Login

Lost your password?
Don't have an account? Sign Up

Dinakaran Tamilnadu Tamil News

  • புதுச்சேரியில் அமைச்சர் கந்தசாமியை சந்திக்க முதல்வர் நாராயணசாமிக்கு அனுமதி
    on January 19, 2021 at 4:16 pm

    புதுச்சேரி: அமைச்சர் கந்தசாமியை சந்திக்க முதல்வர் நாராயணசாமிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 4 மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு அமைச்சரை சந்திக்க முதல்வருக்கு அனுமதி வழங்கப்பட்டது. மேலும் நலத்திட்டங்கள், வளர்ச்சித் திட்டங்களுக்கு ஆளுநர் அனுமதி மறுப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. துணை நிலை ஆளுநர் மாளிகை அருகே அமைச்சர் கந்தசாமி போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தார்.

  • கொடைக்கானலில் ஆயுத பயிற்சி அளிக்கதாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து 7 மாவோயிஸ்டுகள் விடுதலை
    on January 19, 2021 at 3:43 pm

    திண்டுக்கல்: கொடைக்கானலில் ஆயுத பயிற்சி அளிக்கதாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து 7 மாவோயிஸ்டுகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குற்றம் நிரூவிக்கப்படாததால் 7 பேரையும் திண்டுக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. 

  • நாவக்கரையில் 2016-ம் ஆண்டில் நடந்த கொலை வழக்கில் 2 பேருக்கு தலா 3 ஆயுள் தண்டனை
    on January 19, 2021 at 3:43 pm

    தி.மலை: திருவண்ணாமலை நாவக்கரையில் 2016-ம் ஆண்டில் நடந்த கொலை வழக்கில் 2 பேருக்கு தலா 3 ஆயுள் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நகைக்காக அரசு கல்லூரி உதவி பேராசிரியை கிருஷ்ணவேணியை கொலை செய்த வழக்கில் ஜெய், ஜீவா ஆகியோருக்கு தலா 3 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

  • உதகை அருகே காதில் காயத்துடன் சுற்றித்திருந்த ஆண் யானை உயிரிழப்பு
    on January 19, 2021 at 3:28 pm

    உதகை: உதகை அருகே மிசினகுடியில் காதில் காயத்துடன் சுற்றித்திருந்த ஆண் யானை உயிரிழந்தது. கடந்த சில நாட்களாக காத்து கிழிந்த நிலையில் 40 வயது ஆண் யானை மிசினகுடியில் சுற்றித்திருந்து கொண்டிருந்தது. காலையில் யானைக்கு மயக்க ஊசி செலுத்தி முதுமலை முகாமுக்கு லாரியில் ஏற்றிச் சென்ற போது உயிரிழந்தது.

  • விருதுநகர் அருகே தொட்டில் கயிற்றில் சிக்கி சிறுமி உயிரிழப்பு
    on January 19, 2021 at 2:59 pm

    விருதுநகர்: விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் வீட்டில் தனியாக விளையாடி கொண்டிருந்த சிறுமி அபர்ணா(6) தொட்டில் கயிற்றில் சிக்கி உயிரிழந்தது. இளவரசன் என்பவரின் மகள் அபர்ணா தொட்டில் கயிற்றில் சிக்கி உயிரிழந்த சம்பவம் குறித்து மேற்கு காவல் நிலைய காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • இளம் வழக்கறிஞர்களுக்கு பயிற்சி மைய விவகாரம்.: தமிழக சட்டத்துறை செயலர் பதிலளிக்க ஆணை
    on January 19, 2021 at 2:54 pm

     மதுரை: இளம் வழக்கறிஞர்களுக்கு பயிற்சி மையம் அமைக்கக்கோரிய வழக்கில் தமிழக சட்டத்துறை செயலர் பதிலளிக்க ஆணையிடப்பட்டுள்ளது. மணிபாரதி என்பவர் தொடர்ந்த வழக்கை 2 வாரங்களுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்துள்ளது.

  • ஊழல் செய்பவர்களுக்கு தூக்குத்தண்டனை கோரி வழக்கு...! சட்ட திருத்தம் செய்யும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு இல்லை: ஐகோர்ட் கிளை உத்தரவு
    on January 19, 2021 at 2:52 pm

    மதுரை: ஊழல் செய்யும் அரசு அதிகாரிகளுக்கு தூக்குத்தண்டனை கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை முடித்துவைத்துள்ளது. சட்டத்திருத்தம் கொண்டுவர நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என தலைமை நீதிபதி அமர்வு கருத்து தெரிவித்துள்ளது. மேலும் சட்டம் இயற்றும் அதிகாரம் கொண்ட அமைப்பிடம் மனு அளித்து நிவாரணம் பெற மனுதாருக்கு உத்தவிடப்பட்டுள்ளது. திருச்சி லால்குடியை சேர்ந்த பார்த்திபன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைகிளையில், இந்தியாவில் உள்ள மக்கள் பல்வேறு வகையான வரிகளை அரசுக்குச் செலுத்தி வருகின்றனர். ஆனால் இப்படி மக்கள் கொடுக்கு பணத்தை மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் தவறாக பயன்படுத்துகின்றனர். கிட்டத்தட்ட எல்லா அரசுத் துறைகளிலும் பல்வேறு வகையான ஊழல்கள் நடக்கிறது. குறிப்பாக வருவாய்த்துறை, பத்திரப்பதிவு துறை, போக்குவரத்துத்துறை, வணிகத்துறை மற்றும் கல்வித் துறை ஆகியவற்றில் மிக பெரிய அளவில் ஊழல்கள் நடைபெற்று வருகிறது. ஊழல் செய்யும் அதிகாரிகளுக்கு அதிகபட்சம் 7 வருட சிறை தண்டனை மட்டுமே விதிக்கப்பட்டு வருகிறது. இதனால் அரசு அதிகாரிகள் எவ்வித பயமுமின்றி ஊழல் செய்து வருகின்றனர். ஊழல் தடுப்பது குறித்து பல்வேறு அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எந்த ஒரு பயனில்லை. தமிழகத்தில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக இந்த தண்டனைச் சட்டத்தில் திருத்தம் செய்ய உத்தரவிட வேண்டும். ஊழல் செய்யும் அதிகாரிகளுக்கு அதிகபட்ச தண்டனையாக தூக்கு தண்டனை, வாழ்நாள் சிறை தண்டனை மற்றும் அவர்களின் சொத்துக்கள், நகைகள், வங்கி கணக்குகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட வேண்டும் என்று ஊழல் தடுப்புச் சட்டம் 1988-ல் திருத்தம் செய்து அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, மதுரை கிளை நிர்வாக நீதிபதி எம்.எம் சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது; சட்டத்தில் திருத்தம் செய்ய உத்தரவிடும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு இல்லை. சட்டம் இயற்றும் அதிகாரம் கொண்ட அரசிடம் மனு அளித்து மனுதாரர் நிவாரணம் பெற வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

  • பைக்கில் வேகமாக வந்ததை தட்டிக்கேட்ட வாலிபர் மீது கொலைவெறி தாக்குதல்: பாஜக பிரமுகர் மகன் உட்பட மூன்று பேர் கைது
    on January 19, 2021 at 2:51 pm

    தாம்பரம்: சென்னை மேற்கு தாம்பரம், மாந்தோப்பு, அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் ரீகன் (35). பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 17ம் தேதி வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தபோது 16 வயது சிறுவன் ஒருவன் பைக்கில் வேகமாக வந்துள்ளான். அப்போது அந்த சிறுவனை நிறுத்தி குழந்தைகள் தெருவில் விளையாடிக் கொண்டிருக்கும் போது ஏன் வேகமாக வருகிறாய் என ரீகன் தட்டிக் கேட்டதையடுத்து அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.  இதுகுறித்து, சிறுவன் தாம்பரம் காவல் நிலைத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி,  அபராதம் பெற்றுக்கொண்டு வீட்டிற்கு அனுப்பி உள்ளனர். ஆனால், எப்படியாவது பழிவாங்க வேண்டுமென எண்ணிய சிறுவன், அவரது நண்பர்கள் இருவரை அழைத்துச் சென்று கத்தியால் ரீகனை சரமாரியாக வெட்டிவிட்டு  அங்கிருந்து தப்பிச் சென்றனர். ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த ரீகனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தாம்பரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, மேற்கு தாம்பரம் மீனாம்பாள் தெரு பகுதியை சேர்ந்த பாஜக பிரமுகரின் 16 வயது மகன், மேற்கு தாம்பரம், சிவராஜ் தெருவை சேர்ந்த குணசேகரன் (18), மேற்கு தாம்பரம், மூகாம்பிகை நகர் பகுதியை சேர்ந்த சேஷன் (20) ஆகியோரை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • தென்காசி - திருநெல்வேலி சாலை மிக மோசமான நிலையில் உள்ளது: பூங்கோதை ஆலடி அருணா
    on January 19, 2021 at 2:51 pm

    தென்காசி: அதிமுக அரசில் போடப்பட்ட தென்காசி - திருநெல்வேலி சாலை மிக மோசமான நிலையில் உள்ளது என திமுக எம்.எல்.ஏ, பூங்கோதை ஆலடி அருணா தெரிவித்துள்ளார். தொடர்ந்து ஏற்படும் விபத்துக்களை தடுக்க உடனடியாக சாலைகளை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

  • கோவை குனியமுத்தூர் அரசு பணியாளர் காலனியில் ரூ.66 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட உள்விளையாட்டு அரங்கம் திறப்பு
    on January 19, 2021 at 2:46 pm

    கோவை: குனியமுத்தூர் அரசு பணியாளர் காலனியில் ரூ.66 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட உள்விளையாட்டு அரங்கம் திறக்கப்பட்டுள்ளது. உள்விளையாட்டு அரங்கத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.

  • செந்துறையில் அதிக வேகத்தில் சென்ற கனரக வாகனங்களை மறித்த இளைஞர்கள்
    on January 19, 2021 at 2:36 pm

    அரியலூர் : அரியலூர் மாவட்டம் செந்துறை-ஜெயங்கொண்டம் சாலையில் நேற்று அதிக வேகத்துடன் கனரக வாகனங்கள் செல்வதை கண்டித்து இளைஞர்கள் ஒன்றிணைந்து வாகனங்களை மறித்தனர்.மாவட்ட நிர்வாகம் அறிவித்த நேரம் மட்டும் செல்ல வேண்டும், மீறி நகருக்குள் செல்ல கூடாது என வாகன ஓட்டிகளிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவலறிந்து வந்த செந்துறை போலீசார் இளைஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வாகனத்தை மீட்டு அதிவேகத்தில் வாகனங்களை இயக்க கூடாது. அனுமதிப்பட்ட வேகத்தில் இயக்குமாறு வாகன ஓட்டிகளை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.இதனால் சில மணி நேரம் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.இதுபோல் தினமும் குறிப்பிட்ட நேரம் தவிர மற்ற அனைத்து நேரங்களிலும் கனரக வாகனங்கள் அதிக வேகத்தில் செல்வதால் லாரிகளில் ஏற்றி செல்லும் சிறு சிறு கற்கள், மண் போன்றவை ரோடுகளில் விழுகின்றன. இதனால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படுவது மட்டுமின்றி காற்று மாசு அதிகமாகி வருகின்றது.வேகத்தடையில் ஒரு வாகனம் கூட வேகத்தை குறைத்து பொறுமையாக செல்வதில்லை. அதிக வேகத்தில் செல்வது பொதுமக்களுக்கு பெரும் அச்சத்தை உள்ளாகி வருகிறது.

  • விருதுநகர் நகராட்சி மின்மயானம் பழுதால் திறந்த வெளியில் எரிக்கப்படும் சடலங்கள்-இறப்பு சான்றிதழ் பெறுவதில் சிக்கல்
    on January 19, 2021 at 2:34 pm

    விருதுநகர் :  விருதுநகர் புல்லாலக்கோட்டை ரோட்டிலுள்ள நகராட்சி மயானம் கடந்த 9 ஆண்டுகளாக மின் மயானமாக செயல்படுகிறது. மாதம் தோறும் 100 சடலங்கள் வரை இங்கு எரியூட்டப்படுகின்றன. தனியார் நிறுவனத்தால் பராமரிக்கப்படும் இந்த மயானத்தில் ஒரு சடலத்தை எரியூட்ட ரசீது மூலம் ரூ.2ஆயிரம், ரசீது இல்லாமல் ரூ.2 ஆயிரம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. வசூல் வேட்டைகள் அதிகம் இருந்தாலும் மயானத்தில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. இந்நிலையில் மின்மயான புகைபோக்கி இரு மாதத்திற்கு முன் மூன்றாக ஒடிந்து விழுந்ததால் மின்மயானத்தில் சடலங்களை எரிப்பது நிறுத்தப்பட்டது. இதனால் ரூ.4 ஆயிரம் வரை பணம் பெற்றுக் கொண்டு மாயத்திற்கு வெளியே கொட்டகையில் சடலங்களை எரிக்கின்றனர். இதனால் துர்நாற்ற புகையால் குடியிருப்புவாசிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் மின்மயானத்தில் எரிக்காமல் கொட்டகையில் எரிப்பதால் சடலங்களை எரித்தற்கான மயான ரசீது வழங்குவதில்லை. இந்த நிலையில் இறந்த ஒருவரின் இறப்பு சான்றிதழ் நகராட்சியில் வாங்க குடும்பத்தினர் நகராட்சிக்கு டாக்டர் சான்றிதழ் வழங்க வேண்டும். அந்த சான்று கேட்டு சென்றால், டாக்டர்கள் மயான ரசீது கேட்கின்றனர். மின்மயானம் இயங்காதால் மயான ரசீது வழங்குவதில்லை, அதையும் மீறி ரசீது வழங்க ஏற்கனவே பெற்ற ரூ.4ஆயிரத்தை தவிர்த்து கூடுதலாக ரூ.2ஆயிரம் கேட்பதாக குற்றாச்சாட்டு எழுந்துள்ளது.நகராட்சி நிர்வாகம் மயான பராமரிப்பை அரசு வழிகாட்டுதல்படி  அறக்கட்டளை வசம் ஒப்படைக்க வேண்டும். ஆனால் தற்போது தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்து இருப்பதால் லாப நோக்கில் செயல்படுத்தி வருகின்றனர்.  எனவே, நகராட்சி நிர்வாகம் தலையிட்டு மின்மயானத்தில் உள்ள குறைபாடுகளை சரி செய்து சேவை நோக்கில் செயல்படும் அறக்கட்டளை வசம் ஒப்படைத்து மயான வளாகத்தில் பூங்கா, கழிப்பறை வசதி, தண்ணீர் வசதி, அஸ்தி கலச பராமரிப்பு மையம், காலியிட பராமரிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டுமென நகர் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

  • காரியாபட்டி அருகே புதிய சாலையின் இருபுறமும் விபத்து ஏற்படுத்தும் பள்ளம்
    on January 19, 2021 at 2:32 pm

    காரியாபட்டி :  காரியாபட்டி அருகே புதியதாக அமைக்கப்பட்ட சாலையின் இருபுறமும் விபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ள பள்ளத்தை சரி செய்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.காரியாபட்டி அருகே நெடுங்குளம் முதல் பாப்பணம் விலக்கு வரை செல்லும் சாலை நீண்ட நாட்களாக சரி செய்யாமல் இருந்தது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு அந்த சாலை சரி செய்து பொது மக்கள் பயன்பாட்டிற்காக கொண்டுவரப்பட்டது. இந்த சாலையைத் தான் ஸ்ரீராம்பூர், முடுக்கன்குளம், சாலை மறைக்குளம், நரிக்குடி, பாப்பணம், நாங்கூர் போன்ற கிராமமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.  ஆனால், புதிதாக போடப்பட்ட சாலையின் இருபுறமும் இரண்டி அடிக்கு மேல் பள்ளம் இருப்பதால் இரண்டு வாகனங்கள் விலக முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். மேலும் மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக இருப்பதால் இரவு நேரங்களில் விபத்து ஏற்படும் நிலையும் உள்ளது. அதனால் இச்சாலையை சரி செய்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • குடியிருக்கும் வீட்டை காலி செய்ய கூறி அடித்து துன்புறுத்தும் மகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்-சப்.கலெக்டரிடம் முதியவர் கோரிக்கை
    on January 19, 2021 at 2:30 pm

    குளித்தலை : குடியிருக்கும் வீட்டை காலி செய்ய கூறி அடித்து துன்புறுத்தும் மகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதியவர் குளித்தலை சப்.கலெக்டரிடம் மனு அளித்தார்.கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த ஆர் டி மலை கிராமம் நாவல் நாயக்கன் பட்டியைச் சேர்ந்தவர் மாணிக்கம்( 72). இவர் தனது இரண்டாவது மனைவி சரசுவுடன் குளித்தலை சப்.கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மக்கள் குறைதீர் கூட்டத்தில் மூத்த குடிமகன் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சட்டத்தின்படி பாதுகாப்பு வேண்டி கோரிக்கை மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: ஆர்டி மலை கிராமம் நாவல் நாயக்கம்பட்டி பகுதியில் குடும்பத்துடன் வசித்து விவசாயம் தொழில் செய்து வருகிறேன். என் முதல் மனைவி மாரியாயி இறந்து விட்டார். என் முதல் மனைவி மூலம் பிறந்த சுப்பிரமணி, லட்சுமி, அமுதா ஆகிய மூன்று பிள்ளைகளையும் வளர்த்து பராமரிப்பதற்காக இரண்டாம் தாரமாக சரசு என்பவரை திருமணம் செய்து கொண்டேன். இரண்டாம் தாரம் மூலம் சங்கீதா, சுகன்யா, சரண்யா ஆகிய பிள்ளைகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி அவர்கள் அனைவரும் தனித்தனியே குடும்பம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் எனக்கு சுயமாக பாத்தியப்பட்ட நிலம் மற்றும் வீடுகள் உள்ளன .இரண்டு வீடுகளில் மெத்தை வீட்டை என் மகன் சுப்பிரமணியனுக்கு கொடுத்துவிட்டேன். ஓட்டு வீட்டில் நானும் என் இரண்டாவது மனைவி சரசுடன் வசித்து வருகிறேன். வீட்டுமனை களையும் அனைவருக்கும் பிரித்துக் கொடுத்து விட்டேன். நிலத்தை விற்று கடனை கட்டி விட்டோம். இந்நிலையில் குடியிருக்கும் ஓட்டு வில்லை வீட்டிலிருந்து எங்களை வெளியேறச் சொல்லி அடித்து உதைத்து எனது மகன் சுப்ரமணியன் துன்புறுத்தி வருகிறான். ஊரில் முக்கியஸ்தர்களை வைத்து சமரசம் செய்து பார்த்தோம். அதற்கு எங்களை பயமுறுத்தி வருகிறார்.தோகமலை காவல்நிலையத்தில் சென்று புகார் கொடுத்தும் எவ்வித பலனும் இல்லை அதனால் வயது முதிர்ந்த காலத்தில் எங்கள் இருவருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில் அச்சத்துடன் வாழ்ந்து வருகிறோம். ஆகவே சார் ஆட்சியர் எனது மகன் சுப்பிரமணி, மருமகள் கருப்பாயி ஆகியோர் மீது தக்க நடவடிக்கை எடுத்து எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தனர். மனுவை பெற்றுக்கொண்ட சப்.கலெக்டர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். முதியவர்கள் கண் கலங்கியவாறு அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தது அனைவருக்கும் நெகிழ்ச்சியாக இருந்தது.

  • பழநியில் 150 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்
    on January 19, 2021 at 2:27 pm

    பழநி : கோயில் நகரான பழநியில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகளவு உள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதன்படி நகராட்சி ஆணையர் லட்சுமணன் உத்தரவின் பேரில் நகர்நல அலுவலர் (பொ) வேல்முருகன் தலைமையிலான நகராட்சி அதிகாரிகள் காந்தி மார்க்கெட், ராஜாஜி சாலை, சுப்பிரமணியுரம் சாலைகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். 80க்கும் மேற்பட்ட கடைகளில் நடந்த சோதனைகளில் சுமார் 150 கிலோ அளவிலான தடை பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன. தொடர் சோதனை நடத்தப்படுமென்றும், தொடர்ந்து விற்பனை செய்பவர்களின் கடை உரிமம் ரத்து, அபராதம் விதிப்பு போன்ற சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமென நகராட்சி அதிகாரிகள் எச்சரித்துச் சென்றுள்ளனர்.

  • கொடைக்கானல் மலையில் தொடர்மழை வெள்ளைப்பூண்டு விவசாயம் நாசம்-நிவாரணம் வழங்க கோரிக்கை
    on January 19, 2021 at 2:26 pm

    கொடைக்கானல் : கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பெய்த தொடர்மழை காரணமாக பல நூறு ஏக்கர் விவசாய விளைபொருட்கள் நாசமாகியுள்ளது. இதற்கு நிவாரணம் வழங்க ேவண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கொடைக்கானல் மேல்மலை பகுதிகளில் வெள்ளைப்பூண்டு முக்கிய விவசாயமாக உள்ளது. இது 120 நாட்களில் மகசூலுக்கு வரும். தற்போது பெய்த தொடர்மழையால்  வெள்ளைப் பூண்டு விவசாயம் மிகுந்த சேதமடைந்துள்ளது. ஆண்டுதோறும் இரண்டு போகமாக வெள்ளைப் பூண்டு விவசாயம் நடந்து வருகிறது. இந்த ஆண்டு இந்த தொடர்மழை காரணமாக வெள்ளைப்பூண்டு விவசாயத்தில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. 500 முதல் 1000 ஏக்கர் வரை வெள்ளைப்பூண்டு விவசாயத்தின் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக வெள்ளைப் பூண்டில் மஞ்சள் நோய் தாக்கியுள்ளது. கருகல் நோயும் தாக்கியுள்ளது. இந்த நோய் காரணமாக மகசூல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. எனவே, அரசு உரிய இழப்பீட்டைவழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதேபோல கொடைக்கானலில் மலைப்பகுதிகளில் வில்பட்டி, பள்ளங்கி, அட்டுவம்பட்டி, குறிஞ்சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் இந்த குளிர் சீசன் காலங்களில் பட்டாணி பயிர் செய்வது வழக்கம். ஆனால், தொடர்மழை பெய்த காரணத்தினால் மகசூல் இல்லாமல் போனது. அத்துடன் தொடர்மழை காரணமாக நோய் தாக்கி மகசூல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பட்டாணி பயிர் செய்த விவசாயிகள் பெரிய நஷ்டத்தை சந்தித்து உள்ளனர். பயிர் செய்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கொடைக்கானல் வருவாய்த்துறை சார்பில் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. சிறப்பு முகாம்கள் நடத்தி மலைப்பகுதிகளில் தொடர் மழை காரணமாக ஏற்பட்ட பயிர் சேதங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

  • ரயில்வே சுரங்கப்பாதையில் குளம்போல் தேங்கிய மழைநீரில் மாடுகளை குளிப்பாட்டும் அவலம்-நிரந்தர தீர்வுகாண பொதுமக்கள் கோரிக்கை
    on January 19, 2021 at 2:23 pm

    பேராவூரணி : பேராவூரணியில் நீலகண்டபுரம் செல்லும் வழியில் எல்.சி.எண்-121 ஆளில்லா ரயில்வேகேட் இருந்தது. 2012ம் ஆண்டு காரைக்குடி - திருவாரூர் அகல ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்ற போது, நீலகண்டன் 2வது தெரு செல்லும் சாலையில் உள்ள ரயில்வே கேட்டும், ஆளில்லா ரயில்வே கேட்டும் குறைந்த தூர அளவில் இருந்ததால் ஆளில்லாத ரயில்வே கேட்டை நிரந்தரமாக மூட ரயில்வே நிர்வாகம் முடிவெடுத்தது. இதனால் பாதிக்கப்படும் அந்த வழியை பயன்படுத்தி வந்த 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் இப்பகுதியில் குடியிருந்து வரும் நூற்றுக்கணக்கான குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள், ரயில்வே கேட்டை நிரந்தரமாக மூடினால் போக்குவரத்து மற்றும் தொழில் செய்பவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் நிரந்தரமாக மூடக்கூடாது என பல கட்டப் போராட்டங்களை நடத்தினர்.மேலும், எம்எல்ஏ, எம்பி, அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், தென்னக ரயில்வே அதிகாரிகள் என பலரையும் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.இதை தொடர்ந்து ரயில்வே கேட் அகற்றும் இடத்தில் கீழ் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் துவங்கிய இந்த பணி ஆமைவேகத்தில் நடைபெற்று முழுமையடையாமல் உள்ள நிலையில், தொடர் மழையால் பாலத்தில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மழை நின்று மூன்று நாட்களை கடந்த நிலையிலும் மோட்டார் வைத்து தண்ணீரை தொடர்ந்து இறைத்தும் பாலத்தின் கீழ் ஆறுபோல் மழைநீர் வெள்ளம்போல் தேங்கி நிற்கிறது. அந்த பகுதியை சேர்ந்த மக்கள் மாடுகளை கொண்டுவந்து ஆறு, குளங்களில் குளிப்பாட்டி செல்வதைபோல் குளிப்பாட்டி செல்கின்றனர்.எனவே இது போன்ற பிரச்னைக்குரிய இடங்களை ரயில்வே நிர்வாகம் பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • ஈரமான நெல்லை உலர்த்தும் நவீன இயந்திரம் -தஞ்சை விவசாயி புதிய முயற்சி
    on January 19, 2021 at 2:22 pm

    தஞ்சை : ஈரமாக உள்ள நெல்லை உலர்த்தி விற்பனை செய்யும் இயந்திரத்தை விவசாயி டெல்டா மாவட்டத்துக்கு முதன்முறையாக கொண்டு வந்து சோதனை செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.காவிரி டெல்டாவில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதில் குறுவை, சம்பா நெல் அறுவடை செய்யும் போது பருவ மழையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.மேலும், கடந்த சில ஆண்டுகளில் பருவம் தவறி பெய்யும் மழையின் காரணமாக நெல் அறுவடை செய்யும் போது மழையில் நனைந்து ஈரப்பதம் அதிகமாக நெல் மணிகள் வீணாகி விற்பனை செய்ய விவசாயிகள் வாரக்கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது.நெல் அறுவடை காலத்தில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால், ஈரப்பதத்தின் அளவை 17 சதவீதத்திலிருந்து உயர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும் என அரசுக்கு விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுப்பதும், அவ்வப்போது அரசு ஈரப்பதத்தின் அளவை தளர்த்தி கொள்கை முடிவை அறிவிப்பதுமாக இருந்து வருகிறது. இந்நிலையில் காவிரி டெல்டா மாவட்டங்களில் நிவர், புரெவி புயலின் போது அறுவடைக்கு தயாரான நெற்கதிர்கள் மழை நீரில் மூழ்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.இதனால் அறுவடை செய்த நெல்லையும் ஈரப்பதம் அதிகமாக இருப்பதாக கூறி கொள்முதல் செய்யாமல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேங்கியது. இதையடுத்து விவசாயிகளே நெல் உலர்த்தும் இயந்திரத்தை ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்திடமிருந்து வடிவமைத்து பெற்று சோதனை முயற்சிக்காக தஞ்சைக்கு வரவழைத்துள்ளனர். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே பொன்னாப்பூரில் உள்ள கொள்முதல் நிலையத்தில் நேற்று, நெல் உலர்த்தும் நவீன இயந்திரம் பொருத்தப்பட்டு அதனை சோதனை முயற்சியை தொடங்கியுள்ளனர்.1 மணி நேரத்தில் 4டன் ஈரப்பதத்தை உலர்த்தும்: இது குறித்து விவசாயி சீனிவாசன் கூறுகையில், அறுவடை காலங்களில் நெல் ஈரப்பதம் அதிகமாக இருப்பதாக கூறி கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் காத்திருக்கும் நிலை இருந்து வருகிறது. இதனை போக்க இணைய தளத்தில் தேடினேன். அப்போது மணிலா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் மொபைல் கிரைன் ட்ரையர் என்ற இயந்திரம் பயன்படுத்தப்படுவதை அறிந்தேன்.பின்னர் இது தொடர்பாக ஓசூர், வேலூர் ஆகிய பகுதிகளில் வேளாண் இயந்திரங்களை வடிவமைக்கும் நிறுவனத்தோடு தொடர்பு கொண்டு மொபைல் கிரைன் ட்ரையர் இயந்திரம் தொடர்பாக கூறினேன். அவர்களும் இதனை வடிமைத்து தந்துள்ளனர். இந்த இயந்திரம் ரூ.10 லட்சம் செலவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தில் 1 மணி நேரத்தில் 4 டன் நெல் உலர்த்தி, தூசியை அகற்றிவிடும். இந்த இயந்திரம் தற்போது பொன்னாப்பூரில் சோதனை முயற்சியில் இயக்கப்படுகிறது.இந்த இயந்திரம் வெற்றிகரமாக இயங்கினால், தமிழக அரசே அனைத்து கொள்முதல் நிலையங்களில் இந்த இயந்திரத்தை நிறுவி நெல்லை உலர்த்தியும், தூசி இல்லாமல் சுத்தம் செய்தும் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கலாம் என்றார்.

  • சேரம்பாடி காவல் நிலையத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை
    on January 19, 2021 at 2:21 pm

    நீலகிரி: நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சேரம்பாடி காவல் நிலையத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து காவல் அதிகாரி ஆனந்தவேலுடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

  • கடமலை-மயிலை ஒன்றியத்தில் கனமழை பெய்தும் நிரம்பாத கண்மாய்கள்
    on January 19, 2021 at 2:20 pm

    ஆக்கிரமிப்புகளால் அவலம்; மாவட்ட நிர்வாகம் கவனிக்குமா?வருசநாடு : கடமலை-மயிலை ஒன்றியத்தில் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பால், கனமழை பெய்தாலும் மழைநீர் தேங்குவதில்லை என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.கடமலை-மயிலை ஒன்றியத்தில் முருங்கை, மா, தென்னை, கொட்டைமுந்திரி ஆகியவை பலநூறு ஏக்கரில் சாகுபடி செய்துள்ளனர். பாசனத்திற்கு போதிய தண்ணீர் இல்லாததால், சாகுபடி பாதிக்கப்படுகிறது. ஆனால், தொடர்ந்து மழை பெய்து வருவதால், சாகுபடி காப்பாற்றப்பட்டு வருகிறது. விவசாயிகளும் உழவடைப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள மேகமலை, வெள்ளிமலை, அரசரடி, வட்டக்கானல், ஓயாம்பாறை, பிளவக்கல் மலைப்பகுதி ஆகிய பகுதிகளில் பெய்யும் மழைநீர், சிறு, சிறு ஆறுகள், நீர்வரத்து ஓடைகள் மூலம் மூலவைகை ஆறு வழியாக ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணைக்குச் செல்கிறது. இந்நிலையில், ஒன்றியத்தில் வருசநாடு பஞ்சம்தாங்கி, சாந்தநேரி, செங்குளம், பெரியகுளம், கடமான்குளம், கோவிலாங்குளம் உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட கண்மாய்கள் உள்ளன. இவைகளின் நீர்வரத்து ஓடைகளை ஆக்கிரமித்திருப்பதாலும், கண்மாய்களிலும் ஆக்கிரமித்திருப்பதாலும் கனமழை பெய்தாலும், கண்மாய்கள் நிரம்புவதில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே, ஒன்றியத்தில் உள்ள நீர்வரத்து ஓடைகள், ஆறுகள், கண்மாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, மழை காலங்களில் தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து சமூக ஆர்வலர் அங்குச்சாமி கூறுகையில், ‘இந்த ஒன்றியத்தில் உள்ள அனைத்து கண்மாய்களிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வாரி வைகை ஆற்று நீரை தேக்கினாலே ஒன்றியத்தில் குடிநீர் மற்றும் விவசாயத்துக்கு தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்க எடுக்க வேண்டும்’ என்றார்.

தினகரன் தமிழக செய்திகள் live | தினகரன் தமிழக செய்திகள் dinamalar | தினகரன் தமிழக செய்திகள் | தினகரன் தமிழக செய்திகள் pdf | தினகரன் தமிழக செய்திகள் today

admin
Author: admin

https://www.erodedistrict.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*