Login

Lost your password?
Don't have an account? Sign Up
Dinakaran Tamil News Paper-Logo

Dinakaran Top Tamil News

  • அபியாஸ் ஏவுகணை சோதனை வெற்றி
    on September 23, 2020 at 12:29 am

    பாலசோர்: வான்வெளியில் இலக்கை அதிவேகமாக சென்று தாக்கும் அபியாஸ் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) சார்பில், ஒடிசா மாநிலம், சந்திப்பூர் சோதனை மையத்தில் இருந்து அபியாஸ் ஏவுகணை ஏவி நேற்று சோதனை செய்யப்பட்டது.  இரட்டை பூஸ்டர்கள் பயன்படுத்தி அதிவேகத்தில் ஏவப்பட்ட இந்த ஏவுகணை இரு இலக்குகளை மிக துல்லியமாக தகர்த்ததாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

  • ஐபிஎல் 2020 டி20: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி
    on September 22, 2020 at 11:34 pm

    அபுதாபி: ஐபிஎல் 2020 டி20 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. ஐபிஎல் டி20 4_ லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் -ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மோதின. இதில், முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 216 ரன்கள் எடுத்தது. இதனயைடுத்து, 217 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 200 ரன்கள் எடுத்த நிலையில் 6 விக்கெட் இழந்து 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

  • டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 3,816 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
    on September 22, 2020 at 9:40 pm

    டெல்லி: டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 3,816 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,53,075-ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 37 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 5,051-ஆக அதிகரித்துள்ளது. மேலும் டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 2,16,401-பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 31,623- பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

  • மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 18,390 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
    on September 22, 2020 at 9:30 pm

    மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12.42 லட்சத்தை கடந்தது. மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் மட்டும் 18,390 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,42,770-ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 392 பேர் உயிரிழந்த நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கை 33,407-ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் இதுவரை 9,36,554 பேர் குணமடைந்து வீடு திரும்பியநிலையில் தற்போது மருத்துவமனைகளில் 2,72,410 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  • ஐபிஎல்2020; சென்னை அணிக்கு 217 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான் அணி
    on September 22, 2020 at 9:26 pm

    ஷார்ஜா: ஐபிஎல் டி20 தொடரின் 4வது லீக் ஆட்டத்தில் சென்னை அணிக்கு 217 ரன்களை இலக்காக ராஜஸ்தான் அணி நிர்ணயித்தது. ஷார்ஜாவில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஸ்டீவன் ஸ்மித் 47 பந்துகளில் 69 ரன்கள், சஞ்சு சாம்சன் 32 பந்துகளில் 74 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்க உள்ளது.

  • சென்னைக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் வீரர் சஞ்சு சாம்சன் அரைசதம் விளாசல்
    on September 22, 2020 at 8:23 pm

    ஷார்ஜா: சென்னைக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் வீரர் சஞ்சு சாம்சன் அரைசதம் விளாசினார். 19 பந்துகளில் அரை சதம் விளாசினார் சஞ்சு சாம்சன்.

  • எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை சீராக உள்ளது: மகன் சரண் தகவல்
    on September 22, 2020 at 8:10 pm

    சென்னை: எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை சீராக உள்ளது என என அவரது மகன் சரண் தகவல் தெரிவித்துள்ளார். எக்மோ மற்றும் வெண்டிலேட்டர் மூலமாக சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவதற்காக அவர் ஆவலோடு காத்திருக்கிறார் எனவும் கூறினார்.

  • கோயம்பேடு காய்கறி அங்காடி சிறு மொத்த வியாபாரம் செய்ய அனுமதிக்கும் தேதியை அறிவிக்க வேண்டும்: கனி, மலர் வியாபாரி நலச்சங்கம் கோரிக்கை
    on September 22, 2020 at 8:01 pm

    சென்னை: கோயம்பேடு காய்கறி அங்காடி சிறு மொத்த வியாபாரம் செய்ய அனுமதிக்கும் தேதியை அறிவிக்க வேண்டும் என கனி, மலர் வியாபாரி நலச்சங்கம் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். வளாகம் மூடப்பட்ட நாள் முதல் இது நாள் வரை தற்காலிகமாக வியாபாரம் செய்து பிழைக்க இவர்களுக்கு எந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே சிறு, மொத்த வியாபாரிகளை காப்பாற்ற வியாபாரம் செய்ய அனுமதிக்கும் தேதியை உடனே அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தனர்.

  • ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் தொடர்பாக முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை
    on September 22, 2020 at 7:44 pm

    சென்னை: ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் தொடர்பாக முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை நடத்துகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்துகிறார்.

  • புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம்: மீன்வளத்துறை
    on September 22, 2020 at 7:27 pm

    சென்னை: புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது. கடலில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை மையம் அறிவுறுத்தலை தொடர்ந்து மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது.

  • ஐபிஎல்2020 டி20; ராஜஸ்தான் அணிக்கு எதிரான 4-வது போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சு தேர்வு
    on September 22, 2020 at 7:09 pm

    ஷார்ஜா: ராஜஸ்தான் அணிக்கு எதிரான 4-வது போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஷார்ஜாவில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து ராஜஸ்தான் அணி களமிறங்க உள்ளது. ஐபிஎல் தொடரின் தொடக்க சீசனில் கோப்பையை வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், 3முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இன்று களம் காண உள்ளன. இரு அணிகளும் இதுவரை 21 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. அதில் 14 ஆட்டங்களில் சென்னையும், 7 ஆட்டங்களில் ராஜஸ்தானும் வெற்றியை வசப்படுத்தியுள்ளன. கடைசியாக மோதிய 5 போட்டிகளில் 4ல் சென்னையும், ஒன்றில் ராஜஸ்தானும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • கொரோனா மரணங்களோடு அரசின் அலட்சிய மரணங்கள் அதிகமாக ஆகிவிட்டன: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
    on September 22, 2020 at 6:50 pm

    சென்னை: திருப்பூர் அரசு மருத்துவமனையில் மின்தடையால் மூச்சுத்திணறி 2 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்; 2 பேர் மரணத்துக்கு காரணம் மின்தடையால் ஜிசியூவில் ஆக்சிஜன் தடைப்பட்டதுதான் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாடியுள்ளார். இதைவிட கொடூரமான மரணங்கள் இருக்க முடியாது. கொரோனா மரணங்களோடு அரசின் அலட்சிய மரணங்கள் அதிகமாக ஆகிவிட்டன. மக்களை காக்க வேண்டிய அரசு, கொல்லும் அரசாக மாறிவிட்டதாகவும் குற்றம் சாடியுள்ளார்.

  • ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 7553 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
    on September 22, 2020 at 6:45 pm

    விஜயவாடா: ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 7553 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 6,39,302-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 51 உயிரிழந்துள்ள நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 5,461-ஆக அதிகரித்துள்ளது. ஆந்திராவில் இதுவரை கொரோனாவில் இருந்து 5,62,376 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 71,465 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  • வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 6,558 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி
    on September 22, 2020 at 6:14 pm

    சென்னை: வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 6,558 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த 924 பேர், உள்நாட்டு விமானங்களில் இருந்து வந்த 927 பேர், ரயில், பேருந்து, சொந்த வாகனங்கள் மூலம் வந்த 4707 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுவரை வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து ரயில், விமானம், பேருந்து மற்றும் இதர வாகனங்களில் தமிழகம் வந்தவர்களின் எண்ணிக்கை 10,08,780-ஆக அதிகரித்துள்ளது.

  • சென்னையில் மேலும் 989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
    on September 22, 2020 at 6:12 pm

    சென்னை: சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.57 லட்சத்தை கடந்தது. இந்நிலையில் சென்னையில் இன்று மட்டும் 989 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 157614-ஆக அதிகரித்துள்ளது.

  • தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5,337 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
    on September 22, 2020 at 6:11 pm

    சென்னை: தமிழகத்தில் மேலும் 5,337 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,52,674-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 76 பேர் பலியான நிலையில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,947-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 4,97,377- பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 46,350- பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  • சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனாவால் 95% நுரையீரல் பாதிப்பில் இருந்த ஆண் ஒருவர் குணமடைந்தார்
    on September 22, 2020 at 6:04 pm

    சென்னை: சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனாவால் 95% நுரையீரல் பாதிப்பில் இருந்த ஆண் ஒருவர் குணமடைந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட ஐயப்பன் குணமடைந்து வீடு திரும்பினார். ஓமந்தூரார் மருத்துவமனையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு 90 நாட்கள் தீவிர சிகிச்சையில் இருந்த பெண் ஒருவரும் குணமடைந்தார். ஜூன் மாதம் 23-ம் தேதி கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட முனியம்மாள் ஆஷா குணமடைந்து வீடு திரும்பினார்.

  • சென்னையில் தொழிலதிபரை கடத்தி ரூ.2 கோடி பணம் பறித்த வழக்கில் மேலும் 2 பேர் கைது
    on September 22, 2020 at 5:46 pm

    சென்னை: சென்னை முத்தியால்பேட்டையில் தொழிலதிபரை கடத்தி ரூ.2 கோடி பணம் பறித்த வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடத்தல் வழக்கில் ஏற்கனவே 8 பேர் கைது செய்யப்பட நிலையில், வேல்முருகன், ஆனந்த் ஆகியோரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • மகாராஷ்டிரா கட்டட விபத்தில் பலி எண்ணிக்கை 22 ஆக அதிகரிப்பு
    on September 22, 2020 at 5:36 pm

    மும்பை: மகாராஷ்டிரா கட்டட விபத்தில் பலி எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. மும்பை பிவண்டி பகுதியில் 3 மாடி கட்டடம்  இடிந்து விபத்துக்குள்ளானது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.

  • ஜி.எஸ்.டி. நிலுவை ரூ.12,250 கோடியை மத்திய அரசு உடனே வழங்கவேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார்
    on September 22, 2020 at 5:34 pm

    சென்னை: ஜி.எஸ்.டி. ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்தின் சார்பாக வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; தமிழ்நாட்டிற்குமத்திய அரசு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவை ரூ.12,250 கோடியை உடனே வழங்கவேண்டும் வலியுறுத்தப்பட்டது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூ. 9,000 கோடி செலவழித்த நிலையில் முதற்கட்டமாக ஜி.எஸ்.டி. நிலுவை தொகையை தர கேட்டுள்ளோம். இதுவரை இழப்பீடாக மத்திய அரசு ரூ.18.147 கோடி 14% அடிப்படையில் கொடுத்துள்ளது எனவும் கூறினார்.

 

 

admin
Author: admin

https://www.erodedistrict.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*