Dinakaran Latest Tamil News
- பெண்ணின் கன்னத்தை கடித்தவருக்கு வலைon January 19, 2021 at 3:17 am
சென்னை: அமைந்தகரை முத்து இருளாண்டி காலனி 1வது பிரதான சாலையை சேர்ந்தவர் ராணி (47), (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கணவர் இறந்துவிட்டார். தனது இரண்டு மகன்களுடன் தனியாக வசித்து வருகிறார். இரண்டு மகன்களும் வெளியூர் வேலைக்கு சென்று விட்டனர். இந்நிலையில் எதிர் வீட்டில் வசித்து வரும் இருதயராஜ் (50) மின் ஊழியர் மது போதையில் கடந்த 14ம் தேதி இரவு உதவி கேட்பது போல் நடித்து ராணி வீட்டிற்குள் புகுந்து பாலியல் தொந்தரவு செய்துள்ளார். ராணி அதிர்ச்சியடைந்து வெளியே ஓடிவந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இருதயராஜ் ராணியின் கன்னத்தை கடித்து மிரட்டல் விடுத்து தப்பினார். புகாரின்பேரில் சூளைபோலீசார் இருதயராைஜ தேடி வருகின்றனர்.
- குஜராத்தில் உள்ள புகழ்பெற்ற சோம்நாத் கோவில் அறக்கட்டளையின் தலைவராக நியமிக்கப்படுகிறார் பிரதமர் மோடிon January 18, 2021 at 9:26 pm
குஜராத்: குஜராத்தில் உள்ள புகழ்பெற்ற சோம்நாத் கோவில் அறக்கட்டளையின் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி நியமிக்கப்படுகிறார். மோடி சோம்நாத் கோவில் தலைவராக நியமிக்கப்பட இருப்பதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். நரேந்திர மோடியின் தலைமையில் சோம்நாத் கோவில் அறக்கட்டளை மேலும் சிறப்படையும் எனவும் அமித்ஷா கருத்து தெரிவித்துள்ளார்.
- திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 20ம் தேதி முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்துக்கொள்ளலாம் என தேவஸ்தானம் அறிவிப்புon January 18, 2021 at 9:20 pm
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 20ம் தேதி முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்துக்கொள்ளலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிப்ரவரி மாத சிறப்பு தரிசனத்துக்கான 300 ரூபாய் டிக்கெட்டுகள் வரும் 20ம் தேதி முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்துக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது.
- இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட இருவர் உயிரிழப்புon January 18, 2021 at 7:58 pm
டெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட இருவர் உயிரிழந்துள்ளனர். உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த 52 வயது நபரும், கர்நாடகாவை சேர்ந்த 43 வயது நபரும் உயிரிழந்துள்ளனர். உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த நபர் தடுப்பூசியால் உயிரிழக்கவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.
- தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 10,256 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல்on January 18, 2021 at 7:58 pm
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 10,256 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி திட்டத்தின் 3-வது நாளான இன்று, தமிழகத்தில் கோவிஷீல்டு தடுப்பூசியை 10,051 பேர், கோவாக்ஸின் தடுப்பூசியை 205 பேர் போட்டுக்கொண்டனர்.
- டெல்லியில் அமித்ஷாவுடன் முதல்வர் பழனிசாமி சந்திப்புon January 18, 2021 at 7:31 pm
டெல்லி: டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் முதல்வர் பழனிசாமி சந்தித்து பேசி வருகிறார். பிரதமர் மோடியை நாளை காலை சந்திக்க உள்ள நிலையில் அமித்ஷாவுடன் சந்தித்து பேசி வருகிறார்.
- சென்னையில் இன்று மட்டும் 801 பேருக்கு கொரோனா தடுப்பூசிon January 18, 2021 at 7:15 pm
சென்னை: சென்னையில் இன்று மட்டும் 801 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் இதுவரை தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிக்கை 1746-ஆக அதிகரித்துள்ளது.
- பத்ம விபூஷண் விருதை திருப்பியளிக்க வாய்ப்புள்ளதாக வெளியான தகவலுக்கு இளையராஜா மறுப்புon January 18, 2021 at 6:40 pm
சென்னை: பத்ம விபூஷண் விருதை திருப்பியளிக்க வாய்ப்புள்ளதாக வெளியான தகவலுக்கு இசையமைப்பாளர் இளையராஜா மறுப்பு தெரிவித்துள்ளார். பிரசாத் ஸ்டூடியோ விவகாரத்தில் இளையராஜா மனஉளைச்சலடைந்து விருதை திருப்பியளிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.
- தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 551 பேருக்கு கொரோனா தொற்று உறுதிon January 18, 2021 at 6:08 pm
சென்னை: தமிழகத்தில் மேலும் 551 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,31,323- ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 8 பேர் பலியான நிலையில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,272-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 8,13,326- பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 5,725- பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- மேற்கு வங்க தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸுக்கு சமாஜ்வாதி கட்சி ஆதரவுon January 18, 2021 at 5:56 pm
கொல்கத்தா: மேற்கு வங்க தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸுக்கு ஆதரவு அளிப்பதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார். வெறுப்பை பரப்பி வெற்றி பெற நினைக்கும் பா.ஜ.க-வை வீழ்த்த மம்தா பானர்ஜிக்கு ஆதரவு அளிக்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
- விவசாயிகளுக்கு காப்பீட்டு திட்டத்தின் கீழ் இழப்பீடு கோரி ஜன.22-ம் தேதி போராட்டம்.: பி.ஆர்.பாண்டியன்on January 18, 2021 at 5:55 pm
சென்னை: சம்பா அறுவடையை இழந்த விவசாயிகளுக்கு காப்பீட்டு திட்டத்தின் கீழ் இழப்பீடு கோரி ஜன.22-ம் தேதி போராட்டம் நடத்த உள்ளதாக பி.ஆர்.பாண்டியன் தகவல் தெரிவித்துள்ளார். காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்.
- நீட் போலி மதிப்பெண் சான்று அளித்த விவகாரம்.: தேடப்பட்டு வந்த மாணவி பெங்களூருவில் கைதுon January 18, 2021 at 5:47 pm
பெங்களூரு: நீட் போலி மதிப்பெண் சான்று அளித்த விவகாரத்தில் தேடப்பட்டு வந்த மாணவி பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூருவில் தலைமறைவாக இருந்த ராமநாதபுரத்தை சேர்ந்த மாணவியை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 1-ம் தேதி மாணவியின் தந்தையும் பல் மருத்துவருமான பாலசந்திரன் கைது செய்யப்பட்டார்.
- குயின் வெப் சீரிஸ் ஜெயலலிதாவின் தனிப்பட்ட வாழக்கை மீது களங்கம் ஏற்படுத்துவதாக ஜெ.தீபா ஐகோர்ட்டில் புகார்on January 18, 2021 at 5:31 pm
சென்னை: குயின் இணைய தொடர் ஜெயலலிதாவின் தனிப்பட்ட வாழக்கை மீது களங்கம் ஏற்படுத்துவதாக ஜெ.தீபா சென்னை உயர்நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார். ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையை தாண்டி அவரது குடும்பத்தார் மீது குயின் தொடர் களங்கம் ஏற்படுத்துவதாக ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.
- தமிழ்நாடு வேளாண் உற்பத்தி மற்றும் விளைபொருள் ஒப்பந்த சட்டம் 2019-ஐ அமல்படுத்த தடை கோரிய வழக்கு !on January 18, 2021 at 5:22 pm
மதுரை: தமிழ்நாடு வேளாண் உற்பத்தி மற்றும் விளைபொருள் ஒப்பந்த சட்டம் 2019-ஐ அமல்படுத்த தடை கோரிய வழக்கு தொடரப்பட்டது. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் லூயிஸ் தொடர்ந்த வழக்கில் வேளாண்துறை செயலாளர் பதில் தர ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
- மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் மாநில நிதி அமைச்சர்களுடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனைon January 18, 2021 at 5:15 pm
டெல்லி: மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் மாநில நிதி அமைச்சர்களுடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். தமிழக அரசு சார்பில் துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓபிஎஸ் காணொலி மூலம் ஆலோசனையில் பங்கேற்று உள்ளார். பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் பற்றி மாநில அரசுகளிடம் கருத்துக்களை நிர்மலா சீதாராமன் கேட்பதாக கூறப்படுகிறது.
- சட்டகல்லுரி மாணவர்களுக்கு மின்னணு புத்தக வசதியை வழங்கக் கோரி மனு !on January 18, 2021 at 5:14 pm
மதுரை: சட்டகல்லுரி மாணவர்களுக்கு மின்னணு புத்தக வசதியை வழங்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் 8 வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்க அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மாணவர்களுக்கு பயனர் முகவரி வழங்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
- ஆளுநர் கிரண்பேடியின் மோசமான நடவடிக்கையால் புதுச்சேரி வளர்ச்சி பாதிப்பு.: அமைச்சர் கந்தசாமிon January 18, 2021 at 5:00 pm
புதுச்சேரி: ஆளுநர் கிரண்பேடியின் மோசமான நடவடிக்கையால் புதுச்சேரி வளர்ச்சியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் கந்தசாமி கூறியுள்ளார். புதுச்சேரி வளர்ச்சி பணிகளுக்கு கிரண்பேடி தடையாக இருந்ததுதான் திமுகவின் வருத்தத்திற்கு காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.
- பொதிகை டி.வி.யில் தினமும் 15 நிமிடங்கள் சமஸ்கிருத செய்தி ஒளிபரப்புவதை எதிர்த்த வழக்கு முடித்து வைப்பு !on January 18, 2021 at 4:53 pm
மதுரை: பொதிகை டி.வி.யில் தினமும் 15 நிமிடங்கள் சமஸ்கிருத செய்தி ஒளிபரப்புவதை எதிர்த்த வழக்கு ஐகோர்ட் கிளையில் முடித்து வைக்கப்பட்டுள்ளது. மனுதாரருக்கு தேவையில்லை எனில் தொலைக்காட்சியை அணைத்து வைத்துக் கொள்ளலாம், இதனை விட முக்கிய பிரச்சனைகள் பல உள்ளன என்று தலைமை நீதிபதி அமர்வு கருத்து தெரிவித்துள்ளார்.
- மெரினாவில் கடைகள் அமைப்பதற்கான விண்ணப்பங்களில் இருந்து குலுக்கல் முறையில் கடைகள் ஒதுக்கப்படும்.: மாநகராட்சிon January 18, 2021 at 4:47 pm
சென்னை: மெரினாவில் கடைகள் அமைப்பதற்கான விண்ணப்பங்களில் இருந்து குலுக்கல் முறையில் கடைகள் ஒதுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. 20, 21-ல் அண்ணா நகர் மண்டலம், ஷெனாய் நகர் அம்மா அரங்கில் குழுக்கள் முறையில் ஒதுக்கப்பட்டது.
- தமிழகத்தில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் கொரோனா தடுப்பூசியினை செலுத்திக்கொண்டார் !on January 18, 2021 at 4:45 pm
திருப்பூர்: தமிழகத்தில் முதல் மாவட்ட ஆட்சியராக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் கொரோனா தடுப்பூசியினை செலுத்திக்கொண்டார். இதனையடுத்து, அவர் கூறியதாவது: முன் களப்பணியாளர்கள் அச்சமின்றி கொரோனா தடுப்பூசியை செலுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.
தினகரன் செய்திகள் இன்று | தினகரன் இன்றைய செய்திகள் | தினகரன் பத்திரிகை செய்திகள் | தினகரன் செய்தித்தாள் இன்று | தினகரன் நியூஸ் பேப்பர் இன்று | தினகரன் இ பேப்பர் இன்று | தினகரன் நாளிதழ் நேற்று | தினகரன் இன்றைய முக்கிய செய்தி | தினகரன் செய்தித்தாள் pdf | தினகரன் பேப்பர் | தினகரன் நியூஸ் | தினகரன் epaper