கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஐவர் அணியினர் கூடி ஆலோசனை நடத்தியது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து, அதிமுக தலைமை கழக மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:தமிழகத்தில் 2021 ஏப்ரல் மாதம் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறும். தேர்தலுக்கு தயாராக 8 மாதங்கள் மட்டுமே உள்ளது. இப்போதாவது கட்சி பணிகளிலும் கொஞ்சம் ஆர்வம் காட்டினால்தான் வருகிற சட்டமன்ற தேர்தலை சந்திக்க முடியும். தற்போது அதிமுக மாவட்ட செயலாளர்களாக உள்ள பலர் அமைச்சர்களாகவும் உள்ளனர். கடந்த எம்பி தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்தது. இதற்கு மாவட்ட செயலாளர்கள் மற்றும் அந்த மாவட்டங்களில் உள்ள கோஷ்டி பூசல்கள்தான் காரணம். அதனால் சில மாவட்ட செயலாளர்களை மாற்றி, மக்கள் செல்வாக்கு அதிகம் உள்ளவர்களை மாவட்ட செயலாளர்களாக நியமிக்க அதிமுக தலைமை திட்டமிட்டுள்ளது. அதனால்தான் அந்தந்த மாவட்டங்களில் இருந்து கட்சி தலைமைக்கு வந்துள்ள புகார் மனுக்களை ஆய்வு செய்யும் பணிகள் தொடங்கியுள்ளது. இதில் அதிக புகார் வந்துள்ள மாவட்ட செயலாளர்கள் மீது ஆதாரத்துடன் குற்றச்சாட்டு இருந்தால் அவர்களை மாற்றி புதிய மாவட்ட செயலாளர்கள் விரைவில் நியமிக்கப்படுகிறார்கள்.இதுவரை, ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர்கள்தான் கட்சியிலும், ஆட்சியிலும் பதவியில் இருக்கிறார்கள். இனி அந்த நிலை மாற்றப்பட்டு, தற்போதுள்ள கட்சி தலைமைக்கும், அந்தந்த மாவட்ட அதிமுக தொண்டர்களுக்கும் உண்மையான விசுவாசத்துடன் இருப்பவர்களுக்கே எம்எல்ஏ சீட் மற்றும் கட்சி பதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், புதிய மாவட்ட செயலாளர்கள் பட்டியலை கட்சியின் ஒருங்கிணைப்பாளரான முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடமும்,  துணை ஒருங்கிணைப்பாளரான துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடமும் ஐவர் குழு சமர்ப்பித்துள்ளதாக தெரிகிறது. விரைவில் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு அதிரடி மாற்றங்கள் குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றார். தற்போதுள்ள கட்சி தலைமைக்கும், அந்தந்த மாவட்ட அதிமுக தொண்டர்களுக்கும் உண்மையான விசுவாசத்துடன் இருப்பவர்களுக்கே எம்எல்ஏ சீட் மற்றும் கட்சி பதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

  • சிறுமியை எரித்து கொன்றவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்: தலைவர்கள் வலியுறுத்தல்
    on July 8, 2020 at 1:38 am

    சென்னை: சிறுமியை எரித்துக் கொன்றவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ராமதாஸ், திருநாவுக்கரசர் வலியுறுத்தி உள்ளனர். ராமதாஸ் (பாமக நிறுவனர்): திருச்சி அடுத்த அதவத்தூர்பாளையத்தை சேர்ந்த 14 வயது சிறுமியை வீட்டிற்கு அருகே, அப்பகுதியை சேர்ந்த சில மனித மிருகங்கள் சீரழித்து கொலை செய்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. வேலூரை அடுத்த பாகாயத்தில் 10ம் வகுப்பு மாணவி பாலியல் மிரட்டலால் தீக்குளித்து தற்கொலை செய்தது, செய்யூர் அருகில் இளம்பெண் ஒருவர் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாக்கப்பட்டு மர்மமான முறையில் கொல்லப்பட்டது, அறந்தாங்கி அருகில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது என இளம்பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது.திருச்சி அருகே சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் கொலையாளிகளை விரைவாக கண்டுபிடித்து, அவர்களுக்கு சட்டப்படி கடுமையான தண்டனை பெற்றுத் தரவும் இனியும் இத்தகைய நிகழ்வுகள் நடப்பதை தடுக்கவும் தமிழக அரசு மற்றும் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். பெற்றோரும் தங்களின் குழந்தைகளை யாரையும் நம்பாமல் எச்சரிக்கையுடன் பார்த்துக் கொள்ள வேண்டும். திருநாவுக்கரசர் (தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்): விவசாயி பெரியசாமியின் 14 வயது மகள் கங்காதேவி எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். மனிதாபிமானமற்ற இழி செயலில் ஈடுபட்ட மனித மிருகங்கள் எவராயினும் காவல்துறை விரைந்து அடையாளம் கண்டு உடனடியாக கைது செய்து கடுமையான தண்டனை வழங்கிட வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு கணிசமான நிதி உதவி  வழங்கவேண்டும். தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிராக சமீபகாலமாக தொடரும் இதுபோன்ற வன்கொடுமைகள் தடுத்து நிறுத்தப்பட காவல்துறை வேகமான உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்.சரத்குமார் (சமக தலைவர்): சோமரசம்பேட்டை பகுதியை சார்ந்த 9ம் வகுப்பு சிறுமி உடல் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது நெஞ்சை பதறச் செய்கிறது. அறந்தாங்கி சிறுமி பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்த சம்பவம் நம் மனதில் நீங்காமல் இருக்கும் போது, அச்சம்பவம் ஆறுவதற்குள்ளாக திருச்சியில் நடந்தேறிய இக்குற்ற சம்பவம் மிகுந்த மனவேதனை அளிக்கிறது. சிறுமியின் உடலை கருணையின்றி தீ வைத்து எரித்த மனித மிருகங்களை, கொடூர அரக்கர்களை விசாரணையின் மூலம் விரைந்து கண்டறிந்து, ஏற்கனவே பலமுறை வலியுறுத்தி வருவது போல கட்டாயம் மரண தண்டனை வழங்க வேண்டும்.

  • சொல்லிட்டாங்க...
    on July 8, 2020 at 12:51 am

    * கிட்டத்தட்ட 105 நாட்களுக்கு மேல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுவிட்டது. தொடர்ந்து, ஊரடங்கை அறிவித்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுவிடும். - தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி* ‘கிரீமிலேயர்’ வரம்பைக் கணக்கிடுவதில் சம்பளத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற மத்திய அரசின் திட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. - பாமக நிறுவனர் ராமதாஸ்* உள்ளூர் உற்பத்தியாளர்கள் பங்கேற்க வேண்டும் என்ற காரணத்தினாலே மத்திய அரசு பாரத் நெட் டெண்டரை ரத்து செய்தது. - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்* பல்கலைக்கழக இறுதி பருவத் தேர்வுகளை நடத்துவதில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் நிலை முன்னுக்குப்பின் முரணாக உள்ளது. - பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி

  • உள்ளாட்சித்துறை டெண்டர் தலையீடு விவகாரம் சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க தயாரா? அமைச்சர் வேலுமணிக்கு திமுக சவால்
    on July 8, 2020 at 12:42 am

    சென்னை: உள்ளாட்சித்துறை டெண்டரில் தலையிடுவதே இல்லை என்று வெளிப்படையாக அறிவித்து, சி.பி.ஐ. விசாரணைக்கு ஒப்படைக்க தயாரா என்று அமைச்சர் வேலுமணிக்கு, திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு சவால் விடுத்துள்ளார். இதுகுறித்து, திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு நேற்று வெளியிட்ட அறிக்கை: திமுக தலைவர் எழுப்பியது ஏதோ ஒரு நிர்வாக மாற்றம் குறித்து மட்டும் அல்ல. 17 ஆயிரம் கோடித் திட்டத்தினை நிறைவேற்றும் இடத்தில் ஏன் பணி நீட்டிப்புச் செய்த புகழேந்தியை நியமித்தீர்கள் என்று கேட்டார். அதற்குப் பதில் அளிப்பதாக கூறி அமைச்சர் வேலுமணி தன் மனம்போன போக்கில் அறிக்கை விடுவது அவருக்கு அவமானமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவர் வகிக்கும் அமைச்சர் பதவிக்குப் பெருத்த அவமானம். புகழேந்தி ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியர். அவர் எப்படி சிவில் பணிகளை- குறிப்பாக, சீர்மிகு நகரங்கள் என்று கூறக்கூடிய ஸ்மார்ட் சிட்டி பணிகளை கவனிக்க முடியும். அமைச்சர் வேலுமணி செய்த ஊழல் எவ்வளவு, எத்தனை டெண்டர்கள் அமைச்சருக்கு வேண்டியவர்களுக்கு போனது? ஒரு ரூபாய் கூட டெண்டரில் நான் சம்பாதிக்கவில்லை. நான் டெண்டரில் தலையிடுவதே இல்லை என்று வெளிப்படையாக அறிவித்து சி.பி.ஐ. விசாரணை க்கு ஒப்படைக்க அமைச்சர் வேலுமணி தயாரா?. அல்லது குறைந்தபட்சம் ஒரு விசாரணை ஆணையம் அமைக்க நான் தயார் என்று அறிவிக்கும் திராணியும், தெம்பும் இருக்கிறதா, அப்படியொரு விசாரணை ஆணையம் அமைத்து-அந்த ஆணையம் உள்ளாட்சி துறை டெண்டர்களில் முறைகேடே நடக்கவில்லை என்று கூறிவிட்டால்- நான் அரசியலுக்கு முழுக்குப் போட்டு விடுகிறேன். “ஊழல் நடந்திருக்கிறது” என்று சொல்லி விட்டால்- வேறு வழக்கு விசாரணை இல்லாமலேயே நான் ஜெயிலுக்குப் போகத் தயார் என்று வேலுமணி அறிவிக்கத் தயாரா? இவ்வாறு கூறியுள்ளார்.

  • தேமுதிகவில் இருந்து அதிமுகவில் இணைந்த மதுரை மாஜி எம்எல்ஏ சுந்தரராஜன் மரணம்: கொரோனா பரிசோதனை முடிவு வருவதற்குள் உடல் அடக்கம்
    on July 8, 2020 at 12:17 am

    மதுரை: மதுரை, சொக்கிகுளத்தை சேர்ந்தவர் சுந்தரராஜன் (62). விஜயகாந்த்தின் நண்பராக இருந்து, அவரது ரசிகர் மன்றத்தில் முக்கிய பொறுப்பு வகித்தவர். விஜயகாந்த் தேமுதிக கட்சி துவங்கிய பின் சுந்தரராஜனுக்கு மாநில பொருளாளர் பதவி வழங்கப்பட்டது. அதிமுக - தேமுதிக கூட்டணியில்,  கடந்த 2011ல் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 2016ல் அதிமுகவில் இணைந்தார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். திடீரென நேற்று முன்தினம் இரவு இவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. முதலில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர், பின்னர் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. முடிவு வரவில்லை. இந்நிலையில், நேற்று காலை 11 மணியளவில் அவர் இறந்தார். கொரோனா இறப்புக்கு தருவது போல், உடல் பாதுகாப்பாக துணியால் சுற்றப்பட்டு  குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. மாலையில் மதுரை தத்தனேரியில் உடல்  அடக்கம் செய்யப்பட்டது. சுந்தரராஜனுக்கு நாகேஸ்வரி என்ற மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர்.

  • அதிமுக தலைமை அலுவலகத்தில் ஐவர் குழு திடீர் ஆலோசனை
    on July 7, 2020 at 1:53 am

    சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் ஐவர் குழுவினர் நேற்று இரவு திடீரனெ ஆலோசனை நடத்தினர். சென்னை, ராயப்பேட்டையில் அதிமுக தலைமை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் கட்சி பணிகள் சம்பந்தமான அனைத்து ஆலோசனைகளும் நடத்துவது வழக்கம். மேலும் கட்சி சம்பந்தமாக அலுவலகத்திற்கு வரும் புகார்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் மீது வரும் புகார்களை விசாரிப்பதற்காக கட்சி தலைமை சார்பில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம் ஆகியோர் அடங்கிய ஐவர் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த ஐவர் குழு நிர்வாகிகள் நேற்று இரவு திடீரென கட்சியின் தலைமை அலுவலகத்தில் கூடி ஆலோசனை நடத்தினர். மேலும் விரைவில் தேர்தல் வருவதையடுத்து கட்சியில் சரியாக செயல்படாத மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை மாற்றுவது குறித்தும், கட்சி புகார் சம்பந்தமாகவும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனைக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ஒருங்கிணைப்பாளர், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர், முதல்வருமான எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கினர். இதையடுத்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. கொரோனா காலத்தில் கட்சி தலைமை அலுவலகத்தில் திடீரென ஐவர் குழு ஆலோசனை நடத்தியது மாவட்ட செயலாளர் மற்றும் கட்சி நிர்வாகிகளிடம் மத்தியில் ெபரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • ரிசர்வ் வங்கியின் கால அவகாசம் அளிக்கும் உத்தரவை மீறி கடன் தவணை வசூலிக்கும் வங்கிகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்: மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை
    on July 7, 2020 at 12:14 am

    சென்னை: ரிசர்வ் வங்கியின் கால அவகாசம் அளிக்கும் உத்தரவை மீறி கடன் தவணை வசூலிக்கும் வங்கிகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை: கொரோனா ஊரடங்கு நேரத்தில் ஊழல் செய்வதை முன்னுரிமை வேலையாகக் கொண்டு, ஜனநாயகத்திற்கு புறம்பாக தன்னிச்சையாக செயல்படும் முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியில், விவசாயிகளின் நிலங்களை பறித்திடும் தீர்மானமான எண்ணத்துடன், கருத்துக்கேட்பு கூட்டங்களை’ நடத்துவதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனா நோய்தொற்று தமிழக மாவட்டங்களில் தீவிரமாக பரவி வருகிற காலத்தில்- குறிப்பாக, முதலமைச்சரின் மாவட்டமான சேலத்தில் மட்டும் 1247 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டு அவதிப்பட்டு- அங்கு 5 பேர் உயிரிழந்தும் உள்ளார்கள்.கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சைப் பணிகளில் தன் சொந்த மாவட்டத்திலேயே முனைப்புக் காட்டாமல், பாரத் பெட்ரோலியத்தின் இருகூர் - தேவனகொந்தி-  ஐ.டி.பி.எல். திட்டங்களுக்கு விளைநிலங்களை கைப்பற்ற சேலத்தில் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்துவது, விவசாயிகளின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் கொடுந்துயரமாகும்.ஏற்கனவே எட்டுவழிச்சாலை திட்டத்திற்கு மாவட்டத்தில் உள்ள ‘பசுமை நிறைந்த பகுதிகளை’ வெட்டி ஒழித்து- காவல்துறையை வைத்து விவசாயிகள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்ட முதலமைச்சர்- இப்போது இந்த எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்திற்காக நாமக்கல், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலும், நிலங்களை எடுக்க கருத்துக்கேட்பு கூட்டங்களை நடத்துவது மனித நேயமற்றது. அதிமுக அரசுக்கு மனித உயிர்களோ, விவசாயிகளின் வாழ்வாதாரமோ முக்கியமல்ல; மத்திய அரசு கைகாட்டும் இடத்தில் ‘கைகட்டி’ வாய் பொத்தி நின்று- கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வேளாண் நிலங்களை பறித்துக் கொடுப்பது மட்டுமே முக்கியம் என்ற நோக்கில் பழனிசாமி செயல்படுவது வேதனைக்குரியது.விவசாயிகளுக்கு இடி மேல் பேரிடி போல் கடன் தவணையை கேட்டு மிரட்டும் செயலும் அ.தி. மு.க. ஆட்சியில் தொடருகிறது. வங்கிக் கடன் தவணையை திருப்பிச் செலுத்திட வேண்டும் என்று ஆக்ஸிஸ் வங்கி அதிகாரிகளால் மிரட்டப்பட்டதால், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மானூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி ராஜாமணி தற்கொலை செய்து கொண்டுள்ளார். “கொரோனா காலத்தில் வங்கிக் கடன் தவணைகளை செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது” என்று மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் நாட்டு மக்கள் முன்பும்- உச்ச நீதிமன்றத்திலும் மாறி மாறி அறிவித்து வருகின்றன. ஆனால் ரிசர்வ் வங்கியின் உத்தரவையும் மீறி வங்கி தவணையை செலுத்த வேண்டும் என்று விவசாயிகளை வங்கிகள் தான்தோன்றித்தனமாக மிரட்டுகின்றன.‘அறிவிப்பு ஒன்றும்’ ‘அணுகுமுறை வேறுமாக’ அராஜகத்தை அரங்கேற்றும் வங்கிகளின் எதேச்சதிகார நடவடிக்கைகளை, மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் தலையிட்டு திருத்தாமல் வேடிக்கை பார்ப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.ஆகவே, பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் எண்ணெய் குழாய்கள் பதிக்கும் திட்டத்திற்கு விளைநிலங்களை கைப்பற்ற சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் கருத்துக்கேட்பு கூட்டங்களை ரத்து செய்ய வேண்டும் எனவும், ரிசர்வ் வங்கியின் அறிவிப்பிற்கு எதிராக வங்கிக் கடன்களின் தவணை தொகையை திருப்பிச் செலுத்த மிரட்டி - விவசாயி ராஜாமணியின் தற்கொலைக்கு காரணமான வங்கி அதிகாரிகள் மற்றும் அதன் கடன் வசூல் முகவர் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்து உடனடியாக அவர்களை  கைது செய்திட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன். ரிசர்வ் வங்கியின் ‘கால அவகாசம் அளிக்கும்’ உத்தரவை மீறிக் கடன் தவணையை வசூலிக்கும் வங்கிகளின் லைசென்சை ரத்து செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.* குளறுபடியான புதிய பாடத்தொகுப்பு ரத்து மு.க.ஸ்டாலின் வரவேற்புதிமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது: குளறுபடியான புதிய பாடத் தொகுப்பை ரத்து செய்ய வேண்டும் என நான் கோரி இருந்தேன். இப்போதாவது அதனை ரத்து செய்திருப்பதை வரவேற்கிறேன். முடிவுகளை அவசரமாக அறிவித்து விட்டுப் பின்னர் திரும்பப் பெறுவது இந்த அரசின் வழக்கமாகிவிட்டது. லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் சார்ந்த முடிவிலும் இத்தனை அலட்சியமா? சரியான ‘வாபஸ்’ பழனிசாமி. இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

  • சொல்லிட்டாங்க...
    on July 7, 2020 at 12:12 am

    * முடிவுகளை அவசரமாக அறிவித்து விட்டு, பின்னர் திரும்பப் பெறுவது அதிமுக அரசின் வழக்கமாகி விட்டது. - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்* விளைநிலங்களை பாழ்படுத்தும் ஐடிபிஎல் நிறுவனம் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தை கைவிட்டு, மாற்றுப் பாதையில் செயல்படுத்த வேண்டும். - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ* சென்னையில் கொரோனா பரவல் சற்று குறைந்திருப்பதற்கான காரணங்களில் மிகமிக முக்கியமானது 15 நாட்களாக நடைமுறைப்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு. - பாமக நிறுவனர் ராமதாஸ்* தமிழக கல்வித்துறையில் குழப்பங்கள் தொடர்ச்சியாக நீடித்து வருவது பல்வேறு ஐயப்பாடுகளை ஏற்படுத்துகின்றன. - இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்

  • திருச்சியில் இன்று ஒரே நாளில் 8 பேர் கொரோனாவால் உயிரிழப்பு
    on July 6, 2020 at 5:30 pm

    திருச்சி: திருச்சி அரசு மருத்துவமனையில் இன்று ஒரே நாளில் 8 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். உயிரிழந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட 3 பேருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • சட்டத்திற்குப் புறம்பான ‘பிரண்ட்ஸ் ஆப் போலிஸ்’ எனும் பிரிவுக்கு தமிழக அரசு நிரந்தர தடைவிதிக்க வேண்டும் : சீமான் வலியுறுத்தல்!!
    on July 6, 2020 at 3:59 pm

    சென்னை : சட்டத்திற்குப் புறம்பான ‘பிரண்ட்ஸ் ஆப் போலிஸ்’ எனும் பிரிவுக்கு தமிழக அரசு நிரந்தர தடைவிதிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி சீமான் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், 'சாத்தான்குளம் வணிகர்களது படுகொலைக்குப் பிறகு, தமிழகக் காவல்துறையினர் இதுநாள் வரை பயன்படுத்தி வந்த ‘பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்’ எனும் பிரிவுக்குத் தடைவிதிக்க வேண்டும் எனும் கோரிக்கை நாடெங்கிலும் பெருவாரியாக எழுந்துள்ள நிலையில் அதற்கு திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் தடைவிதிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதென்றாலும், அத்தடை தற்காலிகமானதாகவும், அவ்வுத்தரவு வாய்மொழியாகவும் இருப்பது பல்வேறு ஐயங்களுக்கு வித்திடுகிறது.தமிழகக் காவல்துறையினரின் உதவிகளுக்குக் கூடுதலான ஆட்கள் தேவைப்படுகிறார்களென்றால், அதற்குக் கூடுதல் காவலர்களை நியமிக்கச்செய்வது அல்லது ஊர்க்காவல் படையினரை உதவிக்குப் பயன்படுத்திக் கொள்ளச் செய்வது போன்றவற்றையே அரசு வழிகாட்ட வேண்டும். ஆனால், அதற்கு நேர்மாறாக, ‘பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்’ எனும் ஒரு உட்பிரிவைக் காவல்துறையே உருவாக்கி, அவர்களுக்குக் காவலர்களுக்கு இணையான அதிகாரங்களை வழங்கி, வரம்பு மீறவும், அத்துமீறவும், சிறுவணிகர்களிடம் பணம் பறிக்கவும், காவல்நிலையத்தில் சிறைப்படுத்தப்படுபவர்களைத் தாக்கவும்கூட பயன்படுத்தி வருகிற செய்தி பேரதிர்ச்சி தருகிறது. அதிலும் ‘சேவா பாரதி’ எனும் மதவாத அமைப்பினரை ‘பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்’ பிரிவாக வைத்துச் செயல்பட்டிருப்பது வெளிப்படையாக நிகழ்ந்தேறிய சட்டவிரோதமாகும். மதச்சார்பற்ற கொள்கையைக் கொண்டு இயங்கும் பன்மைத்துவம் மிகுந்த சனநாயக நாட்டின் நிர்வாகப்பிரிவில் ஒரு மதவாத அமைப்பை ஊடுருவ வழிவகை செய்திருப்பது மிகப்பெரிய நிர்வாகச்சீர்கேடாகும்.‘பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்’ எனும் இவர்களுக்கும், மக்களுக்குமான தொடர்பென்ன? இப்பிரிவினருக்கான அதிகார வரம்பென்ன? அவர்களின் வேலைத்திட்டங்கள் என்னென்ன? அவர்களுக்கான சீருடை என்ன? அவர்களுக்குரிய பணிநேரம் எவ்வளவு? அவர்களுக்கான ஊதியம் என்ன? அது எதனை வைத்து வழங்கப்படுகிறது? அதற்கான நிதியாதாரமென்ன? இப்பிரிவைக் காவல்துறையினரே உருவாக்கி நிர்வகித்துக்கொள்ள சட்டத்தில் இடமுண்டா? எனும் எக்கேள்விக்கும் இதுவரை விடையில்லை. ஆனால், தமிழகம் முழுமைக்கும் இப்பிரிவு காவல்துறையினரின் துணைப்பிரிவு போல அதிகாரப்பூர்வமற்று, அரசின் அனுமதியோடே இயங்கியிருப்பது மக்கள் நலனுக்கு குந்தகம் விளைவிக்கும் கொடுஞ்செயலாகும். சட்டத்திற்குப் புறம்பாக இவ்வாறு ஒரு பிரிவை காவல்துறையினரே உருவாக்கி, அவர்கள் அத்துமீறலில் ஈடுபட வழிவகை செய்திருப்பது மிகப்பெரும் சட்டவிரோதமாகும். சாத்தான்குளம் வணிகர்களின் படுகொலைக்குப் பிறகு, ‘பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்’ எனும் அப்பிரிவுக்கெதிராகக் கண்டனக்குரல்கள் எழுந்துள்ள நிலையில் அதற்கு ஒரு சில மாவட்டங்களில் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டிருப்பதும், அதற்கான உத்தரவையும் வாய்மொழியாகவே அறிவித்திருப்பதும் மக்களின் கோபஅலையைத் தணிப்பதற்கான ஒரு யுக்திதானே ஒழிய, அது தீர்வுக்கான வழியல்ல! இவ்வளவு கொதிநிலையிலும் சென்னையில் அப்பிரிவுக்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட மறுப்புத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்பதன் மூலம் அது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.ஆகவே, காவல்துறையைத் தன்வசம் வைத்திருக்கிற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமிழகம் முழுமைக்கும் ‘பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்’ எனும் சட்டவிரோதப் பிரிவை மொத்தமாகக் கலைக்க உத்தரவிட்டு, அதனைப் பயன்படுத்துவதற்குத் தடைவிதிக்க வேண்டும் எனவும், காவல்துறையினரின் உதவிகளுக்கு ஊர்க்காவல்படையினரைப் பயன்படுத்தவும், கூடுதலான காவலர்களை பணிக்கு நியமிக்கவுமான நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்,' எனத் தெரிவித்துள்ளார்.

  • கோவையில் 4 தனியார் கொரோனா பரிசோதனை மையத்திற்கு அனுமதி ரத்து
    on July 6, 2020 at 10:58 am

    கோவை: கோவையில் கொரோனா பரிசோதனையில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்ததை அடுத்து 4 தனியார் பரிசோதனை மையங்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. புகாரை அடுத்து சுகாதாரத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

  • சொல்லிட்டாங்க...
    on July 6, 2020 at 1:17 am

    * சமத்துவம் மற்றும் சமூகநீதி நலன் கருதி, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மருத்துவம், பல் மருத்துவ படிப்புகளில் இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும். - காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி* கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசிடம் தொலைநோக்கு திட்டம் இல்லை. - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ * எந்தவொரு நாடும் தனது எல்லையை அத்து மீறி விரிவுபடுத்திக் கொள்ளும் போக்கிற்கு முடிவு கட்டப்பட்டு விட்டது. - பிரதமர் நரேந்திர மோடி* கொரோனா பேரிடர் முடக்க காலத்தில் மாநிலம் முழுவதும் மகளிருக்கு எதிரான குற்றங்கள் நாள்தோறும் அதிகரித்து வருகின்றன. - விசிக தலைவர் திருமாவளவன்

  • அடுத்த ஜூன் மாதம் வரை இலவச உணவுப்பொருட்கள் வழங்க வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல்
    on July 6, 2020 at 12:16 am

    சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: நாடு முடக்கம் மற்றும் ஊரடங்கு நடைமுறைகள் ஆகியவற்றில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், மக்கள் வாழ்க்கையில் இயல்பு நிலை திரும்பவில்லை. இந்த நிலையில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருவதால் நிலவரம் மோசமாகி வருகிறது. இந்த நெருக்கடியான காலத்தை சமாளிக்க குடும்ப அட்டை பெற்றிருப்போர் அனைவருக்கும் வருகிற நவம்பர் மாதம் வரை பொது விநியோகத்துறை மூலம் உணவுப் பொருட்கள் வழங்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரையிலும் உணவுப் பொருட்கள் விலையில்லாமல் வழங்கப்படும் என மேற்கு வங்க முதலமைச்சர் அறிவித்துள்ளார்.ஆனால், தமிழக முதல்வர் இந்த ஜூலை மாதம் மட்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச உணவுப் பொருட்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதில் குடும்ப அட்டை இல்லாதோர் குறித்தும், குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்து காத்திருப்போர் கவலைகள் குறித்தும் கருத்தில் கொள்ளவில்லை. முன்னர் “மூன்று நாளில் கொரோனா பிரச்னைக்கு தீர்வு” வரும் என அறிவித்தது போல், இந்த மாத இறுதியில் கொரோனா நெருக்கடி முடிந்து விடும் என நம்புகிறாரா, மருத்துவ நிபுணர்கள் கருத்துப்படி கொரோனா தொற்று பல மாதங்கள் நீடிக்கும் என தெரிகிறது. இந்த நிலவரத்தை கருத்தில் கொண்டு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரையிலும் தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் குடும்பங்களுக்கு இலவச உணவுப் பொருட்கள் வழங்க வேண்டும். குடும்ப அட்டை இல்லாத குடும்பங்களுக்கு உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகள் பரிந்துரை அடிப்படையில் தற்காலிக குடும்ப அட்டைகள் வழங்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

  • மருத்துவர்கள் ஓய்வூதிய குறைப்பை கைவிட வேண்டும்
    on July 6, 2020 at 12:16 am

    சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளுக்கு முன் பணியாற்றி ஓய்வு பெற்ற மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள்,  தலைமை மருத்துவ அதிகாரிகள் உள்ளிட்ட மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியத்தை குறைக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே அரசால் நிர்ணயிக்கப்பட்ட ஓய்வூதியத்தை அரசே குறைக்க நினைப்பது எந்த வகையிலும் நியாயமானது அல்ல. அரசு மருத்துவர்கள் அவர்களின் ஓய்வூதியத்தை உயர்த்துவதற்காக 2009ம் ஆண்டில் தொடங்கி 2017ம் ஆண்டு வரை 8 ஆண்டுகள் சட்டப் போராட்டம் நடத்தினர். அவர்களின் ஓய்வூதியத்தை உயர்த்தலாம் என்று உயர்நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. ஆனால், மேல்முறையீட்டை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம், மருத்துவர்களுக்கு ஓய்வூதிய உயர்வு வழங்க வேண்டும் என்று கண்டிப்புடன் ஆணையிட்ட பிறகு தான் 2018ல் ஓய்வூதிய உயர்வு வழங்கப்பட்டது. அதுகுறித்த அரசாணையை அப்போது பிறப்பித்தது அப்போதைய நிதித்துறை செயலர் சண்முகம் தான். இப்போது அந்த அரசாணையை ரத்து செய்யப்போவதாக தீர்மானித்திருப்பது தலைமைச் செயலாளர் சண்முகம் தான். எந்த காரணமுமே இல்லாமல் நிதித்துறை செயலராக பிறப்பித்த அரசாணையை தலைமைச் செயலாளராக அவரே ரத்து செய்வது எந்த வகையில் நியாயம்? நிதிநெருக்கடியை சமாளிப்பதற்காக ஓய்வூதியக் குறைப்பாக இருந்தாலும், ஊதியக் குறைப்பாக இருந்தாலும் அது அனைத்து துறை பணியாளர்களுக்கும் ஒன்றாகத் தான் மேற்கொள்ளப்பட வேண்டும். அரசு அதன் பணியாளர்களிடம் பாகுபாடு காட்டுவது ஏற்க முடியாததாகும். மருத்துவர்களின் ஓய்வூதியத்தை குறைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும். 70, 80 வயதைக் கடந்த மருத்துவர்கள் மன உளைச்சலின்றி நிம்மதியாக வாழ்வதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

  • சொல்லிட்டாங்க...
    on July 5, 2020 at 12:21 am

    இன்று உலகமே அசாதாரண சவால்களை எதிர்கொண்டுள்ளது. இந்த சவால்களுக்கு புத்தரின் கொள்கைகளில் இருந்து தீர்வுகள் கிடைக்கும்.- பிரதமர் நரேந்திர மோடிமக்களுக்கு வாழ்வாதாரமாக திகழும் விவசாயத்தை அழித்து கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளை லாபத்துக்காகவே பல திட்டங்கள் தமிழகத்தில் தீட்டப்படுகின்றன.- மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் என்பது அதன் அதிகார வரம்பிற்குள் வரும் மக்களின் நலன்களை பாதுகாக்கும் காவலனாக இருக்க வேண்டும்.- பாமக நிறுவனர் ராமதாஸ்உலகின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான இந்திய ரயில்வே, மத்திய அரசால் சிதைத்து அழிக்கப்படுகிறது. - இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்.

  • சாத்தான்குளம் வியாபாரிகள் குடும்பத்துக்கு சரத்குமார் 5 லட்சம் நிதி
    on July 5, 2020 at 12:12 am

    சென்னை: சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்தனர். கொடூரமான இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நேற்று பிற்பகல் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் சாத்தான்குளத்தில் உள்ள ஜெயராஜ் வீட்டுக்கு சென்றார். அங்கு வைக்கப்பட்டிருந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் திருவுருவ படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய அவர், ஜெயராஜ் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பிறகு 5 லட்சம் ரூபாய் நிதி வழங்கினார்.

  • நாட்டின் பாதுகாப்பு பணியில் உறுதியான நிலைப்பாடு பிரதமரின் முயற்சிக்கு மக்கள் துணை நிற்க வேண்டும்: ஜி.கே.வாசன் வேண்டுகோள்
    on July 5, 2020 at 12:07 am

    சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: எல்லைக்கு சென்ற பிரதமர் மோடி படை  வீரர்களை சந்தித்து  அவர்களது தீர தியாக உணர்வுகளை  பாராட்டியுள்ளார். இச்செயல் நமது ராணுவ வீரர்களுக்கு புதிய உற்சாகத்தையும்,  புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் அங்கு சிசிச்சை அமைதியை நாடும் தேசம் நம் இந்தியா. ஆனால் அமைதிக்குப் பங்கம் ஏற்பட்டால்  தக்க பதிலடியும் தருவோம் என்ற உறுதியான நிலைப்பாட்டை உலகுக்கு் உணர்த்தியுள்ளார். இது தேசத்தின் வலிமையை வெளிப்படுத்தும் வரவேற்புக்குரிய செயல். அதோடு இமயமலை உச்சியில் நின்று கொண்டு திருக்குறளை மேற்கோள்  காட்டி பேசியுள்ளார். இது தமிழுக்கும், தமிழனுக்கும் பெருமை.  தேசப் பாதுகாப்பு பணியில் உறுதியான நிலைப்பாட்டை மேற்கொண்டு வரும் பிரதமரின்  முயற்சிக்கு மக்கள் துணை நிற்க வேண்டும்.

  • தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்: மத்திய அரசின் நிலையை எதிர்க்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
    on July 5, 2020 at 12:06 am

    சென்னை:  பாமக நிறுவனர் ராமதாஸ்வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட  வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டைப் பெறுவதற்கு ‘கிரீமிலேயர்’ வரம்பைக் கணக்கிடுவதில் சம்பளத்தையும் சேர்த்துக்கொள்ள மத்திய அரசு  திட்டமிட்டுள்ள நிலையில், அதை கடுமையாக எதிர்த்து வந்த தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், இப்போது எதிர்ப்பைக் கைவிட்டு, ஆதரிக்க  முடிவு செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அண்மையில் நடைபெற்ற  பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் கூட்டத்தில், கிரீமிலேயரைக் கணக்கிட  சம்பளமும் சேர்த்துக் கொள்ளப்படும் என்ற மத்திய அரசின் திட்டத்திற்கான எதிர்ப்பை திரும்பப் பெற தீர்மானிக்கப்பட்டுள்ளது. பின்னர் மத்திய அரசின் முடிவு அரசாணையாக வெளியிடப்பட்டு விடும். அவ்வாறு வெளியிடப்பட்டால் மாத வருமானம் 67 ஆயிரத்திற்கும் கூடுதலாக  உள்ள குடும்பங்கள் கிரீமிலேயராக கருதப்பட்டு, அவர்களுக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்படும். பிற்படுத்தப்பட்ட மக்களின் நலன்களை காப்பது தான்  பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பணியாகும். இதை உணர்ந்து ‘கிரீமிலேயர்’ வரம்பைக் கணக்கிடுவதில் சம்பளத்தையும் சேர்க்க வேண்டும் என்ற  மத்திய அரசின் நிலைப்பாட்டைஅது கடுமையாக எதிர்க்க வேண்டும். அதன் மூலம் மத்திய அரசு அதன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வதை  உறுதி  செய்ய வேண்டும்.

Continue Reading
Dinakaran Tamil News Paper-Logo Dinakaran Tamil Newspaper, Latest Tamil News Dinakaran Latest Tamil News
  • கன்னியாகுமரி மீனவர்கள் கேரளாவில் நுழைவதற்கு அனுமதி அளிக்க கோரி கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
    on July 8, 2020 at 9:24 pm

    சென்னை: கன்னியாகுமரி மீனவர்கள் கேரளாவில் நுழைவதற்கு அனுமதி அளிக்க கோரி கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். கேரளாவில் நிறுத்தப்பட்டுள்ள படகுகளை பழுது பார்ப்பதற்கு கன்னியாகுமரி மீனவர்களுக்கு அனுமதி தர வேண்டும். ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் மீனவர்கள் கேரளாவில் மீன் பிடிக்க அனுமதி அளிக்க வேண்டும் என கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

  • சுற்றுசூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் மகனுக்கு கொரோனா தொற்று உறுதி
    on July 8, 2020 at 9:18 pm

    சென்னை: சுற்றுசூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் மகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றியவர் கருப்பணன் மகன். கொரோனா உறுதியானதை தொடர்ந்து கருப்பணன் மகன் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார்.

  • மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 6,603 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
    on July 8, 2020 at 9:05 pm

    மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 23 ஆயிரத்தை  கடந்தது. மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் மட்டும் 6,603 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,23,724- ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 198 பேர் உயிரிழந்த நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கை 9,448-ஆக அதிகரித்துள்ளது.

  • ஆக்கிரமிப்பு விவகாரத்தில் சீனாவுக்கு தக்க பதிலடி தந்தது இந்தியா: அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்
    on July 8, 2020 at 8:47 pm

    வாஷிங்டன்: ஆக்கிரமிப்பு விவகாரத்தில் சீனாவுக்கு தக்க பதிலடி தந்தது இந்தியா என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். பூடான் உள்ளிட்ட நாடுகளை அச்சுறுத்தும் சீனாவுக்கு பதிலளிக்க உலகம் ஒன்றுபட வேண்டும் எனவும் கூறினார்.

  • சாத்தான்குளம் கொலை வழக்கில் தலைமைக்காவலர் ரேவதியிடம் சிபிசிஐடி மீண்டும் விசாரணை
    on July 8, 2020 at 8:43 pm

    நெல்லை: சாத்தான்குளம் காவல்நிலைய தலைமைக்காவலர் ரேவதி சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜர் ஆகியுள்ளார். சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை தொடர்பான விசாரணைக்கு ரேவதி ஆஜராகியுள்ளார்.

  • கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் மத்தியக் குழுவினர் ஆய்வு
    on July 8, 2020 at 8:32 pm

    சென்னை: கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் செங்கல்பட்டில் மத்திய குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். செங்கல்பட்டு நகரில் பாதிப்பு அதிகம் உள்ள நத்தம், தட்டான்மலை தெரு உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தனர். கொரோனா பாதித்த இடங்களை பார்வையிட்ட மத்திய குழு செங்கல்பட்டு மருத்துவமனையில் ஆய்வு செய்து வருகின்றனர். சென்னை புறநகர் பகுதியில் உள்ள பல்லாவரம், பரங்கிமலை, தாம்பரம், செம்பாக்கம், அனங்காபுத்தூர், பம்மல், சிட்லாக்கம், மீனம்பாக்கம், மேடவாக்கம், பெருங்களத்துர், பீர்க்கன்காரனை உள்ளிட்ட மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் நாளுக்குநாள் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. இந்நிலையில் நோய்தொற்றை தடுக்க செங்கல்பட்டு மாவட்டத்தில் முழு ஊரடங்கு ஜூலை 5ம் தேதி வரை அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் நோய்தொற்று குறையவில்லை.  போலீஸ், நகராட்சி ஆணையர், அரசு டாக்டர்கள், அரசு ஊழியர்கள் என பலருக்கும் நோய்தொற்று ஏற்பட்டுள்ளது. வயதானவர்களை கொரோனா வைரஸ் அதிகம் தாக்கும் என்று கூறினர். ஆனால் இளைஞர்களையும் விட்டுவைக்கவில்லை. இதனால் அனைத்து தரப்பு மக்களும் கலக்கத்தில் உள்ளனர். இந்நிலையில் மாவட்டத்தில் இறப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை குழு, செங்கல்பட்டில் தொற்று பரவல், கொரோனா உயிரிழப்பு மற்றும் கட்டமைப்பு வசதிகள் குறித்து மத்தியகுழு ஆய்வு நடத்தனர். செங்கல்பட்டு நகரில் பாதிப்பு அதிகம் உள்ள நத்தம், தட்டான்மலை தெரு உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தனர்.

  • சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த சம்பவத்தில் மேலும் 5 போலீசார் கைது
    on July 8, 2020 at 8:08 pm

    சாத்தான்குளம்: சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த சம்பவத்தில் மேலும் 5 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல் உதவி ஆய்வாளர் பால்துரை, காவலர்கள் தாமஸ், செல்லத்துரை, சாமத்துரை, வெயில்முத்து ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்படுகின்றனர். 5 பேரிடமும் இன்று காலை முதல் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்திய பின் கைது செய்யப்பட்டுள்ளனர். 5 பேர் மீதும் கொலை உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை இந்த வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  • அரசு பணிகளில் 27% ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு குறித்து பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
    on July 8, 2020 at 8:03 pm

    சென்னை: அரசு பணிகளில் 27% ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு குறித்து பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். ஓபிசி பிரிவினருக்கு தமிழக அரசின் இடஒதுக்கீடு முறையை மத்திய அரசு பணியிலும் பின்பற்ற வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  • 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 190 பாடங்களை 30% குறைக்கும் முடிவு 2020-21 கல்வியாண்டுக்கு மட்டுமே பொருந்தும்: சிபிஎஸ்இ விளக்கம்
    on July 8, 2020 at 7:53 pm

    டெல்லி: 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 190 பாடங்களை 30% குறைக்கும் முடிவு 2020-21 கல்வியாண்டுக்கு மட்டுமே பொருந்தும் என சிபிஎஸ்இ விளக்கம் அளித்துள்ளது. கொரோனா காரணமாக மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள கற்றல், இடைவெளி, தேர்வுகள் தொடர்பான மன அழுத்தத்தை குறைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. குறைக்கப்பட்ட பாடப் பகுதியில் இருந்து எவ்வித கேள்வியும் தேர்வுகளில் கேட்கப்படாது எனவும் கூறியுள்ளது.

  • சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கை நாளை விசாரிக்கிறது ஐகோர்ட் கிளை
    on July 8, 2020 at 7:42 pm

    மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கை ஐகோர்ட் மதுரைக்கிளை நாளை விசாரிக்கிறது. நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம், அமர்வில் வழக்கு நாளை விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

  • கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் செங்கல்பட்டில் மத்தியகுழுவினர் ஆய்வு
    on July 8, 2020 at 7:33 pm

    செங்கல்பட்டு: கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் செங்கல்பட்டில் மத்திய குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். செங்கல்பட்டு நகரில் பாதிப்பு அதிகம் உள்ள நத்தம், தட்டான்மலை தெரு உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தனர். கொரோனா பாதித்த இடங்களை பார்வையிட்ட மத்திய குழு செங்கல்பட்டு மருத்துவமனையில் ஆய்வு செய்து வருகின்றனர். 

  • கடந்த மார்ச் 24-ம் தேதி தேர்வு எழுத முடியாத +2 மாணவர்களுக்கு வரும் 27-ம் தேதி தேர்வு நடைபெறும்: அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
    on July 8, 2020 at 7:25 pm

    சென்னை: கடந்த மார்ச் 24-ம் தேதி தேர்வு எழுத முடியாத +2 மாணவர்களுக்கு வரும் 27-ம் தேதி தேர்வு நடைபெறும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. 13 முதல் 17 வரை தேர்வு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • கேரளாவில் மேலும் புதிதாக 301 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
    on July 8, 2020 at 7:11 pm

    திருவனந்தபுரம்: கேரளாவில் மேலும் புதிதாக 301 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே. சைலஜா தெரிவித்துள்ளார். இன்று ஒரே நாளில் 107 பேர் குணமடைந்துள்ள நிலையில் இதுவரை குணமானவர்களின் எண்ணிக்கை 3561-ஆக அதிகரித்துள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் தொற்று உறுதியாகி 2605-பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் கூறினார்.

  • மாநில பங்களிப்புக்கு பிந்தைய வருவாய் பற்றாக்குறை மானியமாக தமிழகத்துக்கு ரூ.335.41 கோடி வழங்க மத்திய நிதியமைச்சகம் உத்தரவு
    on July 8, 2020 at 6:51 pm

    டெல்லி: மாநில பங்களிப்புக்கு பிந்தைய வருவாய் பற்றாக்குறை மானியமாக தமிழகத்துக்கு ரூ.335.41 கோடி வழங்க மத்திய நிதியமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மாநில பங்களிப்புக்கு பிந்தைய வருவாய் பற்றாக்குறை மானியமாக மாநிலங்களுக்கு ரூ.6,195,08 கோடி வழங்க நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

  • மும்பை தாராவியில் இன்று புதிதாக 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
    on July 8, 2020 at 6:42 pm

    மும்பை: மும்பை தாராவியில் இன்று புதிதாக 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தாராவியில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,338-ஆக அதிகரித்துள்ளது. மேலும் 329 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில் 86 பேர் உயிரிழந்துள்ளனர்.

  • வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 4,030 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி
    on July 8, 2020 at 6:15 pm

    சென்னை: வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 4,030 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த 476 பேர், உள்நாட்டு விமானங்களில் இருந்து வந்த 379 பேர், ரயில், பேருந்து, சொந்த வாகனங்கள் மூலம் வந்த 3175 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து ரயில், விமானம், பேருந்து மற்றும் இதர வாகனங்களில் தமிழகம் வந்தவர்களின் எண்ணிக்கை 3,29,388-ஆக அதிகரித்துள்ளது.

  • கொரோனாவால் பாதிக்கப்பட்டு வேறு நோய் பாதிப்பு இல்லாத 5 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்: சுகாதாரத்துறை
    on July 8, 2020 at 6:11 pm

    சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 64 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 1,700-ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழந்தவர்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வேறு நோய் பாதிப்பு இல்லாத 5 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர் என சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 3,051 பேர் டிஸ்சார்ஜ்; குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 74,167-ஆக உயர்வு: சுகாதாரத்துறை
    on July 8, 2020 at 6:08 pm

    சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 74-ஆயிரத்தை கடந்தது. தமிழகத்தில் இன்று 3,051 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 74,167-ஆக அதிகரித்துள்ளது.

  • தமிழகத்தில் மேலும் 3,756 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,22,350 ஆக உயர்வு: சுகாதாரத்துறை
    on July 8, 2020 at 6:06 pm

    சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 22-ஆயிரத்தை கடந்தது. தமிழகத்தில் மேலும் 3,756 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,22,350ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 64 பேர் உயிரிழப்பு; இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 1,700-ஆக அதிகரித்துள்ளது.

  • சென்னையில் மேலும் 1,261 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72,500-ஆக அதிகரிப்பு: சுகாதாரத்துறை
    on July 8, 2020 at 6:06 pm

    சென்னை: சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72ஆயிரத்தை கடந்தது. இந்நிலையில் சென்னையில் இன்று மட்டும் 1,261 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72,500-ஆக அதிகரித்துள்ளது.

Continue Reading
Buddakan The Experience A towering gilded statue of the Buddha generates elegant calm in this 175-seat, Pan Asian restaurant with sleek, modern decor. Immensely popular, Buddakan is a restaurant that is great for both large parties and intimate dinners. Located in the Continue Reading Morimoto Stephen Starr creative Japanese restaurant has garnered all kinds of national and international attention since opening a few years back. Located a block from Independence Hall on Chestnut Street, Morimoto has an interior - awash in glass and colors - Continue Reading

POPULAR NEWS

ADVERTISEMENT 300X250

NEWSLETTER

Subscribe us to get our latest news, videos and many more!

GADGETS

Gadgets

Ever undertakes laborious

Sed ut perspiciatis unde omnis iste natus error sit voluptatem accusantium doloremque laudantium, totam rem aperiam, eaque ipsa quae

SPORTS

WORLD NEWS

INSTAGRAM FEED

Follow us @xtheme.us