Login

Lost your password?
Don't have an account? Sign Up

Dinakaran Crime Tamil News

  • திற்பரப்பு அருவியில் குளிக்க தடை நீடிப்பு
    on December 8, 2022 at 12:03 am

    குலசேகரம்: குமரி  மாவட்டத்தில் உள்ள முக்கிய இயற்கை சுற்றுலாத்தலம் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. திற்பரப்பு  அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. 2வது நாளாக திற்பரப்பு அருவியில்  அபாய கட்டத்தை தாண்டி தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை தொடர்கிறது.

  • பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
    on December 8, 2022 at 12:03 am

    சேலம்: சேலம் இரும்பாலையில் பாதுகாப்பு படை வீரராக பணியாற்றிய தேனி மாவட்டம், பெரியகுளம், அழகர்சாமிபுரத்தை சேர்ந்த சக்திவேல் (36) நேற்று மாலை இன்சாஸ் ரக துப்பாக்கியால், திடீரென சுட்டுக்கொண்டு உயிரிழந்தார். இவருக்கு சித்ரா(35) என்ற மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர்.

  • 5 மருத்துவ கல்லூரி ‘டீன்கள்’ மாற்றம்
    on December 8, 2022 at 12:03 am

    சென்னை: தமிழக மருத்துவ கல்வி இயக்குனர் சாந்திமலர் வெளியிட்டுள்ள அறிக்கை:  திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் திருமால் பாபு, வேலூர் அரசு மருத்துவ கல்லூரிக்கு முதல்வராகவும், கூடுதல் மருத்துவ இயக்குநராக இருந்து சுகந்தி ராஜகுமாரி கன்னியாகுமரிக்கும், குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி முதல்வர் வள்ளி சத்தியமூர்த்தி பணியிடமாற்றம் செய்து ஈரோடு மருத்துவக் கல்லூரி முதல்வராகவும், பெருந்துறை மருத்துவ கல்லூரி முதல்வர் மணி பணியிடமாற்றம் செய்து குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி முதல்வராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், ஆசாரிபள்ளம்  மருத்துவ கல்லூரி முதல்வர் சாந்தராமன்  கூடுதல் மருத்துவ கல்வி இயக்குநராக பதவி உயர்வு அளித்து நியமிக்கப்பட்டுள்ளார்.

  • கனமழை எச்சரிக்கை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் நாளை(08-12-2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
    on December 7, 2022 at 9:44 pm

    தஞ்சை: கனமழை எச்சரிக்கை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் நாளை(08-12-2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை காரணமாக ஏற்கனவே திருவாரூர் மாவட்டத்தில் நாளை(08-12-2022) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

  • சென்னையில் இருந்து 700 கி.மீ. தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
    on December 7, 2022 at 8:58 pm

    டெல்லி: சென்னையில் இருந்து 700 கி.மீ. தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து வருகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் நாளை(08-12-2022) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
    on December 7, 2022 at 8:51 pm

    திருவாரூர்: கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் நாளை(08-12-2022) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளை மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளதையடுத்து திருவாரூர் மாவட்டத்தில் நாளை(08-12-2022) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

  • நடப்பாண்டில் 3வது முறையாக முழுகொள்ளளவான 120 அடியை எட்டியது மேட்டூர் அணை!
    on December 7, 2022 at 7:41 pm

    சேலம்: மேட்டூர் அணை நடப்பாண்டில் 3வது முறையாக முழுகொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் 10,662 கனஅடி நீரும் அணை சுரங்க மின்நிலையம் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

  • ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் -1க்கான தேர்வு முடிவுகள் வெளியீடு
    on December 7, 2022 at 7:38 pm

    சென்னை:  ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் -1க்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன. ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் -1 கணினி வழியாக அக்.15 முதல் 19 வரை காலை, மாலை என இருவேளைகளில் நடைபெற்றது. 2022க்கான  தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வை ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 533 பேர் எழுதினர்.

  • ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் -1க்கான தேர்வு முடிவுகள் வெளியீடு
    on December 7, 2022 at 7:18 pm

    சென்னை:  ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் -1க்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன. ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் -1 கணினி வழியாக அக்.15 முதல் 19 வரை காலை, மாலை என இருவேளைகளில் நடைபெற்றது. 2022க்கான  தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வை ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 533 பேர் எழுதினர்.

  • 5093 நிவாரண முகாம்கள், 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் அனைத்து மாவட்டங்களிலும் தயார் நிலையில் உள்ளன: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்
    on December 7, 2022 at 7:13 pm

    சென்னை: 5093 நிவாரண முகாம்கள், 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் அனைத்து மாவட்டங்களிலும் தயார் நிலையில் உள்ளன. தங்கு தடையின்றி குடிநீர் வழங்குவதற்கு தேவையான ஜெனரேட்டர்கள் வைத்திருக்க வேண்டும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறியுள்ளார். பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

  • ஆன்லைன் விளையாட்டு நிறுவன பிரதிநிதிகள் ஆளுநர் ரவியுடன் சந்திப்பு!
    on December 7, 2022 at 7:08 pm

    சென்னை: ஆன்லைன் விளையாட்டு நிறுவன நிர்வாகிகளுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு மேற்கொண்டார். ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் குறித்து பேசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்யும் மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் நிலையில் நடைபெற்ற சந்திப்பால் சர்ச்சை கிளம்பியுள்ளது.

  • ஆவடி தொகுதி தேர்தல் வழக்கு: முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம்
    on December 7, 2022 at 6:43 pm

    ஆவடி: ஆவடி தொகுதி தேர்தல் வழக்கில் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்துள்ளார். 2016ல் நடந்த தேர்தலில் மாஃபா பாண்டியராஜன் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் சா.மு.நாசர் வழக்கு தொடர்ந்துள்ளார். தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட ரூ.28 லட்சத்திற்கும் மேல் செலவு செய்துள்ளதாக கூறிய குற்றச்சாட்டே தவறு என மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார். அமைச்சர் சா.மு.நாசர் தரப்பின் குறுக்கு விசாரணை முடிவடையாததால் வழக்கு விசாரணை நாளைக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

  • மத்திய பிரதேச மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 8 வயது சிறுவனை மீட்கும் பணி தீவிரம்
    on December 7, 2022 at 6:36 pm

    போபால்: மத்திய பிரதேசம் மாநிலம் பேதுல் பகுதியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 8 வயது சிறுவனை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பீட்டல் அருகே மாண்ட்வி கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள சிறுவன் தான்மே சாகுவை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளனர். சிறுவன் உடல்நிலை சீராக உள்ளதாகவும் ஓரிரு மணி நேரத்தில் சிறுவன் மீட்கப்படலாம் என எஸ்பி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

  • மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம்: போலீசார் எச்சரிக்கை
    on December 7, 2022 at 6:28 pm

    காரைக்கால்: காரைக்காலில் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என போலீசார் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் கடலுக்கு சென்ற மீனவர்கள் உடனே கரை திரும்புமாறும் மீனவ கிராமங்களில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

  • 1 - 8ம் வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை மீண்டும் வழங்கிட வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
    on December 7, 2022 at 5:59 pm

    சென்னை: 1 - 8ம் வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை மீண்டும் வழங்கிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மெட்ரிக் கல்விக்கு முந்தைய கல்வி உதவித்தொகையை ஒன்றிய அரசு திடீரென ரத்து செய்துள்ளதை கைவிட வேண்டும். தற்போது 9, 10ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே கல்வி உதவித்தொகை பெற தகுதி உடையவர்களாக உள்ளனர். 9,10ம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித் தொகை என்பது தொடக்கக் கல்வியை ஊக்கப்படுத்துவதற்கு எதிராக அமைந்துவிடும் என ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

  • டிச. 9, 10ம் தேதிகளில் சென்னையில் மிக மிக பலத்த மழை பெய்யக்கூடும்: தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தகவல்
    on December 7, 2022 at 5:15 pm

    சென்னை: டிசம்பர் 9, 10ம் தேதிகளில் சென்னையில் மிக மிக பலத்த மழை பெய்யக்கூடும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். சென்னையில் நாளை மதியம் அல்லது இரவு நேரம் மழை பெய்ய தொடங்கும். மாமல்லபுரம் - பழவேற்காடு இடையே 10ம் தேதி காலை புயல் கரையை கடக்கும். கரையை நெருங்கும் போது புயலின் மையப் பகுதி சென்னையை நோக்கி நகர வாய்ப்புள்ளதால் மிக மிக பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறினார்.

  • சேலம் எஸ்.பி. நேரில் ஆஜராக வேண்டும் என ஆணையம் அனுப்பிய சம்மனுக்கு தடை
    on December 7, 2022 at 5:08 pm

    சேலம்: சேலம் எஸ்.பி. நேரில் ஆஜராக வேண்டும் என தமிழ்நாடு தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஆணையம் அனுப்பிய சம்மனுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கோயிலில் அனுமதி தொடர்பான புகாரில் ஆஜராக வேண்டும் என சேலம் எஸ்.பி.க்கு ஆணையம் சம்மன் அனுப்பி இருந்தது.

  • தமிழகத்தில் கடந்த 3 ஆண்டில் ஒன்றிய அரசின் திட்டத்தில் சாலை அமைக்க ரூ.2,994.13 கோடி செலவு..!!
    on December 7, 2022 at 5:06 pm

    டெல்லி: தமிழகத்தில் கடந்த 3 ஆண்டில் ஒன்றிய அரசின் திட்டத்தில் சாலை அமைக்க ரூ.2,994.13 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு ஊரக வளர்ச்சிப் பணி அமைச்சகம் தகவல் தெரிவித்திருக்கிறது.

  • புதிதாக வாங்கிய டிவி ஒரு வாரத்தில் பழுதானதால் மன உளைச்சலுக்கு ஆளானவருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு தர உத்தரவு..!!
    on December 7, 2022 at 4:48 pm

    சென்னை: புதிதாக வாங்கிய டிவி ஒரு வாரத்தில் பழுதானதால் மன உளைச்சலுக்கு ஆளானவருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு தர உத்தரவிடப்பட்டுள்ளது. மனுதாரருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க ரிலையன்ஸ் ரீட்டெய்ல், பிலிப்ஸ் டிவி நிறுவனங்களுக்கு நுகர்வோர் கோர்ட் ஆணையிட்டுள்ளது. சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் செல்வக்குமாரசாமி, ரிலையன்ஸ் ஷோரூமில் 2017ல் புதிதாக டிவி வாங்கியுள்ளார். புதிதாக வாங்கிய டிவி ஒரு வாரத்தில் பழுதான நிலையில் அது சரி செய்யப்பட்டு மீண்டும் பழுதானதாக புகார் தெரிவிக்கப்பட்டது.

  • தமிழ்நாட்டில் குமரி, நெல்லை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
    on December 7, 2022 at 4:37 pm

    சென்னை: தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகையில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தினகரன் ஈரோடு மாவட்ட செய்திகள் | தினகரன் குற்றச் செய்திகள் | தினகரன் குற்றச் செய்திகள் pdf | தினகரன் குற்றச் செய்திகள் live | தினகரன் குற்றச் செய்திகள் today

admin
Author: admin

https://www.erodedistrict.com

Leave a Comment

Your email address will not be published.

*
*