Login

Lost your password?
Don't have an account? Sign Up

Dinakaran World Tamil News

 • அங்கீகரிக்கப்பட்ட 4 தடுப்பூசிகளில் 2 ‘டோஸ்’ போட்டவருக்கு துபாயில் அனுமதி: இந்திய பயணிகளுக்கான தடை நீக்கம்
  on June 20, 2021 at 5:41 pm

  துபாய்: அங்கீகரிக்கப்பட்ட 4 தடுப்பூசிகளில் ஏதேனும் ஒரு தடுப்பூசியின் 2 டோஸ் போட்டவருக்கு துபாய் வர அனுமதிக்கப்படுகிறது. இந்தியா உள்பட 3 நாடுகளுக்கான தடைகள் நீக்கப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலையால், கடந்த ஏப்ரல் மாத பிற்பகுதியில் இருந்து இந்தியாவில் இருந்து ஐக்கிய அரசு அமீரகத்திற்கு இந்திய பயணிகள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டது. இப்போது, கொரோனா இரண்டாவது அலை பரவல் குறைந்துள்ளதால், இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்வதற்கான தடைகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.  இந்நிலையில், துபாய் நாட்டின் பேரிடர் முகமையின் உயர்மட்ட ஆலோசனை குழு வெளியிட்ட அறிக்கையின்படி, தென்னாப்பிரிக்கா, நைஜீரியா, இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து துபாய் வரும் பயணிகளுக்கான தடை தளர்த்தப்படுகிறது. மேலும், சில நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதால், வரும் 23ம் தேதி  முதல் அந்த நெறிமுறைகள் அமலுக்கு வரவுள்ளன. அதன்படி, இந்தியாவில் இருந்து வரும் பயணிகள், ஐக்கிய அரபு அமீரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட இரண்டு தடுப்பூசிகளைப் போட்டிருக்க வேண்டும். குடியிருப்பு விசா பெற்றுள்ள பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். ஐக்கிய அரபு எமிரேட் அரசாங்கம் சினோபார்ம், ஃபைசர்-பயோஎன்டெக், ஸ்பூட்னிக் -5,  ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா ஆகிய தடுப்பூசிகளுக்கு மட்டுமே அங்கீகாரம் கொடுத்துள்ளது. துபாய் புறப்படுவதற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்னர் இந்தியாவில் இருந்து வரும் பயணிகள், தங்களது பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட சான்றை வழங்க வேண்டும். அவர்கள் துபாய்க்கு வந்ததும் மற்றொரு பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்படுவர். தேவைப்பட்டால், தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்படும். இந்த விதிமுறைகள் ஐக்கிய அரபு எமிரேட் நாட்டினருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கியூஆர் குறியீடு மூலம் பி.சி.ஆர் சோதனை சான்றிதழ்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

 • உயரமான கட்டிடத்தில் இருந்து விழுந்து சீன அணு விஞ்ஞானி தற்கொலை: அணுமின் நிலைய விபத்துக்கு மத்தியில் பரபரப்பு
  on June 20, 2021 at 5:15 pm

  பீஜிங்: சீனாவில் புதிய அணுசக்தி நிலையத்தில் விபத்து ஏற்பட்ட நிலையில், அந்நாட்டு அணுசக்தி விஞ்ஞானி ஒருவர் உயரமான கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவில் செயல்படும் புதிய அணுமின் நிலையத்தில் கடந்தவாரம் அணுக்கதிர் வீச்சு கசிந்த விவகாரம் உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த அணுமின் நிலைய கட்டமைப்பில் பிரெஞ்சு மின் குழுவின் பங்களிப்பு சுமார் 30 சதவீதம் வரை உள்ளது. அணுக்கதிர் வீச்சு கசிவு குறித்து ஈ.டி.எஃப் விசாரணையை தொடங்கியுள்ளது. இருப்பினும், கசிவின் அளவு குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் கொடுக்கப்படவில்லை. அணுசக்தி விபத்தை மறைக்க சீனா முயற்சிக்கிறது என்று உலக நாடுகள் தெரிவித்து வருகின்றன. கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யாவின் செர்னோபில் நடந்த சம்பவத்தை போன்று, பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடுமோ என்ற அச்சம் சீன மக்களிடம் உள்ளது. இந்நிலையில், புதிய அணுசக்தி நிலையத்தில் விபத்து நடந்த 10 நாட்களுக்குப் பிறகு, அணுசக்தி விஞ்ஞானி ஜாங் ஜிஜியன் மர்மமாக இறந்துள்ளார். உயரமான கட்டிடத்தில் இருந்து விழுந்து அவர் தற்கொலை செய்து கொண்டு இறந்துவிட்டதாக என்று கூறப்படுகிறது. இவர், ஹார்பின் பொறியியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்றார். பேராசிரியர் ஜாங் இறந்த செய்தியை பல்கலைக்கழகத்தின் வெய்போ வெளியிடப்பட்டுள்ளது. ஜாங்கின் மரணம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தியதாகவும், நடந்த சம்பவம் கொலை அல்ல என்றும், தற்கொலையாக இருக்கலாம் கூறப்பட்டுள்ளது.மேலும் விபரங்களை பல்கலைக்கழக நிர்வாகம் வழங்கவில்லை. இவர், உலகிலளவில் பல விருதுகளைப் பெற்றுள்ளார். சீன ராணுவத்துடன் மிக நெருக்கமான முறையில் அரசுக்கு ஆதரவாக செயல்பட்டவர் ஆவார். இவர் பணியாற்றிய பல்கலைக்கழகம், கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட மென்பொருளை தடை செய்தது. இரு நாடுகளுக்கும் இடையே நடந்து வரும் வர்த்தக பதற்றங்களுக்கு மத்தியில், ஜாங் ஜிஜியனின் மரணம் சர்வதேச அளவில் பேசப்பட்டு வருகிறது.

 • உலகளவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 38.74 லட்சம் பேர் பலி... இந்தியாவில் தொடரும் மரண ஓலம்
  on June 20, 2021 at 7:42 am

  ஜெனீவா : உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 16.34 கோடியாக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17.89 கோடியை தாண்டி உள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 178,939,856 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 163,466,986 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 38 லட்சத்து 74  ஆயிரத்து 879 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 11,597,991 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 82,774  பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

 • கொரோனாவுக்கு உலக அளவில் 3,874,801 பேர் பலி
  on June 20, 2021 at 5:33 am

  டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38.74 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 3,874,801 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 178,936,640 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 163,463,447 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 82,931 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 • சுற்றி சுற்றி வரும் பறக்கும் தட்டுகள் ஏதோ நடக்க போகுது... அமெரிக்காவில் மக்கள் பீதி
  on June 20, 2021 at 12:36 am

  வாஷிங்டன்: அமெரிக்காவை மிரட்டி வரும் பறக்கும் தட்டுகள் குறித்து வரும் 25ம் தேதி பென்டகன் அறிக்கை வெளியிட உள்ள நிைலயில், ‘பறக்கும் தட்டுகள் அமெரிக்காவை மட்டும் குறிவைத்து சுற்றி சுற்றி வருவது ஏன்? இது தேச பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளது,’ என மூத்த எம்பி.க்கள் கவலை தெரிவித்துள்ளனர்.  வேற்றுகிரக வாசிகளான ஏலியன்களின் வாகனமாக கருதப்படும் பறக்கும் தட்டுகள் பற்றி காலம் காலமாக பல செய்திகள் கூறப்படுகிறது. அவை எதுவும் ஆதாரப்பூர்வமாக இருப்பதில்லை. ஆனாலும், ஏலியன்கள் இருக்கின்றன, பறக்கும் தட்டும் இருக்கிறது என அமெரிக்கா மட்டும் எப்போதும் பீதியை கிளப்பிக் கொண்டேதான் இருக்கிறது. சமீபத்தில், அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகமான பென்டகன், பறக்கும் தட்டு குறித்த வீடியோ ஒன்றை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. இதுவரை எந்த நாடும் இதுபோன்ற ஒரு மர்ம பறக்கும் பொருள் குறித்த வீடியோக்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டதில்லை. இந்த வீடியோவில் பறக்கும் தட்டு போன்ற ஒரு பொருள் கருப்பு நிறத்தில் வானில் செல்கிறது. முதலில் மெதுவாக செல்லும் அந்த தட்டு சில நிமிடங்களில் வேகமெடுத்து மறைந்து விடுகிறது.* முதல்முறையாக கடந்த 2004ல் சான்டீகோவில் அமெரிக்காவின் எப்-18 போர் விமானத்தில் இருந்து பறக்கும் தட்டின் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டன. * கடந்த ஏப்ரலில் இதே சான்டீகோ பகுதியில் கடற்படை போர்க்கப்பலில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தில் முக்கோண வடிவத்தில் ஒரு பறக்கும் தட்டு மின்னல் வேகத்தில் செல்வது சிக்கியுள்ளது.* அதோடு, அமெரிக்காவில் சமீபத்தில் மர்ம உலோக தூண் பல இடங்களில் தோன்றி பீதி கிளப்பியது.* அமெரிக்காவில் இவை பீதியை கிளப்பியுள்ளது. ஆண்டாண்டு காலமாக பென்டகன் பறக்கும் தட்டு பற்றி ஆய்வு செய்து வருகிறது. அதில் கண்டறியப்பட்ட பல அதிர்ச்சிகரமான தகவல்களை வரும் 25ம் தேதி அது வெளியிடுகிறது.இந்நிலையில், பென்டகனின் ஆய்வறிக்கையில் உள்ள தகவல்களை அறிந்த சில மூத்த எம்பிக்கள் பெரும் கவலை தெரிவித்துள்ளனர். எதிர்க்கட்சியான குடியரசு கட்சி எம்பி டிம் பர்செட் அளித்த பேட்டியில், ‘‘அமெரிக்காவை சுற்றி என்னவோ நடக்கிறது. நம்மால் சமாளிக்க முடியாத ஏதோ ஒன்று நடக்கப் போகிறது நிச்சயமாக தெரிகிறது,’’ என்றார். ஆளும் ஜனநாயக கட்சி எம்பி சீன் பேட்ரிக் மலோனே கூறுகையில், ‘‘வான்வழி மர்மப் பொருள்அமெரிக்க ராணுவத்திற்கும், தேச பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக உள்ளது. விண்வெளி பற்றி நாம் இன்னும் கொஞ்சம் அதிகமாக அறிய வேண்டும் என நினைக்கிறேன்’’ என்றார். இதுபோல் மேலும் சில எம்பிக்கள்  பென்டகன் கண்டுபிடித்துள்ள விஷயங்கள் உலகுக்கே விடுக்கும் எச்சரிக்கையாக இருக்கும் என கூறி உள்ளனர். எனவே, வரும் 25ம் தேதி பென்கடன் வெளியிடப் போகும் ஆய்வு முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.* ரஷ்யாவின் வேலையா?பறக்கும் தட்டு தொழில்நுட்பங்களுக்கு பின்னணியில் ரஷ்யா இருக்குமா? என்ற கேள்விக்கு பதிலளித்த எம்பி டிம் பர்செட், ‘‘இது அபத்தமானது. ரஷ்யாவிடம் பறக்கும் தட்டு தொழில்நுட்பம் இருந்தால், நிச்சயம் அது எங்களுக்கு சொந்தமாகத்தான் இருந்திருக்கும். எனவே, பறக்கும் தட்டு உண்மையாக இருந்தால் அது நம் விண்மீன் மண்டலத்திற்கு வெளியே இருக்க வேண்டும்,’’ என்றார்.

 • கனடாவில் மேலும் 2 இந்திய அமைச்சர்கள்
  on June 20, 2021 at 12:35 am

  டொரன்டோ: கனடாவில் உள்ள அன்டோரியா மாகாண அமைச்சரவையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த மேலும் இருவர் இடம் பெற்றுள்ளனர். இந்த மாகாணத்தின் அமைச்சரவையில் சமீபத்தில் செய்யப்பட்ட மாற்றத்தில், பதவியேற்ற 3 பேரில் 2 பேர் இந்தியா வம்சாவளியை சேர்ந்தவர்கள். 30 வயதாகும் சர்க்காரியாவுக்கு கருவூல இலாகாவும், 47 வயதாகும் பார்ம் கில்லுக்கு குடியுரிமை மற்றும் கலாசார துறையும் வழங்கப்பட்டுள்ளது. இருவருமே பஞ்சாப்பை சேர்ந்தவர்கள். ஏற்கனவே இந்த அமைச்சரவையில் இந்தியாவை சேர்ந்தவர் அமைச்சராக இருக்கிறார்.

 • நேபாளத்தில் மழை, வெள்ளம் 16 பேர் பலி : 22 பேர் மாயம்
  on June 20, 2021 at 12:35 am

  காத்மாண்டு: நேபாளத்தில் பருவமழை தீவிரமாக பெய்து வருவதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை பக்மதி மாகாணத்தில் உள்ள சிந்துபல் சவுக் மாவட்டத்தில் வெள்ளம் ஏற்பட்டு ஊருக்குள் புகுந்தது. இதில், அப்பகுதியை சேர்ந்த  பலர் அடித்து செல்லப்பட்டனர். அவர்களில்  16 பேரின் சடலங்கள் கிடைத்துள்ளன. காணாமல் போன மேலும் 22 பேரை ராணுவம் தேடி வருகிறது. முன்னதாக, மற்றொரு பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் 2 இந்தியர்கள், 3 சீனர்கள் உட்பட பல வெளிநாட்டினர் மூழ்கி இறந்தனர்.

 • மியான்மர் ராணுவ ஆட்சிக்கு எதிராக ஐநா.வில் தீர்மானம்: இந்தியா புறக்கணிப்பு
  on June 20, 2021 at 12:34 am

  நியூயார்க்: மியான்மரி்ல் கடந்த பிப்ரிவரியில் ஜனநாயக ரீதியான அரசை கவிழ்த்து விட்டு, புரட்சியின் மூலம் ராணுவம் ஆட்சியை பிடித்தது. இதை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்துகின்றனர். இவர்களை ஒடுக்குவதற்காக ராணுவம் நடத்திய தாக்குதலில் இதுவரையில் 900 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஆட்சியை ஒப்படைத்து விட்டு விலகும்படி மியான்மர் ராணுவத்தை வலியுறுத்தும் தீர்மானம், ஐநா.வில் நேற்று கொண்டு வரப்பட்டது. இதற்கு ஆதரவாக 119 நாடுகள் வாக்களித்தன. இந்தியா உட்பட 36 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன. பெலாரஸ் நாடு மட்டும் எதிர்த்து வாக்களித்தது. இது பற்றி ஐநா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி திருமூர்த்தி கூறுகையில், ‘‘ மியான்மரின் அண்டை நாடுகளுடன் ஆலோசனை நடத்தாமல் இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டதை இந்தியாவால் ஏற்க முடியாது. இந்த தீர்மானத்தால் இப்போதைக்கு எந்த பலனும் ஏற்படாது,’’ என்றார்.

 • நேட்டோ படைகள் வாபசால் அடக்க ஆளில்லை ஆப்கானிஸ்தானில் மீண்டும் தலிபான்கள் அட்டகாசம்: 27 மாவட்டங்களை கைப்பற்றி போர்க்கோலம்
  on June 20, 2021 at 12:33 am

  காபூல்: ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படை திரும்ப பெற தொடங்கிய பிறகு, அரசு கட்டுபாட்டில் இருந்த 27 மாவட்டங்களை தலிபான் தீவிரவாத அமைப்பு கைப்பற்றி உள்ளது. அமெரிக்காவில் கடந்த 2001ல் அல்கொய்தா தீவிரவாதிகள் விமானங்களை மோதி நடத்திய தாக்குதலில், நியூயார்க் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து, ஆப்கானிஸ்தானின் மீது படையெடுத்த அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படை, அங்கு ஆட்சி செய்து வந்த தலிபான் தீவிரவாத அமைப்பின் அரசை அகற்றியது. அங்கு, ஜனநாயக ஆட்சி ஏற்படுத்தப்பட்டது. ஆட்சியில் இருந்து நீக்கப்பட்ட தலிபான்களுக்கும் அரசு படைகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வந்தது. இதனால், கடந்த 20 ஆண்டுகளாக அரசுப் படைக்கு ஆதரவாக அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளில் போரிட்டு வந்தன. இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அமெரிக்க முயற்சி மேற்கொண்டது. சமீபத்தில் அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்ற ஜோ பைடன், வரும் செப்டம்பருக்குள் தனது படைகளை திரும்ப பெறுவதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து, நேட்டோ அமைப்பும் வீரர்களை திரும்ப பெறுவதாக அறிவித்தது. இதன்படி, கடந்த மாதம் 1ம் முதல் நேட்டோ படை வீரர்கள் திரும்ப பெறப்பட்டு வருகின்றனர். இதனால், நேட்டோ படைகள் இல்லாததால் தலிபான்களின் கை ஓங்கியுள்ளது. அவர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. அரசுப் படைகள், அரசு கட்டிடங்கள், பொதுமக்கள் மீதான தாக்குதல்களையும் வன்முறையையும் தீவிரப்படுத்தி இருக்கிறது. கடந்த சில வாரங்களில் மட்டுமே அரசு படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த 27 மாவட்டங்களை தலிபான்கள் தாக்குதல் நடத்தி கைப்பற்றி உள்ளனர். இதில், ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர்கள் ஏராளமாக கொல்லப்பட்டுள்ளனர். இந்த தொடர் தாக்குதல்கள் காரணமாக மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு தப்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

 • ஈரான் அதிபர் தேர்தலில் தலைமை நீதிபதி வெற்றி
  on June 20, 2021 at 12:33 am

  துபாய்: ஈரான் அதிபர் ஹசன் ரவுகானியின் பதவிக் காலம் சமீபத்தில் முடிந்ததை தொடர்ந்து, புதிய அதிபருக்கான தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இதில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இப்ராகிம் ரைசி, ரிசர்வ் வங்கி முன்னாள் தலைவர் அப்துல் நாசர் கமாட்டி, இஸ்லாமிய புரட்சிப் படை தலைவர் மொக்சின், இஸ்லாமிய புரட்சி முன்னணி தலைவர் அமீர் ஹொசேன் ஆகியோர் போட்டியிட்டனர். தேர்தல் முடிவு நேற்று அறிவிக்கப்பட்டது. இதில், ஈரான் தலைவர் ஹயதுல்லா அலி கொமேனியின் ஆதரவாளரான ரைசி வெற்றி பெற்றார்.

 • ஈரானின் புதிய அதிபராக உச்சநீதிமன்ற நீதிபதி இப்ராஹிம் ரைசி தேர்வானார் : 1988ல் ஆயிரக்கணக்கானோருக்கு தூக்கு தண்டனை விதித்தவர்!!
  on June 19, 2021 at 5:20 pm

  தெஹ்ரான் : ஈரான் நாட்டின் புதிய அதிபராக அந்நாட்டின் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி இப்ராஹிம் ரைசி தேர்வாகிறார். ஈரானின் அதிபர் ஹசன் ரூஹானியின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து புதிய அதிபருக்கான தேர்தல் நேற்று நடந்தது. அதிபர் பதவிக்கு உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி இப்ராஹிம் ரைசி, ஈரான் மைய வங்கியின் முன்னாள் தலைவர் அப்துல் உள்ளிட்ட 4 பேர் போட்டியிட்டனர். அதிபர் பதவிக்கான வாக்குப்பதிவு நேற்று நள்ளிரவு வரை நடைபெற்றது. ஈரானில் 5. 9 கோடி பேருக்கு வாக்குரிமை உள்ள போதும் 50% குறைவான வாக்குகளே பதிவாகின. அமெரிக்காவின் அணுஆயுத பரவல் தடை உத்தரவால் ஈரான் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. விலைவாசி உயர்வு, பேச்சுரிமைக்கு எதிரான அடக்குமுறை, தேர்தலில் போட்டியிட பெண்களுக்கு அனுமதி மறுப்பு உள்ளிட்ட காரணங்களால் வாக்குப்பதிவு சரிந்தது. இந்த நிலையில் அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள் காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் தொடக்கம் முதலே உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி  இப்ராஹிம் ரைசி முன்னிலை வகித்து வருகிறார்.தேர்தலில் ரைசி வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ள நிலையில், ஈரான் முன்னாள் அதிபர் அசன் ரூஹானி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஈரான் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியான இப்ராஹிம் ரைசி, அரசியல் சார்ந்த அனுபவம் இல்லாதவர். ஈரான் மதத் தலைவர் ஆதரவாளராக நீண்ட காலமாக செயல்பட்டு வருகிறார். ஈரான் அதிபர் பதவியை நெருங்கி உள்ள இப்ராஹிம் ரைசி, பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளானவர்.1988ம் ஆண்டு ஈரான் அரசுக்கு எதிராக ஏற்பட்ட புரட்சியின் போது, கைது செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான அரசியல் கைதிகளுக்கு மரண தண்டனை வழங்கியவர் இப்ராஹிம் ரைசி. இதனால் இப்ராஹிம் ரைசியை தடை செய்யப்பட்டோர் பட்டியலில் அமெரிக்கா சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

 • மியான்மரில் 900 பேர் பலி வாங்கிய ராணுவ ஆட்சிக்கு ஐ.நா. கடும் கண்டனம் : அந்நாட்டிற்கு ஆயுதம் அனுப்ப தடை விதித்தது
  on June 19, 2021 at 3:01 pm

  மியான்மர்: மியான்மர் ராணுவ ஆட்சிக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் சபை அந்நாட்டிற்கு ஆயுதம் அனுப்ப தடை விதித்துள்ளது. நியூயார்க் நகரில் கூடிய ஐ.நா.சபை கூட்டத்தில் மியான்மரில் கடந்த பிப்ரவரியில் ஜனநாயக ஆட்சியை கவிழ்த்துவிட்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது குறித்து உறுப்பு நாட்டு பிரதிநிதிகள் கவலை தெரிவித்தன. ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய மியான்மர் மக்கள் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதல் குறித்து அவர்கள் வேதனை தெரிவித்தனர்.ரோஹிங்கியா முஸ்லீம்கள் உயிருக்கு பயந்து அந்நாட்டில் இருந்து வங்கதேசத்தில் தஞ்சம் அடைந்தது தொடர்பான பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் ஐ.நாவுக்கான வங்கதேச பிரதிநிதி கேட்டுக் கொண்டார். ஐ.நாவுக்கான பல்வேறு நாட்டு பிரதிநிதிகள் பேசிய பிறகு மியான்மருக்கு எதிரான தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் மொத்தம் உள்ள 194 நாடுகளில் 119 நாட்டு பிரதிநிதிகள் ஆதரித்து வாக்களித்தனர். வாக்கெடுப்பை இந்தியா, சீனா உள்ளிட்ட 36 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. பெலாரஸ் மட்டும் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தது. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கடந்த ஆண்டு மியான்மரில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. தேசிய ஜனநாயக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.ஆனால் கடந்த பிப்ரவரி மாதம் மியான்மரில் ராணுவ புரட்சி வெடித்தது குறிப்பிடத்தக்கது.

 • புது முயற்சி!: ஸ்பெயினில் கடல் அலையில் சிக்கி உயிருக்கு போராடும் சுற்றுலாப் பயணிகளை காப்பாற்றும் பணியில் டிரோன் விமானங்கள்..!!
  on June 19, 2021 at 10:58 am

  மிஜாஸ்: ஸ்பெயின் நாட்டில் கடல் அலையில் சிக்கி உயிருக்கு போராடும் சுற்றுலாப் பயணிகளை காப்பாற்றும் பணியில் ஆளில்லா குட்டி விமானங்களான டிரோன்கள் ஈடுபடுத்தப்படுகின்றன. மெடிட்டெரேனியன் மற்றும் அட்லாண்டிக் ஆகிய சமுத்திர கரைகளில் அமைந்துள்ள நாடு ஸ்பெயின். அந்த நாட்டின் கடற்கரை பகுதிகளின் மொத்த நீளம் 8,000 கிலோ மீட்டராகும். இங்கு பொழுதை செலவிட வரும் மக்கள் ஆர்வம் மிகுதியால் கடலில் இறங்கி ஆபத்தில் சிக்கிக் கொள்வது அடிக்கடி ஏற்படும் நிகழ்வு. இவர்களை காப்பாற்றும் பணியில் அவசரகால மீட்பு படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர். கடல்நீரில் தத்தளிக்கும் ஒருவரை சென்றடைய அவர்களுக்கு சிறிது நேரம் தேவைப்படும் நிலையில், பல்வேறு தருணங்களில் உயிரிழப்பு தவிர்க்க முடியாததாகி வந்தது. இந்நிலையில், அலைகளில் சிக்கியவர்களை மூழ்காமல் காக்கும் பணியில் தற்போது டிரோன்கள் களமிறக்கப்பட்டுள்ளன. அவசர சூழல்களில் டிரோன்கள் கடலில் தத்தளிப்பவர்களுக்கு காற்றுப்பைகளை கொண்டு சேர்க்கிறது. இந்த பைகளின் உதவியுடன் அவர்கள் மூழ்காமல் நீரில் மிதப்பதால் சற்று தாமதமானாலும் பாதிக்கப்பட்டவர்கள் உயிருடன் மீட்டுவிட முடிகிறது. சுமார் 8 கிலோ எடையுள்ள இந்த அவசரகால டிரோன், கடலில் 8 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லக்கூடியதுடன், ஒரு முறை சார்ஜ் செய்துவிட்டால் 45 நிமிடம் தொடர்ச்சியாக பறக்கக்கூடியது. தனது வழியில் உள்ள படகுகள், கட்டுமரங்களை விட்டு விலகி செல்லக்கூடிய வகையில் டிரோனில் சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன. கரையில் இருந்து பேசினால் அதனை ஒலிக்கக்கூடிய வகையில் சக்தி வாய்ந்த ஸ்பீக்கர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. முதல் கட்டமாக மிலாக்கா பகுதியில் உள்ள 5 கடற்கரைகளில் அவசரகால உதவி பணிகளில் டிரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன. 

 • போயிங் 737 ஜெட்லைனரின் மேம்படுத்தப்பட்ட மேக்ஸ் 10 விமானம் அமெரிக்காவில் வெற்றிகரமாக சோதனை!: ஒரே நேரத்தில் 230 பேர் பயணிக்கலாம்..!!
  on June 19, 2021 at 10:38 am

  வாஷிங்டன்: பறக்கும் பிரம்மாண்டம் என்று அழைக்கப்படும் போயிங் 737 ஜெட்லைனர் விமானத்தில் மேம்படுத்தப்பட்ட மாடல் அமெரிக்காவில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது. போயிங் 737 மேக்ஸ் 8 மற்றும் 9 வகை விமானங்களை உலகில் உள்ள பல்வேறு விமான நிறுவனங்கள் பயன்படுத்தி வந்தன. இந்த வகை விமானங்கள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பலமுறை விபத்தில் சிக்கியதால் சர்ச்சை ஏற்பட்டது. 2018 மற்றும் 2019ம் ஆண்டு நிகழ்ந்த விபத்துகளில் 346 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து போயிங் 737 விமானங்களை பயன்படுத்த உலக அளவில் பல நிறுவனங்கள் தடை விதித்திருந்தன. இந்நிலையில் அமெரிக்க நிறுவனமான போயிங் மேம்படுத்தப்பட்ட மேக்ஸ் 10 ஜெட்லைனர் வகை பயணிகள் விமானத்தை தயாரித்துள்ளது. இதன் அதிகாரபூர்வ சோதனை நேற்று வாஷிங்டனில் உள்ள ரெண்டன் விமானதளத்தில் நடைபெற்றது. சுமார் 2 மணி நேரம் வானத்தில் பறந்த மேக்ஸ் 10 ஜெட்லைனர் விமானத்தின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கும் விதத்தில் இருப்பதாக போயிங் தெரிவித்துள்ளது. இந்த மேக்ஸ் 10 வகை  விமானத்தில் ஒரே நேரத்தில் 230 பேர் பயணிக்க முடியும். விமானத்தின் இயக்கம், கட்டுப்பாடுகள், பாதுகாப்பு என அனைத்தும் கணினி மென்பொருள் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. போயிங் 737 ஜெட்லைனர் விமானத்தில் மேம்படுத்தப்பட்ட மேக்ஸ் 10 மாடலின் செயல்பாடுகள் திருப்தி அளித்துள்ள நிலையில், அமெரிக்க விமான போக்குவரத்துத்துறை இதற்கு விரைவில் அனுமதி வழங்கவிருக்கிறது. ஏர்பஸ் A321 விமானங்களுக்கு போட்டியாக வடிவமைக்கப்பட்டுள்ள போயிங் 737 மேக்ஸ் 10 விமானங்கள் 2023ம் ஆண்டு முதல் வான்வெளியை ஆக்கிரமிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 • உலகளவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 38.66 லட்சம் பேர் பலி... இந்தியாவில் தொடரும் மரண ஓலம்
  on June 19, 2021 at 7:38 am

  ஜெனீவா : உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 16.31 கோடியாக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17.85 கோடியை தாண்டி உள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 178,588,455 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 161,825,185 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 38 லட்சத்து 66  ஆயிரத்து 662 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 11,616,410 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 82,230  பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

 • கொரோனாவுக்கு உலக அளவில் 3,866,616 பேர் பலி
  on June 19, 2021 at 6:30 am

  வாஷிங்டன்: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38.66 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 3,866,616 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 178,585,200 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 163,102,582 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 82,274 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 • 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆச்சர்யம் சீனாவின் இரும்பு கோட்டையில் ஓட்டை : துணை அமைச்சர் அமெரிக்காவுக்கு தப்பி ஓட்டம்
  on June 19, 2021 at 1:17 am

  வாஷிங்டன்: சீனாவின் இரும்புக் கோட்டையில் இருந்து பல்வேறு ரகசிய தகவல்களுடன் உளவுத்துறை துணை அமைச்சர் டோங் ஜிங்வெய் அமெரிக்காவுக்கு தப்பி ஓடியதாக தகவல் வெளியாகி உள்ளது. சீனாவில் உயர் பதவி வகிப்பவர் அந்நாட்டின் துல்லியமான கண்காணிப்பில் மண்ணை தூவிவிட்டு தப்பியிருக்கும் சம்பவம் 30 ஆண்டுக்குப்பின் நடந்துள்ளது. கம்யூனிச நாடான சீனாவில் அனைத்து சட்ட திட்டங்களும் கடுமையானதாகும். யாருக்கும், எந்த பதவியில் இருப்பவர்களுக்கும் தயவு தாட்சண்யம் காட்டப்படாது. தவறு செய்தவர்கள் எவராக இருந்தாலும் தண்டிக்கப்பட்டே தீருவார்கள். இந்தியாவில் கடன் வாங்கிய தொழிலதிபர்கள் கடனை திருப்பி செலுத்தாமல், சர்வ சாதாரணமாக நாட்டை விட்டு வெளிநாடு தப்பி சுதந்திரமாக வாழும் கதையெல்லாம் சீனாவிடம் நடக்காது. இரும்பு கோட்டையான சீனாவிலிருந்து துரும்பு கூட வெளியேற முடியாது. இந்நிலையில், சீனாவின் இரும்புக் கோட்டையிலேயே ஒருவர் ஓட்டை போட்டு தப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சீனாவின் உளவு அமைப்பான குவான்பூவில் பிறநாட்டு உளவாளிகளை கண்டுபிடிக்கும் பிரிவின் தலைவராக பணியாற்றியவர் டோங் ஜிங்வெய். கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரலில் இவர் உளவுத்துறையின் துணை அமைச்சராக பதவி ஏற்றார். ஜிங்வெய்யுடன் நெருக்கமாக இருந்த சில மூத்த அதிகாரிகள் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி 15 ஆண்டு சிறை தண்டனை பெற்றனர். இந்த சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் ஜிங்வெய் தனது மகளுடன் சீனாவிலிருந்து தப்பி ஓடி ஹாங்காங் வழியாக அமெரிக்காவில் தஞ்சம் அடைந்ததாக சில மீடியா தகவல்கள் கூறுகின்றன. இந்த செய்திகள் உண்மையாக இருந்தால் 1989 தியானன்மென் சதுக்க படுகொலை சம்பவத்திற்குப் பின் சீனாவிலிருந்து தப்பி ஓடிய 2வது மூத்த அதிகாரி ஜிங்வெய் ஆவார். அதுவும், இவர் அமைச்சர் என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு முன், சீன முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரியான ஹன் லியான்சயோ மட்டுமே சீனாவிலிருந்து தப்பி அமெரிக்காவில் தஞ்சமடைந்தார். அதன் பிறகு தப்பி இருப்பவர் ஜிங்வெய் மட்டுமே. ஜிங்வெய் உளவுத்துறையில் இருந்ததால் அவர் பல ரகசியங்களை அறிந்துள்ளார். எனவே, இவரை பற்றிய எல்லா தகவல்களையும் சீனா அழித்து விட்டது. ஜிங்வெய் புகைப்படம் கூட ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமாக உள்ளது. சீனாவின் தேடு பொறி இணையதளமான பைடுவில் இருந்து ஜிங்வெய் புகைப்படங்கள் ஒன்று விடாமல் நீக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, ஜிங்வெய்யை எப்படியும் சீனாவுக்கு கொண்டு வந்து விட சீனா காய் நகர்த்துகிறது. கடந்த மார்ச் மாதம் அலாஸ்காவில் நடந்த அமெரிக்கா, சீனா வெளியுறவு துறை அமைச்சர்கள் சந்திப்பில் இது குறித்து சீனா கோரிக்கை விடுத்தது. ஜிங்வெய்யை தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென சீன வெளியுறவுத்துறை விடுத்த கோரிக்கையை, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிலின்கென் மறுத்துள்ளார். இதனால் சீனா செய்தவறியாது உள்ளது. ஜிங்வெய்யால் என்னென்ன ரகசியங்கள் கசியப் போகிறதோ என்ற தர்மசங்கடத்தில் சீன அரசு உள்ளது.உகான் வைரஸ் ஆய்வக ரகசியத்தை கொடுத்தார்கொரோனா வைரஸ் வெளியானதாக சந்தேகிக்கப்படும் உகான் ஆய்வகம் பற்றி அனைத்து தகவல்களையும் அமெரிக்காவிடம் ஜிங்வெய்,  கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் ஆய்வு குறித்தும், சீன அரசின் உயிரி ஆயுதம் குறித்தும் பல ரகசிய தகவல்களை அவர் அமெரிக்காவிடம் கூறி உள்ளதாக தெரிகிறது. இந்த தகவல்கள் அனைத்தும் நம்பகத்தன்மையுடன் இருந்ததால்தான், கொரோனா தோற்றம் குறித்த அமெரிக்க அதிபர் பைடன் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் முந்தைய அதிபர் டிரம்ப், கொரோனா விவகாரத்தில் சீனாவை குற்றம்சாட்டி வந்தார். ஆனால், புதிய அதிபராக பதவியேற்ற பைடன் ஆரம்பத்தில் இதைப் பற்றி பேசாத நிலையில், சமீபத்தில் சீனா மீது குற்றம்சாட்டத் தொடங்கி உள்ளார். கொரோனா தோற்றம் குறித்து வெளிப்படையான மறுஆய்வுக்கு சீன அரசு ஒத்துழைக்க வேண்டுமென அவர் பகிரங்கமாக வலியுறுத்தி உள்ளார்.

 • கருப்பின அடிமைத்தன விடுதலை அமெரிக்காவில் ஜூன் 19ம் தேதி தேசிய விடுமுறையாக அறிவிப்பு
  on June 19, 2021 at 1:05 am

  வாஷிங்டன்: அமெரிக்காவில் அடிமைப்படுத்தப்பட்டு இருந்த கருப்பின மக்கள் 1862ம் ஆண்டு விடுதலைப் பிரகடனத்தின்படி, ஆபிரகாம் லிங்கன் அதிபராக இருந்த போது, 1865ம் ஆண்டு உள்நாட்டுப் போருக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டனர். முதன் முதலாக, கருப்பின விடுதலையின் நினைவாக ஜூன் 19ம் தேதி ‘ஜூனைட்டின்’ என்ற பெயரில் கடந்த 1980 முதல் டெக்சாசில் விடுமுறை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தை தேசிய விடுமுறை தினமாக அறிவிக்கும் மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டது. இதற்கான வாக்கெடுப்பில் 415 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். குடியரசு கட்சி உறுப்பினர்கள் 14 பேர் மட்டும் எதிராக வாக்களித்தனர். இதையடுத்து, இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு, அதிபர் பைடனின் கையெழுத்திற்காக அனுப்பி வைக்கப்பட்டது.இந்நிலையில், அதிபர் பைடன் இந்த மசோதாவில் நேற்று கையெழுத்திட்டார். அப்போது பேசிய அவர், ``ஜூனைட்டின் தேசிய விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டு  இருப்பது, கருப்பின விடுதலையை குறிப்பது மட்டுமல்ல. அவர்களுக்கு வரவிருக்கும் பிரகாசமான எதிர்கால வாக்குறுதியையும் குறிப்பதாகும்,’’ என்றார்.

 • இமயமலை பழங்குடி கிராமத்தில் விநோதம்; ஒரே பெண்ணை மணந்த 5 சகோதரர்கள்: பல குடும்பங்கள் இப்படிதான் வாழ்கிறது
  on June 18, 2021 at 9:39 pm

  ராஜு வர்மா: இமயமலையின் தொலைதூர கிராமமான ராஜு வர்மா பகுதியில் ராஜோ என்ற பழங்குடியின பெண்ணுக்கு இரண்டு மகன்களும், ஐந்து கணவர்களும் உள்ளனர். இவரது கணவர்கள் அனைவரும் சகோதரர்கள். ஒவ்வொரு இரவும் யாருடன் தூங்க வேண்டும் என்பது, ராஜோவின் விருப்பமாகும். ஐந்து கணவர்களான சந்த் ராம், பஜ்ஜு, கோபால், குடு, தினேஷ் ஆகியோர், மனைவி மற்றும் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். அவர்களிடையே எந்த குழப்பமோ, சண்டையோ இல்லை என்று உள்ளூர்வாசிகள் கூறுகிறார்கள். அதேபோல், சுனிதா தேவி என்பவருக்கு ரஞ்சித் சிங், சந்திர பிரகாஷ் என்று இரண்டு கணவர்கள் உள்ளனர். இதுகுறித்து சுனிதா தேவி கூறுகையில், ‘நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. இரண்டு கணவர்களில் ஒருவர் எனக்கு சமைக்க உதவுகிறார். மற்றொருவர் வெளியிடங்களுக்கு சென்று வேலை செய்து வருகிறார்’என்றார். மேலும் புத்த தேவி என்ற பெண் இரண்டு சகோதரர்களை மணந்துள்ளார். இந்த பெண்ணுக்கு இப்போது சுமார் 70 வயது இருக்கும். அவரது கணவர்களில் ஒருவர் இறந்துவிட்டார். ஒருவருடன் மட்டும் வாழ்ந்து வருகிறார். இதுகுறித்து புத்த தேவி கூறுகையில், ‘எங்களின் பாரம்பரிய முறைப்படி பல நூற்றாண்டுகளாக பல ஆண்களை திருமணம் செய்து கொள்ளும் பழக்கம் உள்ளது. பெரும்பாலும் சகோரர்களாக உள்ள ஆண்களையே ஒரு பெண் திருமணம் செய்து கொள்வார். அவர்களின் நிலம் உள்ளிட்ட சொத்துகள் தனித்தனியாக பிரித்து கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படாது என்பதால், அதனை அடுத்த தலைமுறைக்கு அப்படியே விட்டுவிட முடியும். இதேபோன்று பல குடும்பங்கள் எங்கள் கிராமத்தில் உள்ளன. அனைவரும் சந்தோஷமாக வாழ்கிறோம்’ என்றார்.

 • பல கோடி ரூபாய் சொத்தை அபகரிக்க பிரபல நடிகையின் தாய் கடத்தல்: பாகிஸ்தான் பிரதமரிடம் முறையீடு
  on June 18, 2021 at 9:25 pm

  லாகூர்: பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அபகரித்து கொண்டதாக கூறி, பிரபல நடிகை மீரா பாகிஸ்தான் பிரதமரிடம் புகார் மனு அளித்துள்ளார். இந்திய சினிமாவில் நடித்தவரும், பிரபல பாகிஸ்தான் நடிகையுமான மீரா, சமீபத்தில் லாகூர் கேபிடல் சிட்டி போலீஸ் அலுவலகத்தில் (சிசிபிஓ) புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், ‘லாகூரில் 200 மில்லியன் பாகிஸ்தான் ரூபாய் (இந்திய ரூபாய் ரூ.10 கோடி) மதிப்புள்ள எனது குடும்ப சொத்தை மியான் ஷாஹித் மெஹ்மூத் என்பவர் சட்ட விரோதமாக அபகரிக்க முயற்சிக்கிறார். நிலத்தை குத்தகைக்கு வாங்கிய அவர் தற்போது அதனை தராமல் கொலை மிரட்டல் விடுக்கிறார். என் தாய் ஷப்கத் சஹ்ரா புகாரியை  மியான் ஷாஹித் மெஹ்மூத் கடத்தி சென்றுவிட்டார். என்னுடைய முழு வாழ்க்கையையும் இந்த நாட்டிற்காக அர்ப்பணித்துள்ளேன். எங்களுடைய சொத்து அபகரிப்பு விவகாரங்கள் பிரதமர் இம்ரான்கானுக்கும் புகார் அனுப்பி உள்ளேன். அரசின் பதிலுக்காக காத்திருக்கிறேன்’ என்றார். இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு மியான் ஷாஹித் மெஹ்மூத், லாகூர் கேபிடல் சிட்டி போலீஸ் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், ‘மீராவின் தாய் ஷப்கத் சஹ்ரா புகாரி மற்றும் அவரது சகோதரர் அஹ்சன் ஆகியோர் என்னை ஏமாற்றி வருகின்றனர்.மீராவின் தாயிடமிருந்து நான் விலைக்கு சொத்தை வாங்கினேன். அதற்கான பணத்தையும் கொடுத்தேன். இருப்பினும், சொத்து ஆவணங்களை பதிவு செய்து தரக்கோரினால், அதற்கு ஒத்துழைப்பு கொடுக்க மறுக்கின்றனர். அவரின் தாயை நான் கடத்தவில்லை’ என்றார். இருதரப்பு புகார்களையும் பெற்றுள்ள போலீசார், இவ்விகாரம் தொடர்பாக தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தினகரன் உலக செய்திகள் | தினகரன் உலக செய்திகள் live | தினகரன் உலக செய்திகள் pdf | தினகரன் உலக செய்திகள் today

admin
Author: admin

https://www.erodedistrict.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*