Login

Lost your password?
Don't have an account? Sign Up

Dinakaran National Tamil News

  • நாட்டின் தலைநகர் டெல்லியில் நண்பகலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அதிர்ச்சி
    on June 20, 2021 at 3:06 pm

    டெல்லி: நாட்டின் தலைநகர் டெல்லியில் நண்பகலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். டெல்லியில் நிலநடுக்கம் 2.1 ரிக்டர் அளவாக பதிவானதாக மத்திய புவி அதிர்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

  • 7-வது சர்வதேச யோகா தினம்: நாளை நாட்டு மக்களிடம் உரை நிகழ்த்துகிறார் பிரதமர் மோடி
    on June 20, 2021 at 10:56 am

    டெல்லி: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி உரையாற்ற உள்ளதாக ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாளை உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. கொரோனா அச்சுறுத்தல் நிலவி வரும் நிலையில், 7-வது சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. நாளை நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரையாற்ற உள்ளார். அதோடு, மொராா்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனம் சாா்பில் நேரலையில் யோகா பயிற்சிகளும் செய்து காட்டப்பட உள்ளன. உடல்நலனுக்கு யோகா என்ற கருப்பொருளில் இந்த ஆண்டு சர்வதேச யோகா தினம் கடைப்படிக்கப்படுகிறது. இதில், மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் இணை அமைச்சர் கிரண் ரிஜிஜுவும் உரையாற்ற உள்ளார். உடல் நலத்திற்கான யோகா என்ற தலைப்பில் இந்த ஆண்டுக்கான யோகா டிரில் நிகழ்வுகள் நடைபெற உள்ளன. யோகா குருக்களான பாபா ராம்தேவ், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், ஜக்கி வாசுதேவன் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர். மேலும் சுமார் ஆயிரம் நிறுவனங்களில் யோகா பயிற்சி அளிக்க மத்திய ஆயுஷ் அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

  • அடுத்த ஆண்டில் 32 ரபேல் ரக போர் விமானங்கள் விமானப்படையில் சேர்க்கப்படும்: தளபதி ஆர்.கே.எஸ். பதாரியா தகவல்
    on June 20, 2021 at 10:10 am

    டெல்லி: அடுத்த ஆண்டில் 32 ரபேல் ரக போர் விமானங்கள் விமானப்படையில் சேர்க்கப்படும் என்று விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ். பதாரியா தெரிவித்தார். ஐதராபாத் அருகே தண்டிக்கல் என்ற இடத்தில் விமானப்படை அகாடமியில், ஒருங்கிணைந்த பட்டமளிப்பு அணிவகுப்பு நேற்று நடந்தது. இந்த அணிவகுப்பை விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ். பதாரியா பார்வையிட்டார். 36 ரபேல் போர் விமானங்களும் அடுத்த ஆண்டு இந்திய விமானப்படையில் சேர்த்துக்கொள்ளப்படும். இதுதான் முழுமையான இலக்கு ஆகும். இதை நான் ஏற்கனவே குறிப்பிட்டும் உள்ளேன். ஒன்றல்லது இரண்டு விமானங்கள் கொரோனா தொற்று பிரச்சினையால் வருவது சற்றே தாமதிக்கலாம். ஆனால் விமானங்களை அவர்கள் சப்ளை செய்வது உரிய நேரத்தில் நடந்து முடியும். எனவே ரபேல் போர் விமானங்களை விமானப்படையில் நாங்கள் திட்டமிட்டபடி சேர்த்துக்கொள்வோம் என கூறினார். கிழக்கு லடாக்கில் இந்திய சீன எல்லையில் நிலைமை எவ்வாறு இருக்கிறது என்று கேட்கிறீர்கள். இந்தப் பிரச்சினையில் இரு தரப்பிலும் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. எங்கள் முதல் முயற்சி என்பது பேச்சு வார்த்தையைத் தொடர்வதும், எஞ்சியுள்ள மோதல் பகுதிகளில் படைகளை விலக்கிக்கொள்வதும்தான். அதன்பின்னர் பதற்றம் தணிந்து விடும் என தெரிவித்தார். இந்திய விமானப்படையில் மிக முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதிநவீன தொழில்நுட்பங்கள் படையில் சேர்க்கப்படுகின்றன. இந்த பின்னணியில் இந்திய விமானப்படையின் தற்போதைய திறன்மேம்பாடு மிகப்பெரியது என தெரிவித்தார். 

  • தொடர்ச்சியாக 1 லட்சத்துக்கு கீழ் சென்ற கொரோனா: ஒரே நாளில் 60,753 பேர் பாதிப்பு, 1,576 பேர் உயிரிழப்பு: மத்திய சுகாதாரத்துறை அறிக்கை
    on June 20, 2021 at 9:29 am

    டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மேலும் 1,576 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், சிகிச்சை பெறுவோர், இறப்பு விகித நிலவரம் குறித்து தினமும் காலை 9 மணியளவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:* புதிதாக  58,419 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.* இதன் மூலம் நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,98,81,965 ஆக உயர்ந்தது.* புதிதாக 1,576 பேர் உயிரிழந்துள்ளனர்.* இதன் மூலம் நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,86,713 ஆக உயர்ந்துள்ளது.* தொற்றில் இருந்து ஒரே நாளில் 87,619 பேர் குணமடைந்துள்ளனர்.* இதன் மூலம் நாட்டின் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,87,66,009 ஆக உயர்ந்துள்ளது.* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 7,29,243 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.* நாட்டின் இதுவரை 27,66,93,572 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

  • உபி தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் ஒத்திகையால் 22 பேர் இறக்கவில்லை: விசாரணைக் குழு அறிக்கை
    on June 20, 2021 at 12:49 am

    ஆக்ரா:  உத்தர பிரதேச மாநிலம், ஆக்ராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஏப்ரல் 26, 27 தேதிகளில் தொடர்ச்சியாக ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 22 நோயாளிகள் உயிரிழந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதற்கிடையில், சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் உரிமையாளர், ‘ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதால், ஆக்சிஜன் இல்லாமல் தாக்கு பிடிக்கும் நோயாளிகள் யார் என்பதை கண்டறிவதற்காக 5 நிமிடங்கள் ஆக்சிஜன் சப்ளையை நிறுத்தும் ஒத்திகை செய்யப்பட்டது. அதில்தான், 22 நோயாளிகள் இறந்தனர்,’ என வீடியோவில் கூறியிருந்தார்.  இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய 4 பேர் கொண்ட குழுவின் அறிக்கையை ஆக்ரா மாவட்ட ஆட்சியர்  பிரபு என். சிங் நேற்று வெளியிட்டார். அதில், ‘உயிரிழந்த 22 நோயாளிகள் ஏற்கனவே கவலைக்கிடமாக சிகிச்சை பெற்று வந்தனர். மருத்துவமனையில் போதுமான ஆக்சிஜன் கையிருப்பில் இருந்துள்ளது. நோயாளிகளின் உறவினர்களும் ஆக்சிஜன் ஏற்பாடு செய்து வைத்திருந்தனர். ஆக்சிஜன் சப்ளை தடைபட்டது என்பதற்கும், வேண்டும் என்றே நிறுத்தப்பட்டதாக சொல்லப்படும் குற்றச்சாட்டுக்கும் ஆதாரம் இல்லை’ என கூறப்பட்டுள்ளது. 

  • கடந்தாண்டில் ரூ.20,700 கோடி டெபாசிட் சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் பணம் குவித்தது உண்மையா? விளக்கம் கேட்டு மத்திய அரசு கடிதம்
    on June 20, 2021 at 12:48 am

    புதுடெல்லி: இந்தியா உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த  தொழிலதிபர்கள், நிறுவனங்கள் சொந்த நாட்டில் வருமான வரி செலுத்துவதில் இருந்து தப்பிப்பதற்காக சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கியில் கணக்கு வைத்து பணத்தை பதுக்குகின்றனர். கடந்த 2020ம் நிதியாண்டில் மட்டும், சுவிஸ் வங்கியில்  இந்தியர்கள் டெபாசிட் செய்த தொகை அதிகளவில் உயர்ந்துள்ளது. சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் வைப்புத் தொகையானது ரூ.20,700 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு ரூ.6,625 கோடியாக இருந்த இந்தியர்களின் வைப்புத்தொகையானது 2020ம் ஆண்டில் ரூ.20,700 கோடியாக உயர்ந்துள்ளதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டன. இது கடந்த 13 ஆண்டுகளில் மிக அதிகம். இதனை மறுத்துள்ள மத்திய நிதியமைச்சகம், ‘இந்த பணம் இந்தியர்களுடையதா, அல்லது வெளிநாடு  வாழ் இந்தியர்களுடையதா அல்லது மூன்றாம் நாடுகளில் உள்ள இந்திய நிறுவனங்களின் பணமா என்பது குறிப்பிடப்படவில்லை. இது தொடர்பாக விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது,’ என கூறி உள்ளது.

  • குல்பூஷன் ஜாதவ் மரண தண்டனை வழக்கு பாக். குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு பதிலடி
    on June 20, 2021 at 12:48 am

    புதுடெல்லி: இந்தியாவை சேர்ந்த இந்திய கடற்படை அதிகாரியான குல்பூஷன் ஜாதவ், பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டு, 2017ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இந்நிலையில், சர்வதேச நீதிமன்றத்தில் நடந்து வரும் மரண தண்டனை மேல்முறையீட்டு வழக்கில் ஆஜராவதற்கு வழக்கறிஞரை நியமித்துக் கொள்ளும் உரிமையை குல்பூஷனுக்கு வழங்கும் மசோதா, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்தியா, மசோதாவில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி, அவற்றை நிவர்த்தி செய்யும்படி பாகிஸ்தானிடம் கேட்டுக் கொண்டது. இதற்கு நேற்று பதில் அளித்துள்ள பாகிஸ்தான் அரசு, ‘குல்பூஷன் ஜாதவ் வழக்கில் சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பை இந்தியா தவறாக சித்தரிக்கிறது. சர்வதேச சட்டத்தின் கீழ் அனைத்து கடமைகளையும் நிறைவேற்றத் தயாராக இருக்கிறோம்’ என்று தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி அளித்துள்ள பதிலில், ‘‘சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி ஜாதவின் வழக்கை நடத்துவதற்காக வழக்கறிஞரை நியமிக்கும் மசோதா, விதிமுறைப்படி இல்லை. சர்வதேச சட்டத்தில் ஒரு அரசு தனது கடமைகளை சரியாக நிறைவேற்றியதா என்பதை உறுதி செய்ய, உள்நாட்டு கீழ் நீதிமன்றங்கள் நடுவராக இருக்க முடியாது,’’ என்றார்.

  • தேர்தல் நடைமுறையை தொடங்குவது பற்றி ஜம்மு காஷ்மீர் தலைவர்களுடன் 24ம் தேதி மோடி ஆலோசனை: அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு
    on June 20, 2021 at 12:47 am

    புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370ஏ சட்டப்பிரிவை ரத்து செய்த மத்திய அரசு, இந்த மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் என்ற இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. ஜம்முவில் இயல்பு நிலை திரும்பினால் மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும், சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படும் என மத்திய அரசு உறுதி அளித்து இருந்தது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் அனைத்து கட்சித் தலைவர்களின் கூட்டத்தை வரும் 24ம் தேதி பிரதமர் மோடி நடத்த திட்டமிட்டுள்ளார். இதற்கான அழைப்பு, மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா உள்ளிட்ட 14 தலைவர்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

  • மக்கள் அதிகம் கூடுவதால் தொற்று பரவும் அபாயம் ஊரடங்கை தளர்த்தினாலும் கண்காணிப்பு கட்டாயம்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு
    on June 20, 2021 at 12:46 am

    புதுடெல்லி: ‘ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2வது அலை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியதால், பரவலை கட்டுப்படுத்த அனைத்து மாநில அரசுகளும் முழு ஊரடங்கை அமல்படுத்தின. அதன் பலனாக, தற்போது பல்வேறு மாநிலங்களில் பாதிப்பும், பலியும் குறைந்துள்ளன. இதனால், முழு ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளன. இதனால், சந்தைகள், மார்க்கெட்டுகள், கோயில்கள், மதுக்கடைகளில் மக்கள் கூடுவதால் மீண்டும் கொரோனா  பாதிப்பு அதிகமாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் அஜய் பல்லா நேற்று கடிதம் அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது: கொரோனா பாதிப்பு குறைவை கருத்தில் கொண்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் கண்காணிப்பை தொடர்ந்து தீவிரப்படுத்த வேண்டும். இதில் அலட்சியம் காட்டிவிடக் கூடாது. மக்களின் வாழ்வாதாரத்திற்கு தளர்வுகள் அவசியம்தான். இருப்பினும் கண்காணிப்பை தவறவிட்டால் மீண்டும் ஆபத்தாகி விடும். அதேபோல், கொரோனா பரிசோதனையை தொடர்ந்து மேற்கொள்ளுதல், தடுப்பூசி செலுத்துவதை அதிகரித்தல், முகக்கவசம் அணிதலை கட்டாயப்படுத்தல், கைகளை சுத்தம் செய்தல், சமூக இடைவெளி கடைபிடித்தல் ஆகியவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இதனை மாநில அரசுகளின் தலைமை செயலாளர் கண்காணிக்க வேண்டும்.சில மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கும்போது சந்தை மற்றும் வியாபாரம் செய்யும் இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இவை மீண்டும் தீவிர தொற்று பரவலுக்கு வழிவகுக்கும் என்பதால், விதிமுறைகளை கடைபிடிப்பதில் எந்தவித விலக்கோ அல்லது சமரசமோ இருக்கக் கூடாது. பாதிப்பு அதிகம் ஏற்பட வாய்ப்புள்ள இடங்களில் ஆரம்ப கட்டத்திலே கண்டறிந்து சிறுகுழுக்கள் மூலம் பரவலை குறைக்க உள்ளூர் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.*3 கோடியை நெருங்கிய கொரோனா மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று காலை 8 மணிக்கு வெளியிட்டுள்ள அறிக்கை:* கடந்த 24 மணி நேரத்தில் 60,753 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு 2 கோடியே 98 லட்சத்து 23 ஆயிரத்து 546 ஆக உயர்ந்துள்ளது.  * ஒரே நாளில் புதிதாக 1647 பேர் பலியாகி உள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 3 லட்சத்து 85 ஆயிரத்து 137 ஆக உயர்ந்துள்ளது. * தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2 கோடியே 86 லட்சத்து 78 ஆயிரத்து 390. கடந்த 37 நாட்களாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. * நாடு முழுவதும் இதுவரை 29 கோடியே 23 லட்சத்து 88 ஆயிரத்து 783 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.* மத்திய அரசு செயலாளர் பலிமத்திய தொழில் மற்றும் உள்வர்த்தகம் துறை செயலாளராக பணியாற்றி வந்தவர் குருபிரசாத் மொகாபாத்ரா (59). இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, கடந்த ஏப்ரல் மாதம் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். மத்திய அரசில் பணியில் இருக்கும்போது கொரோனாவால் இறந்த முதல் செயலாளர் இவர்தான். இவருடைய மறைவுக்கு பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.* வென்டிலேட்டர் வசதியை அறிய புதிய மென்பொருள்மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வென்டிலேட்டர் ஆதரவு தேவைப்படும் நோயாளிகளை அடையாளம்  காணவும், அவசர மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு தேவைகளை முன்கூட்டியே  கண்டறியவும் ‘கோவிட் தீவிரத்தன்மை மதிப்பெண்’ (COVID SEVERITY SCORE) என்ற  புதிய மென்பொருள் உருவாக்கப்பட்டு உள்ளது,’ என கூறப்பட்டுள்ளது.* மருத்துவர்களை தாக்கினால் கடும் நடவடிக்கைமத்திய உள்துறை செயலாளர் மாநிலங்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடும் மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள் மீது நாட்டின் பல்வேறு பகுதிகளில்  தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்கள் நடைபெறுகின்றன. இந்த தாக்குதலில் ஈடுபடுபவர்களின் மீது பெருந்தொற்று நோய் திருத்த சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது.

  • 2019 ஆண்டை விட 2020ல் அதிகம் இந்தியாவில் படிக்க குவியும் வெளிநாட்டு மாணவர்கள்: பிடெக் படிப்பு மீது மோகம்
    on June 20, 2021 at 12:46 am

    புதுடெல்லி:  இந்தியாவில் படிக்க வரும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்தியாவில் இருந்து மருத்துவம் உள்ளிட்ட  பல்வேறு படிப்புக்களுக்காக வெளிநாடு செல்வதற்கு அதிகம் பேர் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதே நேரத்தில் இந்தியாவில் படிப்பதற்கு வெளிநாட்டு மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இங்கு படிக்க வரும் வெளிநாட்டு மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து இருப்பது மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின் மூலம் தெரியவந்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு வரை 164 நாடுகளை சேர்ந்த மாணவர்கள் இந்தியாவுக்கு படிக்க வந்தனர். 2019-2020ம் கல்வியாண்டில், கொரோனா அச்சுறுத்தல் இருந்த போதிலும் 168 நாடுகளை சேர்ந்தவர்கள் வந்துள்ளனர். வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்ப துறையே இதற்கு பிரதான காரணமாகும். பெரும்பாலான மாணவர்கள் இந்தியாவில் பொறியியல் படிப்பதற்கு வருகின்றனர். குறிப்பாக, பிடெக் படிப்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.  கடந்தாண்டு இந்தியாவில் படித்த வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை 47 ஆயிரத்து 427 ஆக இருந்த நிலையில், இந்தாண்டு இந்த எண்ணிக்கை 49 ஆயிரத்து 348 ஆக உயர்ந்துள்ளது. பிடெக் பிரிவில் மட்டுமே 9,503 பேர் சேர்ந்துள்ளனர். பிஎஸ்சி.யில் 3,964 பேர், பிபிஏ.வில் 3,290 பேர் சேர்ந்துள்ளனர். இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டினரின் அடுத்த விருப்பமாக பிஇ உள்ளது. இதற்கு 2,596 பேர் விண்ணப்பித்துள்ளனர். பிபார்மா 2,451, பிஏ 2,295, பிசிஏ.வுக்கு 1,820 மாணவர்கள் வந்துள்ளனர். 2019-2020ம் ஆண்டில் 1,779 வெளிநாட்டு மாணவர்கள் இந்தியாவில் மருத்துவ படிப்பில் (எம்பிபிஎஸ்) சேர்ந்துள்ளனர். பிஎஸ்சி.யில் 1,109, பல் மருத்துவத்தில் 651 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.மருத்துவ படிப்புகளில் மாணவிகள் அதிகம்இந்தியாவில் மருத்துவ பிரிவுகளில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களில், மாணவிகளே அதிகம் இருக்கின்றனர். எம்பிபிஎஸ்.சில் 58.9 சதவீதம், பிஎஸ்சி நர்சிங் படிப்பில் 92.2%, பல் மருத்துவத்தில் 61.9 சதவீதம் மாணவிகள் உள்ளனர். அதே நேரம், பிஎச்டி.யில் 78.2%, எம்பிஏ 68.4%, எம்ஏ.வில் 60.2 சதவீதம் என மாணவிகளை விட மாணவர்களே அதிகம் படிக்கின்றனர். மேலும், எம்எஸ்சி.யில் 70.3 சதவீதமும், பிடெக்.கில் 83.8 சதவீதமும் மாணவர்கள் உள்ளனர்.

  • மத்திய அமைச்சர் பாதுகாப்பு வாகனங்கள் திடீர் வாபஸ்: கேரள அரசு அதிரடி
    on June 20, 2021 at 12:45 am

    திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் வந்த மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் முரளீதரனின் 2 பாதுகாப்பு வாகனங்களை கேரள அரசு வாபஸ் பெற்றது பரபரப்பை ஏற்படுத்தியது. பாஜ.வை சேர்ந்த முரளீதரன், வெளியுறவுத்துறை இணையமைச்சராக இருக்கிறார். நேற்று இவர் திருவனந்தபுரம் வந்தார். இவருக்கு வழக்கமாக பைலட் மற்றும் எஸ்கார்ட் வாகனங்கள் முன்னும், பின்னுமாக பாதுகாப்புக்கு செல்லும். நேற்று முரளீதரன் திருவனந்தபுரம் வந்தபோது, அவருக்கு இந்த 2 பாதுகாப்பு வாகனங்களும் வழங்கப்படவில்லை. வழக்கமாக அவருடன் செல்லும் பாதுகாவலரான பிஜு என்பவர் மட்டுமே இருந்துள்ளார்.பாதுகாப்பு வாகனங்கள் வரும் என்று கருதி சிறிது நேரம் அமைச்சர் முரளீதரன் விமான நிலையத்தில் காத்திருந்தார். ஆனால், நீண்ட நேரமாகியும் வாகனங்கள் வரவில்லை. இதையடுத்து, முரளீதரன் அவரது காரில் புறப்பட்டு சென்றார். அவருடன் பாதுகாவலர் பிஜுவும் சென்றார். திருவனந்தபுரம் பேக்கரி சந்திப்பு அருகே கார் சென்ற போது திடீரென காரை நிறுத்துமாறு கூறி தன்னுடைய பாதுகாவலர் பிஜுவை ரோட்டில் இறக்கி விட்டார். பாதுகாப்பு வாகனங்கள் தனக்கு இல்லாத நிலையில், கேரள அரசின் பாதுகாவலரும் தனக்குத் தேவையில்லை என்று முரளீதரன் கூறினார்.

  • சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் கணக்கிட புதிய தொழில்நுட்பம்
    on June 20, 2021 at 12:44 am

    புதுடெல்லி:  சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் நடைமுறையை சுலபமாக்க,புதிய கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த மாணவர்களுக்கு 10ம் வகுப்பு, 11ம் வகுப்பு இறுதி தேர்வு மற்றும் 12ம் வகுப்பில் பள்ளிகள் நடத்திய தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில், 30:30:40 என்ற விகிதத்தில் மதிப்பெண் வழங்கப்பட உள்ளது. இதற்கு உச்ச நீதிமன்றமும் அனுமதி அளித்துள்ளது. இந்த தேர்வு முடிவு  அடுத்த மாதம் இறுதிக்குள் வெளியிடப்பட உள்ளது. அதற்கு மிகவும் குறுகிய காலமே இருப்பதால், மதிப்பெண் கணக்கிடுதலை அவசர கதியில் செய்தால் குளறுபடிகள் ஏற்பட வாய்ப்புள்ளது. நாடு முழுவதும் பல லட்சம் மாணவர்கள் உள்ளனர். இந்த விகிதாச்சார அடிப்படையில் மதிப்பெண்களை கணக்கிட்டு வழங்குவது அவ்வளவு எளிதான காரணமல்ல. எனவே, இந்த மதிப்பெண் கணக்கீட்டை சுலபமாக்குவதற்காக புதிய கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தை பயன்படுத்த சிபிஐஸ்இ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தேர்வு முடிவை தயாரிப்பதற்கான நேரத்தை குறைக்கவும் இது உதவும் என்று சிபிஎஸ்இ நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

  • கபினி அணையில் இருந்து 5,000 கனஅடி நீர் திறப்பு
    on June 20, 2021 at 12:42 am

    பெங்களூரு: கேரள மாநிலம் வயநாட்டில் கனமழை பெய்து வருவதாலும், கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்துவருவதாலும், கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று மாலை நிலவரப்படி 124.80 அடி உயரம் கொண்ட கேஆர்எஸ் அணையில் 90.40 அடி நீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 18,556 அடி நீர்வரத்து உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 2,164 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அதேபோல் கபினி அணையில் நேற்று மாலை நிலவரபடி 2,274 அடி நீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 16,213 கனஅடி நீர்வரத்து இருந்தது. இதனால் நேற்று இரவு முதல் அணையில் இருந்து வினாடிக்கு 5,000 கனஅடி திறக்கப்பட்டுள்ளது.

  • காவு வாங்கும் ‘பறக்கும் சவப்பெட்டி’ படிப்படியாக ஓய்வு: 2024க்குள் எல்லா கதையும் முடியும்
    on June 20, 2021 at 12:38 am

    ஐதராபாத்: இந்திய விமானப்படைக்கு ரஷ்யாவிடம் இருந்து கடந்த 1960ம் ஆண்டுகளில் மிக்-21, மிக்-27 போர் விமானங்கள் வாங்கப்பட்டன. இவற்றுக்கு 1990ம் ஆண்டுடன் ஓய்வு அளிக்கப்பட வேண்டும். ஆனால், விமானப்படைக்கு புதிய விமானங்கள் வாங்க முடியாததால், இந்த விமானங்கள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இறுதியாக இவை, 2005 - 2010ல் பல கோடி ரூபாய் செலவில் நவீனப்படுத்தப்பட்டன. ஆனால், விமானங்களில் ஏற்படும் தொழில்நுட்ப  கோளாறுகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு விமானிகளை பலி வாங்குவது தொடர் கதையாக இருக்கிறது. இதுவரையில் 400 விமானங்கள் விபத்தில் நொறுங்கி உள்ளன. இதனால், இந்த விமானங்கள் ‘பறக்கும் சவப்பெட்டிகள்’ என கிண்டலாக அழைக்கப்படுகிறது. படையில் இருந்து இவை படிப்படியாக நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டு வந்த போதிலும், இன்னும் பணியில் தொடர்கின்றன. இந்தாண்டில் மட்டுமே இதுவரை 3 விமானங்கள் விபத்தில் நொறுங்கி உள்ளன. தெலங்கானா மாநிலம், துண்டிகல் விமானப் பயிற்சி தளத்தில் பயிற்சியை முடித்த பட்டதாரிகளுக்கான பாராட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில், பங்கேற்ற விமானப்படை தளபதி பதவுரியாவிடம் மிக்-21 விமானங்கள் பற்றி கேட்கப்பட்டபோது, ‘‘2024க்குள் இந்த விமானங்கள் படிப்படியாக படையில் இருந்து நீக்கப்படும். இதற்கு பதிலாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இலகு ரக போர் விமானங்கள் சேர்க்கப்படும். மிக் விமானங்கள் இப்போது நன்றாக பறக்கும் நிலையில் உள்ளன. எல்லையில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றன,’’ என்றார்.* ரபேல் கிடைப்பதில் தாமதம் ரபேல் விமானங்கள் பற்றி அவர் கூறுகையில், ‘‘பிரான்சிடம் இருந்து வாங்கப்படும் 36 ரபேல் போர் விமானங்களும் 2022ம் ஆண்டுக்குள் திட்டமிட்டப்படி வந்து சேரும். கொரோனா பிரச்னையின் காரணமாக, ஓரிரு விமானங்கள் வந்து சேர்வதில் தாமதம் ஏற்படக்கூடும் என்று கருதுகிறேன்,’’ என்றார்.

  • கோவாக்சின், கோவிஷீல்டு மூதாட்டிக்கு அடுத்தடுத்து 5 நிமிடத்தில் 2 தடுப்பூசி: பீகாரில் அலட்சியம்
    on June 20, 2021 at 12:37 am

    பாட்னா:  பீகாரில் மூதாட்டி ஒருவருக்கு 5 நிமிட இடைவெளியில் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசி போடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பீகார் மாநிலம், பாட்னா மாவட்டத்தில் உள்ள அவந்த்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சுனிலா தேவி (63). இந்த கிராமத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியில் கடந்த 16ம் தேதி கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இதில், தடுப்பூசி போடுவதற்காக சுனிலா தனியாக சென்றார். இவர் படிப்பறிவு இல்லாதவர். இந்த முகாமில் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி போடுவதற்காக தனித்தனி வரிசைகளில் மக்கள் நிறுத்தப்பட்டனர். முதலில் ஒரு வரிசையில் நின்ற சுனிலா, தனது பெயரை பதிவு செய்துக் கொண்டு அறைக்குள் சென்றுள்ளார். அங்கு அவருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பின்விளைவுகள் ஏதாவது ஏற்படுகிறதா என்பதை கண்காணிப்பதற்காக, அவரை  சிறிது நேரம் அமரும்படி நர்ஸ் கூறியுள்ளார். அதன்படி அமர்ந்திருந்த சுனிலா, அடுத்த வரிசையையும் பார்த்ததும் அங்கும் போய் நின்றார். அங்கு மற்றொரு நர்ஸ் அவருக்கு கோவாக்சின் தடுப்பூசி போட்டுள்ளார். அடுத்தடுத்து 5 நிமிடங்களில் இது நடந்தது. வீட்டுக்கு சென்ற அவர், ‘ரெண்டு ஊசி போட்டாங்க...’ என்று கூறியிருக்கிறார். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் தடுப்பூசி முகாமுக்கு சென்று விசாரித்தனர். தவறு நடந்து விட்டதாக அவர்கள் பதறினர். அவர்களுடன் சுனிலாவின் குடும்பத்தினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து 2 நர்சுகளிடமும் சுகாதார துறை அதிகாரிகள் விளக்கம் கேட்டுள்ளனர். 2 தடுப்பூசி போட்டதால் சுனிலாவை மருத்துவர் குழு கண்காணித்து வருகிறது. அவர் நலமாக இருப்பதாக அது தெரிவித்துள்ளது.

  • மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 21ல் நடத்தப்படுமா? நாடாளுமன்ற குழு நாளை ஆலோசனை
    on June 20, 2021 at 12:37 am

    புதுடெல்லி: இந்தாண்டின் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் பற்றி விவாதிப்பதற்காக நாடாளுமன்ற விவகாரக் குழுவின் கூட்டம் நாளை நடக்கிறது. கடந்தாண்டு மார்ச்சில் நாட்டில் பிறப்பிக்கப்பட்ட கொரோனா ஊரடங்கால், வழக்கமாக ஜூலையில் துவங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் செப்டம்பர் 14ல் தொடங்கியது. இது, அக்டோபர் 1 வரை வார விடுமுறை இன்றி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த தொடரின் போது 25க்கும் மேற்பட்ட எம்பி.க்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், செப்டம்பர் 23ம் தேதியே தொடர் முடிக்கப்பட்டது. இந்நிலையில், 2021ம் ஆண்டுக்கான முதல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர், ஜனவரி 29ம் தேதி ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகளின் அமளியால் முதல் தொடர் ஒத்திவைக்கப்பட்டது. மார்ச் 8ம் தேதி 2ம் கூட்டத் தொடர் தொடங்கியது. அப்போதும் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால், மார்ச் 25ம் தேதியே நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இந்தாண்டின் மழைக்கால கூட்டத் தொடர் அடுத்த மாதம் 21ம் தேதி முதல் துவங்கும் என தகவல் வெளியாகி உள்ளது. இத்தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து, அனைத்து கட்சித் தலைவர்களுடன் மக்களவை சபாநாயகரும், மாநிலங்களவை தலைவரும் ஜூலை முதல் வாரம் ஆலோசனை நடத்துகின்றனர். இந்நிலையில், இத்தொடரை நடத்துவது தொடர்பாக நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழுக் கூட்டம் நாளை நடக்கிறது. பின்னர், இந்த தொடர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

  • கொரோனா 3வது அலை கணிக்க முடியாதது: கவனம் தேவை: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை
    on June 19, 2021 at 9:33 pm

    டெல்லி: கொரோனாவின் மூன்றாவது அலை கணிக்க முடியாததாக உள்ளது. எனவே கவனமாக இருக்க வேண்டும் என்கிறார் எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனர். மூன்றாவது அலை வந்தால் குழந்தைகளை அதிகம் தாக்கும் என்று சொல்லப்பட்டு வரும் வேளையில் இதன் உண்மை தன்மை குறித்து பார்க்கலாம். லான்செட் கோவிட் 19 இந்தியா டாஸ்க் ஃபோர்ஸ் கமிஷன் என்கிற அமைப்பு நாடு முழுவதும் உள்ள முக்கிய குழந்தைகள் நல மருத்துவர்களுடன் கலந்தாலோசித்தது. தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 10 வயதிற்கும் குறைவான 2500க்கும் மேற்பட்ட குழந்தைகளின் மருத்துவ அறிக்கை மற்றும் மாதிரிகளை பரிசோதித்து ஆய்வு ஒன்றை வெளியிட்டது. இதன்படி குழந்தைகளின் இறப்பு 2.4 % மட்டுமே என்றும் இதில் 40 % குழந்தைகள் மனவளர்ச்சி குன்றிய சிகிச்சைகளுக்கு சரியாக ஒத்துழைக்க முடியாத குழந்தைகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு தரவுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 5 சதவீதத்திற்கும் குறைவான குழந்தைகளுக்கு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கும் வகையில் 3வது அலை இருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. ஆயினும் 3வது அலையால் குழந்தைகள் பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள் என்பதற்கான தரவுகள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இதற்கிடையே 18 வயதிற்கு கீழான குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான ஆய்வுகளை பீகார் மற்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகங்கள் தொடங்கி இருக்கின்றன. இந்த தடுப்பூசியின் சோதனைகள் அடுத்த மாதம் மேற்கொள்ளப்பட உள்ளன. 5 வயது முதல் 12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி தயாரிக்கும் பணிகளை சைடஸ் காடிலா நிறுவனம் மேற்கொடுள்ளது. ஏற்கனவே 12 - 16 வயதான குழந்தைகளுக்கு அமெரிக்கா, ஜெர்மனில் பைசர் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. இதற்கான சோதனைகள் பிரிட்டனில் நடைபெற்று வருகிறது. போலந்து, ஹங்கேரி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும் அடுத்த சில வாரங்களில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தொடங்க உள்ளன. சீனா ஏற்கனவே 3 முதல் 17 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆபத்து காலத்தில் வழங்குவதற்காக சினோபார்ம், சினோவேக் தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. தடுப்பூசிகள் விவகாரத்தில் இவ்வளவு முன்னெடுப்புகள் செய்யப்பட்டாலும் அதற்குள் 3வது அலை இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்த தொடங்கிவிட்டால் அதனை சமாளிக்க மாநில அரசுகள் தயாராக இருக்குமாறு மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

  • தெலுங்கானா மாநிலத்தில் ஜூலை 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுவதாக முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவிப்பு
    on June 19, 2021 at 7:17 pm

    ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் ஜூலை 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுவதாக முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு குறைந்ததால் ஊரடங்கு முழுமையாக நீக்கப்பட்ட நிலையில் ஜூலை 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • ஆந்திர மாநிலத்தில் புதிதாக 5,674 பேருக்கு கொரோனா
    on June 19, 2021 at 6:06 pm

    அமராவதி: ஆந்திர மாநிலத்தில் புதிதாக 5,674 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, கொரோனா தொற்றிலிருந்து 8,014 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் சிகிச்சை பலனின்றி 45 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

  • ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் : மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம்
    on June 19, 2021 at 5:51 pm

    புதுடெல்லி : கொரோனா நோய் தொற்று குறைந்து இருப்பதை அடிப்படையாகக் கொண்டு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலையானது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகளாக அனைத்து மாநில அரசுகளும் முழு மற்றும் பகுதி நேர ஊடங்கை அறிவித்துள்ளது. இதில் கடந்த இரண்டரை மாதங்ககளுக்கு பின்னர் தற்போது நோய் தொற்றின் ஒரு நாள் எண்ணிக்கை மற்றும் இறப்பு விகிதம் ஆகியவை படிப்படியாக குறைந்து வருவதை தொடர்ந்து, சில கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வு ஊரடங்கை மாநில அரசுகள் அறிவித்துள்ளது.இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் தரப்பில் அதன் செயலாளர் அஜய் பல்லா அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைத்துள்ளார். அதில்,' கொரோனா பாதிப்பு குறைவை கருத்தில் கொண்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் கண்காணிப்பை தொடர்ந்து தீவிரப்படுத்து வேண்டும். இதில் மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச அரசிகள் அலட்சியம் காட்டிவிடக் கூடாது. குறிப்பாக மக்களின் வாழ்வாதாரத்திற்கு தளர்வுகள் என்பது அவசியம் தான், இருப்பினும் கண்காணிப்பை தவறவிட்டால் மீண்டும் ஆபத்தாகி விடும். அதேப்போன்று கொரோனா பரிசோதனையை தொடர்ந்து மேற்கொள்ளுதல், தடுப்பூசி செலுத்துவதை அதிகரித்தல், முகக்கவசம் அணிதலை கட்டாயப்படுத்தல், கைகளை சுத்தம் செய்தல், சமூக இடைவெளி கடைபிடித்தல் மற்றும் அறைகளில் சவுகரியமான காற்றோட்டம் இருப்பதை உறுதி செய்தல் ஆகியவற்றை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். இதனை மாநில அரசுகளின் தலைமை செயலாளர் கருத்தில் கொண்டு கண்கானிக்க வேண்டும்இதில் முக்கியமாக சில மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கும் போது சந்தை மற்றும் வியாபார செய்யும் இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இவை வைரஸ் தொற்று மீண்டும் தீவிர பரவலுக்கு செல்ல வழிவகுக்கும் என்பதால், விதிமுறைகளை கடைபிடிப்பதில் பொதுமக்களுக்கு எந்தவித விலக்கோ அல்லது சமரசமோ இருக்கக் கூடாது. மேலும் பாதிப்பு அதிகம் ஏற்பட வாய்ப்புள்ள இடங்களில் ஆரம்ப கட்டத்திலே கண்டறிந்து மைக்ரோ லெவல் குழுக்கள் மூலம் பரவலை குறிக்க உள்ளூர் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா தடுப்பூசி என்பது தற்போதைய சூழலில் பரவலை குறைக்க மிக முக்கியமானது என்பதால், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் தடுப்பூசி செலுத்தும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினகரன் தேசிய செய்திகள் | தினகரன் தேசிய செய்திகள் live | தினகரன் தேசிய செய்திகள் pdf | தினகரன் தேசிய செய்திகள் today

admin
Author: admin

https://www.erodedistrict.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*